Salma Amjath Khan

Romance

4.5  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 14

நீயே என் ஜீவனடி 14

4 mins
453



'ஆனந்தி, ஒருவேளை அந்த அரவிந்த் நல்லவனா இருப்பானோ.. ...

அந்த சிதம்பரத்தால தான் நம்மள கல்யாணம் பண்ணினானோ...

அப்புறம் ஏன் எனக்கு அவன் மேல ஒரு டவுட்டு இருந்துட்டே இருக்கு. எல்லார்கிட்டயும் வொய்ல்ட் டா பிகேவ் பண்றான்.

ஆனா என்கிட்ட மட்டும் ஏன் சாஃப்டா இருக்கான்.

இந்த அடியாட்கள் கூட என்கிட்ட நல்லவிதமா தான் பேசுறாங்க. என்ன..... அப்பப்போ கலாய்க்கிறாங்க. அவங்கள குறையும் சொல்ல முடியாது.

நாமளும் ஏதாவது லூசுத்தனமா பண்ணி வச்சுர்ரோம்.

உண்மையிலேயே இவங்க எல்லோரும் நல்லவங்க தானா...?

அந்த சிதம்பரத்தால என் உயிருக்கு என்ன ஆபத்து இருக்கும். இதுக்கு முன்ன அவர நான் பார்த்தது கூட இல்லை.

எதுக்காக அவர் என்னை கொல்ல பார்க்கணும். இது எல்லாம் எப்படி அரவிந்த்க்கு தெரியும்.

  சிதம்பரத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்.... அரவிந்த்கும் எனக்கும் என்ன சம்பந்தம்.

எதுக்காக சிதம்பரம் என்ன கொல்ல நினைக்கனும். எதுக்காக என்னை அரவிந்த் காப்பாத்த நினைக்கனும்.

எங்க மூணு பேர்க்கும் ஏதாவது கனெக்சன் இருக்கா.... அப்படி ஏதாவது இருந்தால் எனக்கு எப்படி தெரியாமல் இருக்கும்.

நம்ம கிட்ட இருக்கிற ஏதோ ஒன்னு அவங்க ரெண்டு பேருக்கும் தேவைப்படுதுன்னு நினைக்கிறேன்.

ஆனா அப்படி நம்மகிட்ட எதுவும் இல்லையே....

அரவிந்த் சொல்ற எல்லாமே உண்மைதானா.... அவனை எப்படி நம்பறது....

ஆனா அவன பார்த்தா பொய் சொல்ற மாதிரி தெரியல. சிதம்பரம் நடந்துகிறத வச்சு பார்க்கும்போது அரவிந்த் சொல்றது உண்மையா இருக்கும்னு தான் தோணுது..

ஆனால் இதுக்கு பின்னாடி என்ன காரணம் இருக்கும். அரவிந்த் கிட்ட கேட்டா சொல்லுவானா. அதை கேக்காதேன்னு வேற சொல்லிட்டான்.

இந்த மணி, சேகர் கிட்ட கேட்டா ஏதாவது சொல்வாங்களா.... அவங்களுக்கு முதல தெரிந்திருக்குமா ....

ஐயோ.... அரவிந்த் வேற ரொம்ப குழப்பிட்டு போயிட்டான்.

பிட்டு அடிக்கிறத விட வேற எதை பத்தியும் இப்படி யோசித்ததே இல்லை. என் மூளைக்கே வேலை வைச்சுட்டானே.... ' என யோசித்துக் கொண்டிருக்கும் போது அறையின் வெளியில் யாரோ இருப்பது போன்று தோன்ற,

" யாரு...?" என குரல் கொடுத்தாள்.

அவள் குரல் கேட்டு உள்ளே வந்தான், குணா.

" நீயா.....? நீ .... இங்க என்ன பண்ற...."

" இல்ல அண்ணி இந்த பக்கம் போய்கிட்டு இருந்தேன். உங்களுக்கு வேற உடம்புக்கு முடியலையா, அதான் இப்போ எப்படி இருக்குன்னு கேட்கலாமா வேணாம னு யோசிச்சுட்டு இருந்தேன்."

" யோசிச்சிட்டு இருந்தியா...?"

"அது... வந்து.... அண்ணி... எங்களுக்கு தெரியும் உங்களுக்கு எங்க யாரையும் பிடிக்காதுன்னு. அதான் நான் ஏதாவது கேட்க, நீங்க கோபப்பட்டு திரும்ப உடம்புக்கு முடியாமல் போய்ருமோன்னு பயந்து தான்...."

'என்னடா விசித்திரமா இருக்கு. இந்த வீட்டு டிரைவர் வரை நம்மள பத்தி யோசிக்கிறான்.' என நினைத்தவள் ,

"எனக்கும் ஏதுமில்லை. நீ போ.." என்றாள், தன்னை விட பெரியவனை ஒருமையில் கூப்பிடுவதை நினைத்து வருந்தியவாறே.

" சரி அண்ணி. ஏதாவது வேணும்னா சொல்லுங்க. நான் கீழ தான் இருப்பேன்." என நகர்ந்தவனை நிறுத்தினாள்.

" ஒரு நிமிஷம் .... உங்க பேரு குணா தானே.... " என கேட்க, சிரித்தவாறு ஆமாம் என்று தலையசைத்தான்.

" அது .... எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது. ஒரு டாப்லெட் கிடைக்குமா...." என கேட்க,

" இதோ இப்போ கொண்டு வரேன் அண்ணி." என உற்சாகத்துடன் ஓடியவனை கண்டு குழம்பினாள்.

'டாப்லெட் தானே கேட்டேன். அதுக்கு ஏன் இப்படி ஓடுறான். உண்மையிலேயே பாசக்கார பய புள்ளைங்களா தான் இருக்காங்க‌.

இருந்தாலும் இது பாசமா வேசமான்னு தெரியுற வர உசாராத்தான் இருக்கணும்.'

" ஆனந்தி.. " என குரல் கேட்க வாசலில் இருந்த அரவிந்தை பார்த்தாள்.

"உள்ள வரலாமா...." என  தயங்கியபடி கேட்க தலையை மட்டும் அசைத்தாள்.

தன்னை பார்க்காமல் தலைகுனிந்தபடி இருப்பவளிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என தயங்கினான்.

" குணா .... சொன்னான் ... உனக்கு தலை வலிக்குதுன்னு. நான் டாக்டர வர சொல்லி இருக்கேன். இப்ப வந்துடுவார்."

" இல்ல .... வேணாம். நான் நல்லாதான் இருக்கேன். அது.... கொஞ்சம் .... அழுததால லைட்டா... தலைவலி அவ்வளவு தான். மாத்திரை போட்டு தூங்குனா சரியாயிடும்."

"நெஜமாதான் சொல்றியா..." என கேட்டவன் கண்களை பார்த்தவள்,

' எனக்கு புரியுது. இந்த கண்கள் தெரியுற வலி வேசமில்ல. பாசம்னு. அப்புறம் ஏன்.....' தனக்குள்ளே வைத்துக்கொள்ளாமல் கேட்டாள்.

" எதுக்கு இப்படி நடந்துக்கிறீங்க."

" என்ன...?"

" எதுக்காக? எனக்காக இவ்வளவு கேர் பண்றீங்க. இத்தனைக்கும் நான் உங்கள ஹர்ட் பண்ணும்போது."

அவள் கண்களை நோக்க , அவன் கண்களை அந்த கண்கள் ஈர்த்துக் கொண்டன.

" ஏன்னா நான் புருஷன்."

" இது மட்டும்தான் காரணமா..? இல்ல, வேற ஏதும் காரணம் இருக்கா....?" என கேட்டவளின் கண்கள் இன்னும் அரவிந்தின் கண்களை ஆராய்ந்து கொண்டிருந்தன.

"வேற என்ன காரணம் இருக்கணும்னு நினைக்கிற."

" ஒருவேளை நீங்க சொன்னது தான் காரணம்னா... இதுக்கு முன்னாடி சிதம்பரத்துட்ட இருந்து என்னை எதுக்கு காப்பாத்துனீங்க."அவள் கண்கள் அவன் கண்களை துளைக்க, பார்வையை திருப்பிக் கொண்டான்.

" நீ ....இல்ல .....இங்க பாரு ஆனந்தி. இதை பத்தி எதையும் கேட்காதே . நானே நேரம் வரும்போது சொல்றேன்.

அதுவரை இதை பத்தி யோசிக்காத. நான் டாக்டர் கிட்ட கேட்டு உனக்கு மாத்திரை வாங்கிட்டு வரேன். அதுவரை நீ கொஞ்சம் நேரம் தூங்கு." என்றவன் அறையை விட்டு வெளியேறினான்.

'இவன் ஏன் எவ்வளவு பதறுறான். அப்படி என்னவாயிருக்கும் .

அவன் என்ன சொல்றது நாமலே கண்டுபிடிப்போம். எத்தனை சி ஐ டி எபிசோட் பார்த்திருப்போம்.

இத கூட கண்டுபிடிக்கலன்னா அப்புறம் எப்படி நான் தயா ஃபேனா இருக்கமுடியும்.

கண்டுபிடிக்கிறேன்.

உண்மையிலேயே இவன் நல்லவன்தான். பாசமா இருக்கான். ஆனா அதுக்காகலாம் இவனா ஏத்துக்க முடியாது.

இருந்தாலும் அவனுக்கு ஒரு சான்ஸ் கொடுப்போமா...

அது எப்படி கொடுக்க முடியும். அவனை எப்படி ....

சரி ...சான்ஸ் கொடுக்க வேண்டாம். ஆனா அவனோட மிங்கில் ஆனா தானே என்னால உண்மையை கண்டுபிடிக்க முடியும்.

உண்மையை கண்டுபிடிக்கனுனா அவன் கூட பேசித்தான் ஆகணும்.

என்ன பண்ணலாம்.... யோசி... யோசி.... நல்ல யோசி ஆனந்தி...'

யோசித்தவள் தூங்கியேவிட்டாள்.

அவளுக்காக மருந்தினை கொண்டு வந்தவன் அவள் நிம்மதியுடன் தூங்குவதை பார்த்து எழுப்ப மனமில்லாமல் மருந்தையும் தண்ணீரையும் கட்டிலின் அருகே இருந்த டேபிளில் வைத்துவிட்டு, ஸ்டூலில் அமர்ந்தான்.

' எனக்கு இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு, ஆனந்தி. இவ்வளவு நாள் நீ தூங்குறத பார்க்கும்போது எல்லாம் என் கண்ணுக்கு முதல்ல தெரியுறது உன் கன்னத்துல இருக்குற கண்ணீர் தடம் தான்.

ஆனா இன்னைக்கு உன் முகத்தில இந்த சின்ன சிர்ப்பு இது போதும்.

எனக்கு நம்பிக்கை இருக்கு. எப்படியும் நீ எனக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பன்னு.

நம்ம காதல், நம்ம தாலி, நம்மல சேர்த்து வைக்கும்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.

இதையெல்லாம் நீ புரிஞ்சுக்கிறது ரொம்ப தூரம் இல்லைன்னும் எனக்கு தெரியும்.

நீ எனக்கு வேணும் ஆனந்தி. எப்பவும் ..... என் பக்கத்திலேயே. என் கைய புடுச்சுட்டு.... என் மடியில படுத்துட்டு...

நினைக்கும்போதே எப்படி இருக்குன்னு தெரியுமா ஆனந்தி....

நீ மட்டும் இப்போ அனுமதி கொடுத்தா இறுக்கி அணைச்சு ஒரு உம்மா குடுத்திருப்பேன்.'

அவன் பேசப்பேச தூக்கத்தில் அவள் முகம் தூக்கத்திலும் சிவந்தது, அவளது கன்னங்கள்.

' அரவிந்த் இதுக்கு மேல நீங்க இருந்தா நீ ரவுடி மட்டுமில்ல, பொறுக்கியும் ஆயிடுவ. ஒழுங்கா இங்கிருந்து ஓடிரு. இல்லைன்னா அவ்வளவுதான்...' என உள்ளிருந்து மனசாட்சி எச்சரிக்கை செய்ய, அங்கிருந்து கிளம்புவது தான் மேல் என அங்கிருந்து நகர்ந்தான்.

💖💖💖💖💖


Rate this content
Log in

Similar tamil story from Romance