Salma Amjath Khan

Romance

4.6  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 16

நீயே என் ஜீவனடி 16

7 mins
272


 

💖💖💖💖💖

"என்னடா அப்படி பார்க்கிற...?"

" ஏதாவது வேணுமான்னு கேட்டதுக்கு இப்படி எல்லாத்தையும் கையில கொடுப்பீங்கன்னு எதிர்பார்க்கல அண்ணி..." என்றான், தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு.

" எனக்காக இதக்கூட செய்ய மாட்டியா...?"

" ஐயோ... அப்படி எல்லாம் இல்ல அண்ணி. நீங்க சொன்னா இன்னொரு மூட வெங்காயத்தை வாங்கிட்டு வந்து கூட வெட்டி தருவேன், அண்ணி."

" அதெல்லாம் வேணாம். நீ இருக்கிறத வெட்டிக் கொடு. அதுவே போதும்."

" இவ்வளவு வெட்டுனால தான் சமைக்க முடியுமா , அண்ணி." தன் சந்தேகத்தை கேட்டான், மணி.

" சமையல் நா சும்மான்னு நினைச்சியா ஒழுங்கா வெட்டுடா."

" மயிலம்மா மட்டும் எப்படி அண்ணி தனியா எல்லாத்தையும் வெட்டி சமைக்கிறாங்க."

" உங்கள மாதிரி தடிமாடுகளா இருந்தா என்ன பண்ண முடியும். உங்களுக்கு பயந்துதான் தனி ஆளா கஷ்டப்படுறாங்க."

" நீங்க எங்கள ரொம்ப புகழ்றீங்கன்னு நினைக்கிறேன் அண்ணி."

" புகழ்ந்துட்டாலும். ஒழுங்கா வாய மூடிட்டு வெட்டுங்கடா. ஏய் நீ என்ன பண்ற....?"

"அண்ணி, இஞ்சி சுரண்டுரேன்."

" உன் பேர் என்ன..?"

" முத்து"

" பார்த்து. இஞ்சிக்கு வலிக்க போது. மனுசங்கள பத்தி மட்டும் நினைச்சு கவலைப் படாதீங்க. எவ்வளோ பேர  ரத்தம் வர்ற மாதிரி அடிச்சிருப்ப. இஞ்சிய மனுசனா நினைச்சுக்கோ. அப்பதான் நல்லா சுரண்டுவ." என கடுகு போல் வெடிக்க, எல்லோரும் சிரித்தனர்.

" ஓய் .... என்னடா இளிப்பு. நான் என்ன காமெடியா பண்ணிட்டு இருக்கேன். இப்ப நா போய்ட்டு வரதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சு ரெடியா இருக்கணும்.

இல்லன்னா நீங்க எல்லாம் சேர்ந்து என்னை கிண்டல் பண்றீங்கன்னு உங்க அண்ணன்கிட்ட போட்டுக் கொடுத்திடுவேன்." என மிரட்டி விட்டு நகர்ந்தாள்,ஆனந்தி.

இன்று தன் கணவனுக்காக தன் கையால் பிரியாணி செய்ய வேண்டுமென மயில் அம்மாவிடம் கேட்க, அவரோ அரவிந்தை நினைத்து பயந்து முடியாது என சொல்ல, கெஞ்சி கதறி கூத்தாடி அனுமதி வாங்கி விட்டாள்.

அவள் பிரியாணி செய்வதற்காக வீட்டில் அங்கே இங்கே என நின்றிருந்த அனைத்து அடியாட்களையும் ஒன்று திரட்டி வெங்காயம் இஞ்சி பூண்டு மிளகாய் புதினா தேவையான எல்லாவற்றையும் எடுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு வேலையை கொடுத்தாள்.

கணவனுக்காக செய்யும் முதல் உணவு என்பதால் சிறிது பதட்டமாகவே இருந்தாள்.

(( ஒரு நிமிஷமும் இதெல்லாம் நம்பற மாதிரியே இல்லையே. ஏதாவது பிளான் பண்றாளோ... வாங்க.... எதுக்கும் ஆனந்திய அமைதியா பாலோ பண்ணுவோம்.))

அவர்களிடமிருந்து விலகி கூடத்திற்கு வந்தவள்,

'ஸ்ப்பாபாஆஆஆ...எப்படியோ ஆளுக்கு ஒரு வேளை கொடுத்துட்டோம்.

இன்னும் ஒரு மணி நேரத்துக்கு யாரும் அங்கே இருந்து நகர மாட்டாங்க. அதுக்குள்ள நாம நம்ம சிஐடி வேலையை முடிச்சாகனும்.

கடவுளே எப்படியாவது உண்மைய இன்னைக்கு எனக்கு காட்டிருப்பா... அப்படி காட்டிட்டா அரவிந்த்க்கு உன் பேரை சொல்லி மொட்ட போட்டுர்ரேன். பத்தலேனா சொல்லிரு. இந்த மணி சேகர் குணா எல்லாருக்கும் சேர்த்து மொட்ட போட்டுர்ரேன்.

இன்னைக்கு எப்படியாவது எல்லா உண்மையும் எனக்கு தெரிஞ்சுரனும். ப்ளீஸ்... ஏன்னா இதுக்காகலாம் டெய்லி இந்த பக்கிங்களுக்கு என்னால பிரியாணி செஞ்சு போட முடியாது பா ... ப்ளீஸ்.... consider மீ' என தன் வேண்டுதலை முடித்துவிட்டு தேடுதலை ஆரம்பித்தாள்.

ஒவ்வொரு அறையாக சென்று ஏதாவது கிடைக்குமா என்று அலசி ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

மேசை கட்டில் கப்போர்ட் என அனைத்தையும் அலசினாள். பாத்ரூமை கூட விடவில்லை.

ஆனால் அவளுக்கு எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை.

சோர்ந்து போனவளின் கண்ணில் பட்டது , அந்த அறை. அந்த கதவின் அருகில் சென்றவள் அதைத் திறக்க முயற்சித்தாள்.

ஆனால் முடியவில்லை. அது பூட்டி இருப்பதை உணர்ந்தாள். எப்படி திறப்பது என யோசித்தவளுக்கு ஞாபகம் வந்தது தன் தலையிலிருந்த ஹேர் பின்.

ஹேர் பின்னை கையில் எடுத்தவள் கதவை திறக்க முயற்சித்தாள்.

' நான்தான் லூசு . அந்த ராம் அன்னைக்கே சொன்னா. தமிழ் படம் பார்த்து கெட்டுப் போகாதன்னு. நான் தான் கேட்கல. அவங்க பின்ன வச்சு ஆட்டுனா மட்டும் கதவு திறக்குது.

நானும் எத்தனை தடவ தான் ஆட்டுறது. திறக்க மாட்டேங்குது.

 தயா இருந்தா கூட இடிச்சு கதவ திறக்கலாம். ஆனா தயா சூட்டிங்கில பிஸியாக இருப்பாரே... மிஸ் யூ தயா...' என்றாள் நொந்தபடி.

" இங்க என்னத்தா பண்ற...?" மயில் அம்மாவின் குரல் கேட்டு திடுக்கிட்டாள்.

" ஒன்னும் இல்ல , மயிலம்மா. இந்த பக்கமா வந்தேனா. இந்த ரூம் வெளியே இருந்து பார்க்க நல்லா இருந்ததா. அதான் என்ன ரூமா இருக்கும்ன்னு பாத்துட்டு இருக்கேன்."

" என்னத்தா இப்படி சொல்லிட்ட. இது அரவிந்த் தம்பியோட ரூம்மூ."

" ஓ .... அப்படியா .... எனக்கு எப்படி தெரியும். அவர்தான் ஒரு தடவை கூட அவர் ரூமை காட்டினது இல்லையே..." என்றாள் யோசித்தவாறு‌.

'எதுக்கு பூட்டி வச்சிருக்கான். ஒருவேளை அவனோட ரூமுக்குள்ள இருந்து ஏதாவது குழு கிடைக்குமோ. கேட்டுப் பார்ப்போம்.'

"நான் இந்த ரூம்ம பார்க்கலாமா...?"

"என்னத்தா இப்படி கேட்டுட்ட. உனக்கில்லாத உரிமையாத்தா. பார்க்கலாம் தாயி.

ஆனா, சாவி அரவிந்த் தம்பி கிட்டல இருக்கு. நீ வேணா தம்பி வந்ததும் கேட்டு பாரு."

" சரி மயிலம்மா..." என யோசனையுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

' கன்ஃபார்மா ஏதோ ஒன்னு அவன் ரூம்ல இருக்கு. அதனால தான் இப்படி பூட்டி வைச்சுருக்கான். நான் கண்டு பிடிக்காமல் விடமாட்டேன்.'

" அண்ணி நாங்க முடிச்சிட்டோம்." என கூற, மணியை பார்த்தாள்.

' இவன் கிட்ட ஏதாவது போட்டு வாங்குவோமா....'

" என்ன யோசிக்கிறீங்க.... "

" ஒன்னும் இல்ல ." என கூறி அவள் மணியை மட்டும் உதவிக்கு அழைத்துக் கொண்டு சமையலறைக்குள் புகுந்தாள்.

ஒருபுறம் சமையலை செய்து கொண்டிருந்தாலும் மறுபுறம் மணியிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என யோசித்துக் கொண்டிருந்தாள்.

" மணி...." என்றால் சிறிது தயங்கியவாறே.

" சொல்லுங்க அண்ணி ..." என்று கேட்க, தைரியம் வந்தவள் போல் பேச்சை வளர்த்தாள்.

" உனக்கு அரவிந்த எப்படி தெரியும்."

" நான் அண்ணன ஜெயில்ல தான் அண்ணி முதல்முறையா பார்த்தேன்." என்றவனை ஏற இறங்கப் பார்த்தவள், ' நல்ல மீட்டிங் ப்ளேஸ்' என நினைத்து,

" நீயும் ஜெயிலுக்கு போய் வந்திருக்கியா...." என்றாள்.

" என்ன அண்ணி இப்படி கேட்டுட்டீங்க. எத்தனை தடவை போய்ட்டு வந்து இருக்கேன் தெரியுமா..." என காலரை தூக்கி விட,

" ரொம்ப தாண்டா பெருமை. போனது ஜெயிலு. இதுல யூகே போன மாதிரி சீன் வேற."

"நான் என்ன அண்ணி பண்ணட்டும். எல்லாம் என் விதி." என்றவனை பார்த்து,

" அப்படி என்னப்பா விதி...." என நக்கலாக கேட்டாள், ஆனந்தி.

"நான் ஒரு ஏழை குடும்பத்தில பிறந்திருந்தாலும் ரொம்ப சந்தோஷமாக இருந்தேன், அண்ணி.

அம்மா, அப்பா, நான்.

அப்பா சம்பாதிக்கிற காசெல்லாம் அவருக்கே பத்தாது. அம்மா வேலைக்கு போய்தான் என்னை பார்த்துக்கிட்டாங்க.

எனக்கு 16 வயசு இருக்கும் போது என்கிட்ட அப்பா என் கிட்ட பணம் கொடுத்து அடிக்கடி படத்துக்கு போயிட்டு வர சொல்லுவாரு.

எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும். நான் வளர்றது தெரிஞ்சு, அவ்வளவு கஷ்டத்தையும் என்னை படத்துக்கு அனுப்புராறேன்னு.

அப்படித்தான் ஒரு நாள் நைட்டு என்கிட்ட பணத்தை கொடுத்து பக்கத்து தியேட்டர்ல புது படம் போட்டு இருக்காங்க. எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க.

நீயும் பாத்துட்டு வான்னு. சரின்னு நானும் போனேன்.

ஆனால் எனக்கு டிக்கெட் எதுவும் கிடைக்கல. அதான் திரும்ப வந்துட்டேன்.

அப்போ தான் அம்மா அழுதுட்டே அப்பா கூட சண்டை போட்டுட்டு இருந்தாங்க. அந்த சண்டையில்தான் எனக்கு தெரிஞ்சது என் அப்பா வேணும்னே என்னை சினிமாக்கு அனுப்பிட்டு யாரையாவது கூட்டிட்டு வந்து என் அம்மா கிட்ட விட்டுட்டு அவங்களை கஷ்டப்படுத்துறாங்கன்னு.

ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன். நான் கேட்டத அம்மா பார்த்துட்டு அழுதுட்டே கதவை சாத்திவிட்டு உள்ளே போய்ட்டாங்க.

எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. அப்படியே சிலை மாதிரி நின்னேன்.

நான் அப்புறம் சுதாருச்சு போய் கதவை தட்டினேன். அம்மா திறக்கல. அப்பாவ பார்த்தேன்.

அவர் திண்டுல உட்கார்ந்து பணத்தை எண்ணிக்கிட்டு இருந்தார்.

அவர முறைச்சுட்டு ஜன்னல் வழியா பார்த்தேன். என் அம்மா என்னை பாத்தாங்க.

அவங்க உடம்ப வித்த அசிங்கத்தை விட, அது எனக்கு தெரிஞ்சுருச்சேன்னு தான் அவங்க கூனி குறுகி நின்னாங்க.

அவங்க கண்ணுல அவ்ளோ வலி இருந்தது. என்ன மன்னிச்சிடு மணின்னு சொன்னாங்க.

அதுக்கு நான் பதில் சொல்றதுக்கு முன்னாடியே...." என மணியின் குரல் தழுதழுக்க, ஆனந்தியின் கண்களில் நீர் துளிகள் எட்டி பார்த்தன.

தன்னை கட்டுப்படுத்திய மணி தொடர்ந்தான்.

" நான் பதில் சொல்றதுக்கு முன்னாடியே அவங்க பக்கத்துல இருந்த மண்ணெண்ணையை ஊற்றி..... அம்மா என்னை அநாதையா விட்டுட்டு போய்ட்டாங்க அண்ணி..."என தேம்பியவனை பார்த்து , அவள் கண்ணீரை துடைத்து விட்டு, மணியின் தோளை ஆதரவாக பற்றினாள்.

" மணி அழாதடா....யார் சொன்னா... நீ அனாதைன்னு... உனக்கு உன் அண்ணே இருக்காரு. நான் இருக்கேன். எதுக்கு அப்படி அழுகுற.

இன்னைக்கு தானே சொன்னேன். அண்ணிங்குறது அம்மாக்கு சமம்ன்னு. ப்ளீஸ்டா அழாத...."

இதுவரை யாருக்கும் சமாதானம் சொல்லிறாத ஆனந்திக்கு மணியை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை.

அவளால் முடிந்ததை முயற்சித்தாள்.

சிறிது நேரத்தில் கண்களை துடைத்தவனின் கண்களில் வெறி தெரிந்தது.

"என் அம்மா என் முன்னாடியே இறந்ததுக்கு என்னால எதுவும் செய்யமுடியல என்கிற வருத்தம் எனக்கு அதிகமாச்சு.

என்னோட வருத்தம் எல்லாம் என் அப்பா மேல கோபமா மாறுச்சு. அவனுக்கு என் அம்மா செத்தது வருத்தமாவே தெரியல.

வாசல்ல இருந்த அருவாமனையால அவன் கழுத்திலேயே ஒரு இழு இழுத்தேன். அப்பவே அவன் செத்துட்டான்.

அக்கம்பக்கத்தில இருக்குறவங்க எல்லாம் வந்து என்ன ஆச்சுன்னு சொல்லிக் கேட்டாங்க.

அவங்க கிட்ட நான் என்ன சொல்லுவேன்.

என் அப்பனே என் அம்மாவை கூட்டிக்கொடுத்துட்டான்னு சொல்ல முடியுமா.... எனக்கு விஷயம் தெரிஞ்சதே என் அம்மாவால தாங்கிக்க முடியல.

அங்குள்ள நிலைமையை பற்றி நான் யார் கிட்ட என்ன சொல்ல முடியும். நான் எதுவும் சொல்லல.

அப்போ எனக்கு பதினெட்டு வயசு ஆகலன்னு சிறுவர் சீர்திருத்த பள்ளில போட்டாங்க.

அங்க தான் அண்ணன பார்த்தேன். எனக்கு ஆறுதல் சொல்லி, உனக்கு நான் இருக்கேன்னு தைரியம் கொடுத்தார்." என்று சொன்னவனின் கண்களில் பிரகாசம் தெரிந்தது.

'சாதாரணமாக ரவுடி என்று கூறுகிறோம் ஆனால் அவர்களுக்குப் பின்னால் இருக்கும் உடைந்த இதயம் யாருக்கும் தெரிவது இல்லை.' என்றவளின் எண்ணம் அரவிந்தை பற்றி சிந்தித்தது.

அவனுக்குப்பின்னால் என்ன வலி இருந்திருக்கும் என அவள் இதயம் அவனுக்காக வலித்ததை அவள் உணர்ந்தாள்.

அரவிந்தை பற்றி கேட்கலாம் என மணியை பார்க்க, அவன் யோசனையில் இருப்பதை பார்த்து எதுவும் கேட்காமல் அரவிந்தை பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் மணி டைனிங் டேபிளின் நாற்காலியில் அமர்ந்திருக்க, ஆனந்தி அவள் சமைத்ததை டேபிளில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

"அண்ணி, இது நல்லா இல்ல." என்றான், மணி ஆனந்தியை பார்த்தவாறே.

" எதுடா...?" என சந்தேகமாக தான் சமைத்தவற்றை பார்க்க,

" நான் உங்கள சொன்னேன், அண்ணி."

" என்ன..?" என்றாள் புரியாத விழிகளோடு.

" ஆமாம். காலேல இருந்து நல்லா பேசிட்டு இருந்தீங்க. திடீர்னு சைலன்ட் ஆயிட்டீங்க. அதான் நல்லா இல்ல."

" அப்படியா...." என்றவள், அவன் அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தாள்.

" எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணி. நீங்க இப்டி பழைய மாதிரி சிரிச்சு பேசுறது."

" அப்படி என்னை எத்தனை வாட்டி பாத்திருக்க." என போட்டு பார்க்க நினைத்தவளிடம் ஒரு மர்மப் புன்னகை சிந்தினான்.

" எத்தனை தடவை பார்த்தா என்ன அண்ணி. நீங்க இப்படியே எப்பவும் இருக்கனும்.

அண்ணன சீக்கிரம் புரிஞ்சுக்கணும் ."

' மகனே நீயா வந்து சிக்குனியா...' என நினைத்தவள்,

" நானும் அவன புரிஞ்சுக்கணும் தான் நினைக்கிறேன். ஆனா அவரைப் பற்றி எதுவுமே தெரியாம எப்படி புரிஞ்சுக்குறது." என்றால் ஓரக்கண்ணால் மணியை பார்த்தவாறு.

அவன் மெல்லிய புன்னகையை சிந்தினான்.

"உங்களுக்கு அண்ணன பத்தி என்ன அண்ணி தெரியணும்." என்றான் அவளது சந்தேகத்தை தீர்ப்பவனாக.

" நீ அரவிந்த ஜெயில்ல பார்த்தேன்னு சொன்னேல. அப்ப அவன் ஏன் ஜெயிலுக்கு போனான்...?"

" அண்ணனும் என்னை மாதிரிதான் சந்தர்ப்ப சூழ்நிலையால கைல அரிவா எடுக்க வேண்டியதா போச்சு."

"அப்படி என்ன சந்தர்ப்ப சூழ்நிலை....?" என்றால் அவனைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில்.

" துரோகம் அண்ணி. அண்ணன் குடும்பத்தில நடந்த மிகப் பெரிய துரோகம்." என கூற,

" அப்படி என்ன துரோகம்..." என்றவள் தயங்கியவாறே,

"அந்த துரோகத்தை பண்ணினது சிதம்பரமா...?" என்றால் தன்னுள் எழுந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு.

அவன் பதில் கூறுமுன் அடுத்தடுத்த கேள்விகளை அவன் முன் தொடுத்தாள்.

" சிதம்பரம் ஏன் என்னை டார்கெட் பண்றான்...? அரவிந்த் எதுக்கு என்னை காப்பாத்த நினைக்கிறான்....?"

" அண்ணி.... என்கிட்டயேவா...." என அவள் போட்டு வாங்க நினைப்பதை அறிந்து கொண்டான்.

" இதை நீங்க அண்ணன் கிட்டயே கேட்டுக்கோங்க." என்றான் .

"ஆமா. நான் கேட்டா உடனே உன் அண்ணன் சொல்லிடப் போறாரு பாரு." என்று சலித்தாள்.

" கேட்டுதான் பாருங்களேன்." என்றான் ஆனந்தின் பின்னால் பார்த்து சிரித்து கொண்டே.

ஆனந்தி பின்னால் திரும்ப அங்கு அரவிந்த் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான்.

"என்ன தெரியனும் ஆனந்தி உனக்கு." என புருவங்களை உயர்த்தி கேட்க,

" அது.... அது.... அது வந்து..." என வார்த்தைகள் தந்தியடிக்க ஒருவாறு சமாளித்துக்கொண்டு,

"அரவிந்த்... நீ எப்ப வந்த.... வந்து உட்காரு." என அவன் அருகில் சென்று கைப்பிடித்து அழைத்து வந்து நாற்காலியில் அமர வைத்தாள்.

" அது ஒண்ணும் இல்ல. நீ காலேல சாப்பிடாம வேற  போனியா. அதான் நான் உனக்காக என் கையால பிரியாணி செஞ்சேன்.

அதான் மணி கிட்ட நீ எப்ப வருவன்னு கேட்டேன்.

இல்ல மணி....." என மணியிடம் கண்களை உருட்டி மிரட்டி கொண்டே கேட்க, அவன் சிரித்துக்கொண்டே,

" ஆமா அண்ணா..." என்றான்.

நடந்தவற்றை யூகித்து இருந்தாலும்,

" என் மேல அவ்வளவு அக்கறையா, ஆனந்தி ...." என்றான், கேள்வியாக.

" பின்னே இருக்காதா. பொண்டாடின்னு ஆனதுக்கப்புறம் என் கடமையை எல்லாம் செஞ்சு தானே ஆகனும். "

என்றவள் மணி, குணா, சேகர் முத்து என அனைவருக்கும் பரிமாறிவிட்டு தன்னவனுக்கும் பரிமாறினாள்.

அவளுடைய உள் நோக்கம் என்னவாக இருந்தாலும் முகத்தில் சிரிப்போடும் மகிழ்ச்சியுடன் பரிமாறும் தன்னவளிடம் இருந்து கண்களை அகற்ற முடியாமல் தவித்தான்.

எல்லோருக்கும் பரிமாறியவள் அரவிந்தின் அருகே இருந்த நாற்காலியில் உட்கார, அப்போது தான் கவனித்தாள், அரவிந்த் சாப்பிடாமல் தன்னை விழுங்கி கொண்டிருப்பதை.

' என்ன' என கண்களால் கேட்க அதற்கு பதில் இல்லாமல் போக, அவன் காதருகில் வந்தவள்,

" அன்னைக்கு மாதிரி உப்பு அள்ளி போட்டுருப்பேன்னு நினைக்கிறீங்களா...." என மெதுவான குரலில் கேட்க, அவளுடைய மூச்சுக்காற்று அவன் காதோரம் உரச, அவள் கண்களை தேடினான்.

அவள் கண்களில் தெரியும் குறும்பை ரசித்தவன், அவள் காதோரம் சென்றான்.

அவன் இதழ்கள் அவள் காதருகே இருந்த ஜிமிக்கியை உரச, அவனுடைய மூச்சுக்காற்று அவளை மூர்ச்சையாக்க, " நீ எவ்வளவு உப்பு போட்டாலும் நான் சாப்பிட தயாரா தான் இருக்கேன். இருந்தாலும் இங்க இருந்து தப்பிச்சு போறதுக்கு மயக்க மாத்திரையோ பேதி மாத்திரையோ கலந்து இருப்பியோன்னு ஒரு சின்ன சந்தேகம்...." என்க, அவனை முறைத்தாள்.

'அடேய் உனக்கு எல்லாம் விஷம் வச்சிருக்கணும் டி. பாவமேன்னு கஷ்டப்பட்டு பிரியாணி செஞ்சு தந்தா கேக்குறான் பாரு கேள்விய' என நினைத்தவள் பார்வையிலும் பேச்சிலும் கனிவை கொண்டு வந்தாள்.

"என்ன அரவிந்த் நீ. நான் பாசமா உனக்காக பிரியாணி செஞ்சா என்னை நீ நம்ப மாட்டேங்குற." என சிணுங்க,

" இப்ப என்ன இதில ஏதாவது கலந்து இருப்பேன்னு தானே டவுட்டு...." என்றவள் அரவிந்தின் தட்டில் உரிமையாக ஒரு பிடி சாதத்தை எடுத்து சாப்பிட்டாள்.

தன்னவள், தன்னுடைய தட்டில் உரிமையாய் எடுத்து சாப்பிடுவதை ரசித்துக் கொண்டு இருந்தான்.

" இப்ப உங்க டவுட்டு போயிருச்சா..." என்றவள் அவன் தலையை ஆட்டவும் திரும்பி உட்கார்ந்து , அவள் தட்டில் பரிமாறினாள்.

அரவிந்த் இன்னும் சாப்பிடாமல் இருப்பதை பார்த்தவள், சலித்துக்கொண்டு "இன்னும் என்ன நானே சாப்பிட்டேன். உனக்கு என்ன .... சாப்பிடு" என தன் கைகளால் அவனுக்கு ஊட்டிவிட வந்தவளை, இது கனவா நிஜமா என கண் இமைக்காமல் பார்க்க, அவள் கண்களால் வாயை திறக்குமாறு கெஞ்ச வாயைத் திறந்தவனுக்கு ஊட்டி விட்டாள்.

தன்னவள் தனக்கு ஊட்டிவிட்ட அந்தத் தருணத்தை தன் மனதுக்குள் பதிவேற்றம் செய்து கொண்டான்.

" ஃபுல்லா ஊட்டி விட முடியாது. எனக்கு பசிக்குது. நான் சாப்பிடணும்." என திரும்பியவளுக்கு தன்னை யாரோ வெறிப்பது போல் தோன்றியது.


Rate this content
Log in

Similar tamil story from Romance