saravanan Periannan

Drama Romance Classics

5.0  

saravanan Periannan

Drama Romance Classics

பொம்மியும் சந்திரனும்

பொம்மியும் சந்திரனும்

5 mins
545


இந்த கதை ஒரு கற்பனை கதை


புரவூர்,1925


அங்கு உள்ள வரி வசூல் பிரச்சினையை தீர்க்க படிப்பு முடித்த சில வருட அனுபவமுள்ள இளம் ஆங்கிலேயே அதிகாரி கெவின் ஹார்லி ஆந்திர மாநில சித்தூரிலிருந்து அனுப்படுகிறார்.


ஆங்கிலேயரின் வரி வசூல் அத்துமீறல் அதிகரிக்க தொடங்கிய காலம்.


இந்தியாவின் சுதந்திர தாகம் அதிகரிக்க தொடங்கிய காலம்.


மாடல் டீ காரில் கெவின் ஹார்லியும் அவரை சுற்றி குதிரையில் இந்திய,ஆங்கிலேய காவல் வீரர்களும் வந்தனர்.


மக்கள் கோபத்தில் இருக்க அங்கு விரைந்த ஞானம் எனும் ஆங்கிலேயே அரசு அதிகாரி அவசரமாக வந்து கெவின் ஹார்லியை விரைந்து தன் வீட்டுக்கு அழைத்து சென்றார்.


சார்,நீங்கள் என் இப்படி அனைவரும் இருக்கும் பொழுது வருகிறீர்,தங்கள் அரசின் மேல் உள்ள கோபம் உங்கள் மீது அல்லவா பாயும்.


கெவின் சிரித்துக்கொண்டே "எனக்கு தெரியும்."


போராட்டகாரர்களை ஆங்கிலேயே அரசு சிறையில் வைத்து சித்திரவதை செய்தது.


கெவின் தன் திருமண மோதிரத்தை பார்த்தபடி,கிறிஷ்டி என கூறினார்.


அவருக்கு இந்த மக்களை துன்புறுத்தாமல் முடிந்தளவு வரியை வாங்க முடிவெடுத்திருந்தார்.


காரணம்,1890'களில் ஆங்கிலேயே காவலராக இந்தியாவில் பணி செய்த அவர் தந்தை குளிர்காய்ச்சலால் அவதிப்பட்ட போது ஒரு இந்திய வைததியர் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இலவசமாக வைத்தியம் செய்ததற்காக.


அவர் இதை கெவினுக்கு சொல்லி வளர்த்து அங்கு ஒருவேளை நீ பணி செய்ய சென்றால் முடிந்தளவு அவர்களுக்கு நன்மை செய் என கூறியது.



முல்லை பெரியார் அணை தந்த ஜான்‌ பென்னிகுயிக் போன்ற அதிகாரிகள் ஒரு சிலர் அவ்வப்போது இருந்தனர் இங்கே.


உணவு அருந்தியதிற்கு பின் கெவினிடம் ஞானம் பின்வருமாறு கூறினார் "சார்,சொந்த நாட்டில் தன் சொந்த உழைப்பை கொடுத்தும் சிறைக்கைதி போல் இருப்பது கொடுமை."


கெவின் அவர் கையை பிடித்து "நான்‌ என்னால் முடிந்த முயற்சியை செய்கிறேன்."



ஞானம் மற்றும் அவரது குடும்பம் தன்னுடைய சிறுவயது முதல் தங்கள் சொந்த நிலத்தில் கூலி வேலை பார்த்தனர்.


வரி வசூலிக்கும் அதிகாரிகள் கருணையின்றி கொடுமை படுத்தினர்.


ஞானமின் தந்தை அவனை பார்த்து "சுதந்திரம் நம் நாடு அடைவதற்கு முன் நீ அடைய‌ வேண்டும்.


நாட்டுப்பற்று உன் மனதில் பதித்த நானே கூறுகிறான்.


அரசு வேலைக்கு செல்,உன்னை காப்பாற்றிக் கொள்,முடிந்தால் சிலருக்கு உதவி செய்."


ஆனால் ஞானமின் உதவியை ஒரு‌ சிலரே எதிர்ப்பார்த்தனர்.


இது ஞானமின் மனதில் தான்‌ என் தாய்நாட்டுக்கு ஒரு கடமையும் செய்யவில்லையோ என தோன்றியது.


அடுத்த நாள் மதியம்,குதிரையேற்றம் செய்துக்கொண்டிருந்த கெவின் குதிரை காட்டுப்பன்றியை பார்த்து மிரண்டு காட்டிற்குள் ஓடியது.


தறிகெட்டு ஓடிய அந்த குதிரை ஒரு அடர்ந்த காட்டு பகுதிக்குள் அவனை கீழே தள்ளி விட்டு ஓடியது.


கீழே விழுந்த கெவின் எழுந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்தார்.


இருட்ட தொடங்கிய வேளையில், அவர் காட்டுவழியே வரும் போது கண்ட காட்சி அவரை வியக்க வைத்தது.


சிதலமடைந்து,பாசி படர்ந்த சிலை ஒன்று இருந்தது.சிலையின் முக வடிவமைப்பு தெரியவில்லை


அந்த சிலையின் காலின் அருகில் ஒரு பூ மாலை இருந்தது.


அது அந்த நாளில் கோர்த்து அணிவிக்கப்பட்ட மாலை போல் இருந்தது.


கெவின் அடுத்த சில நாள்கள் அங்கு வந்து பார்த்து விட்டு அதே போல் மாலைகள் இருந்ததை பார்த்து ஞானத்தை அங்கு அழைத்து செல்கிறார்.


இருவரும் யார் இந்த நபரை என்பதை கண்டறிய முயற்சி செய்ய முடிவு செய்கின்றனர்.


பொம்மி அம்மா எனும் பாட்டி தான் அந்த சிலைக்கு மாலை அணிவிப்பது என கண்டறிந்தனர்.


கெவின்,ஞானம் அவர்களிடம் பேச முயற்சி செய்ய பொம்மி அம்மா தன் கையில் இருந்த தட்டால் அடித்து விடுகிறார் கெவினை.


ஞானம் அவர்களிடம் பேச முயற்சி பண்ணி என்ன புரிந்து கொள்கிறார் என்றால் அவர்களிடம் பேச முடியாது என்றும்,காது கேளாது என்று தான்.


பொம்மி ஞானமிடம் சைகையில் ஏதோ பேச கெவின் அதை ஆர்வமாக பார்த்து என்ன என்பதை புரிந்து கொள்கிறார்.


ஞானத்தை அழைத்து அந்த அம்மாவை அழைத்து வரும்படி கூறி "உங்கள் காதலரின் கதையை இந்த உலகம் அறியும்படி நான் வெளியிடுகிறேன்" என சைகையில் கூறுகிறார்.


பொம்மி அதை பார்த்து கண் கலங்குகிறார்.


இருவரையும் தன் இல்லம் அழைத்து வந்து வெல்லம் உடைத்து தட்டில் வைத்து கொடுக்கிறார்.


ஞானம் அதை சாப்பிட்டுவிட்டு விஷம் இல்லை என கூறுகிறார்.


உள்ளே பொம்மி அம்மா பல பாத்திரங்களை தள்ளி ஒரு புத்தகத்தை எடுக்கிறார்.


தூசி தட்டி அதை கெவினிடம் தர அதை வாங்கி பார்க்கும் கெவினுக்கு அதிர்ச்சி.


பொம்மி தன்னுடைய காதல் கதை, தன் காதலனின் கனவை ஓவியமாக வரைந்திருக்கிறார்.



ஞானம் அந்த முகத்தை பார்த்துவிட்டு சந்திரன் என முனகுகிறார்.


சந்திரன் என கெவின் கூற,ஞானம் தன் தந்தை கூறிய கதையை கூறுகிறார்.


1870,புரவூர்


புதிய ஊர்த்தலைவர் போட்டியில் சந்திரன் எனும் ஊர்த்தலைவர் மகன்,மன்னார் எனும் ஜமின் மகன் போட்டியிட்டனர்.


சந்திரன் வெற்றி பெற்றாலும் ஊர்மக்கள் பேசியது என்ன வென்றால் இது போன்று பல ஊர் தலைவர் மகன்கள் ஊரை நாசம் செய்தது பற்றிதான்.


சந்திரனின் தந்தை ஒரு ஆங்கிலேயே விசுவாசி,அவர்களுக்கு அளவு கடந்த அதிகாரத்தை தன் ஊரான புரவூரில் குடுத்து இருந்தார்.


சந்திரன்,தன் தந்தையின் அடையாளத்துடன் மூழ்கி போன தன் அடையாளத்தை மீட்டெடுக்க பல திட்டங்களை யோசித்து வைத்திருந்தான்.


ஆனால் மக்கள் அவனை தலைவனாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.


ஆங்கிலேயே அதிகாரி வில்லியம் புரவூர் உட்பட 8 ஊர்களை கட்டுபாட்டில் வைத்திருந்தான்.


வில்லியமை சந்தித்த சந்திரன் ஆங்கில முறை கல்வியை தன் ஊரில் அறிமுகப்படுத்த தயாராக இருந்தான்.


வில்லியம் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள இந்திய,ஆங்கிலேயே ஆசிரியர்கள் புரவூர் விரைந்தனர்.


மக்கள் இதை எதிர்க்க சந்திரன் தன் சிறிய படையாட்களை இவர்களை ஓடுக்க அனுப்பினான்.


மக்கள் பயந்து ஓட விழுந்த தன் தந்தையை தூக்க ஒரு பெண் ஓடி வந்தாள்.


அந்த பெண்னை தாக்க அவன் வீரன் ஓட சந்திரன் வேண்டாம் என சைகை செய்கிறான்.


வில்லியம் ஓடி வந்து சந்திரனுடன் கை குலுக்கி வெரி இம்பெர்ஸ்வ் என கூறினான்.


சந்திரன் அந்த பெண்ணை பார்த்தபடி நின்றான்.


வீட்டிற்கு வந்த சந்திரன் தன் கைகளை சுவற்றில் பலமாக குத்தினான்.


சந்திரன் ஆங்கிலேயர்களை தன் ஊரில் இருந்து விரட்ட படைகளை தயார் செய்து கொண்டிருந்தான்.


ஆங்கிலேயே படைகளில் தன் ஆட்களை அதிகமாக பயிற்சி எடுக்க அனுப்பினான்.


அடுத்த நாள்,கோவில் குளக்கரைக்கு சென்ற சந்திரன

 மீன்களுக்கு வெந்த சோற்றை உணவாக இட்ட பொம்மியை பார்க்கிறான்.


அவளும் யாரோ பின்னால் நிற்பதை பார்த்து திரும்பி சந்திரனை பார்க்கிறாள்.


சந்திரன் அவள் கண்களை பார்த்து மெய் மறந்து பார்க்க,பொம்மி அவன் கண்களை பார்க்க முடியாமல் எழுந்து ஓடினாள்.


அங்கு வரும் வில்லியம் சந்திரனிடம் ஊர் திருவிழா நடத்த வேண்டுமானல் 2000 அரிசி மூட்டைகள்,100 அடிமைகள் வேண்டுமென கேட்க சந்திரன் ஒத்துக்கொள்கிறான்.


தன் படையை அனுப்பி பலவந்தமாக அரிசி மூட்டைகளை பிடுங்கி,100 பேரை பிடித்து வருகிறான்.


வில்லியம் அதை மகிழ்ச்சியாக வாங்கி கொண்டு செல்ல,ஊரெங்கும் அழுகை ஓலம் கேட்கிறது.


திருவிழாவை ஊர்மக்கள் புறக்கணித்து ஆயுதம் ஏந்தி வில்லியமை தாக்க செல்ல, சந்திரன் அவர்களை ஊருக்குள் அடித்து துரத்துகிறான்.


பொம்மி அங்கு கோப முகத்துடன் இருந்த சந்திரனை பார்த்து பயந்து அங்கிருந்து செல்கிறாள்.


சந்திரன் தன் படையை பலப்படுத்த ஆயுதங்களை கொள்ளை அடிக்கிறான்.


சந்திரன் தன் நண்பன் அப்பாசாமியை அழைத்து ஒரு சில திட்டங்களை கூறுகிறான்.


வில்லியம் தன் ஒற்றர்கள் மூலம் ஆயுதம் கொள்ளை போனதை அறிந்து தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினான்.


கோவிலில் அமர்ந்திருந்த பொம்மி எதிரில் மறுபக்கம் அமர்ந்த சந்திரன் சைகையில் மன்னிப்பு கேட்டான்.


பொம்மி சிறுபுன்னகை புரிந்தாள்.


சிறுவயதில் நண்பர்களாக பல்லாங்குழி விளையாண்ட நினைப்பு இருவரையும் தலை குனிந்து முகம் சிவக்க வைத்தது.


காதல் இருவருக்கும் மெல்ல வளர்ந்தாலும் அது பொம்மி வரைந்த ஓவியங்களிலும், சந்திரன் எழுதிய கவிதைகளிலும் புதைந்து இருந்தது தவிர இருவர் வாயிலும் அந்த உணர்ச்சி வெளிவரவில்லை.


தீடீரென வெடி சத்தம் கேட்டதை அறிந்து எழுந்த சந்திரன் பொம்மியை அழைத்து கொண்டு ஒரு சுரங்க பாதையை காட்டி மக்களை இதற்குள் அழைத்து கொண்டு வேறு ஊர் விரைந்து செல்ல கூட்டி வர சொன்னான்.


வில்லியம் வெர் இஸ் த டெரச்சரர்? என கத்தி தன் படையை ஊரை சுற்றி சந்திரனை தேட அனுப்பினான்.


பொம்மி நடந்ததை கூறி மக்களை அழைக்க யாவரும் வர மறுக்கின்றனர்.


அப்பொழுது அங்கு வரும் சந்திரன் நண்பன் வேலவன் அவனது உண்மையான குணத்தையும்,நல்ல மனதையும் கூற மக்கள் மனதில் இருந்த புரட்சி எண்ணம் வெளி வந்தது.


அனைவரும் ஆயுதம் ஏந்தி செல்ல,பொம்மி குழந்தைகள்,பெண்களை பத்திரமாக அந்த வழிக்கு அனுப்பிவிட்டு பின் சென்றாள்.


வில்லியம் முன் சென்ற சந்திரன் வாள்,கேடயம் மற்றும் இடுப்பில் துப்பாக்கியுடன் நின்றான்.


இருவரும் மூர்க்கத்தனமாக சண்டையிட்டனர்.


சந்திரன் வில்லியமின் நெஞ்சில் கத்தியை இறக்க, சந்திரனின் மார்பில் ஒரு கத்தி இறங்கியது.


சந்திரன் ரத்தம் வழிய கீழே விழ அவன் நண்பன் ஆதி வில்லியமின் தலையை வெட்டி என் நண்பனையா கொன்றாய் என கத்தினான்.


ஆதி செய்த வேலையை பார்த்த வேலன் அவன் மீது ஈட்டியை எறிந்தான்.


வேலன் ஓடி சென்று சந்திரனை மடியில் வைத்து அழ,ரத்தம் வழிந்தோடிய சந்திரன் உடம்பில் ஒரு பெருமூச்சு வந்து அவன் மூச்சு நின்றது.


போர் ஒரு முடிவுக்கு வர ஆங்கிலேயே படை வெற்றி பெற்றது.


சந்திரனின் உடம்பை கைப்பற்றிய ஆங்கிலேயே படை அதை காட்டிற்குள் எடுத்து சென்று வீசியது.


ஊருக்குள் தன் ஊர் வீரர்கள் உடம்புகள் வருவதை பார்த்த பொம்மி கண்கள் சந்திரனை தேடுவதை பார்த்த வேலன் அவளை அழைத்து நடந்தை கூற,அவள் கதறி அழுது மயக்கமடைய அவளுக்கு அதிர்ச்சியால் காது மற்றும் வாய் பேச முடியாமல் போனது.


ஊர்மக்கள் அவனுக்கு ஒரு சிலை வைத்து அதன் அடியில் "சந்திரன்,சுதந்திர போராட்ட வீரன்" என செதுக்கி வைத்தனர்.


பொம்மி தன் மனதால் மணந்த சந்திரனுக்காக திருமணம் செய்வதில்லை என கூறி தன் வாழ்வை குழந்தைகளுக்கு ஓவியம் சொல்லி தருவதில் கழித்தாள்.


அந்த சிலையை ஆங்கிலேயர் கண்ணில் படாமல் ஒளித்து வைத்தனர் ஊர் மக்கள்


அனைத்தையும் எழுதும் கெவின்,ஞானத்திற்கு புத்தகத்தை வெளியிடுவேன் என வாக்குறுதி கொடுத்துவிட்டு அவன் எழுதிய புத்தகத்தை தீயில் இட்டு,பொம்மி வரைந்த ஓவியத்தை தீயிட்டு கொளுத்துகிறான்.


சந்திரனின் சிலையை உடைக்க ஆட்களை அனுப்புகிறான் கெவின்.


கெவினை பொறுத்தவரை இந்த கதை வெளிவந்தால் மக்களிடையே புரட்சி எண்ணம் வரும் என எண்ணினான்.


சந்திரன் பொம்மிக்கு எழுதிய கவிதை,


"கண்களால் காதல் சொன்னாய்,


என் மனதில் மனநிறைவு தந்தாய்,


என் உயிரில் உயிரென கலந்தாய்,


உன் முகத்தை நான் உயிருள்ள வரை மறவேன் என கூறினாம்."






Rate this content
Log in

Similar tamil story from Drama