Madhu Vanthi

Romance Tragedy Inspirational

4.8  

Madhu Vanthi

Romance Tragedy Inspirational

தோட்டாக்களாய் சீறிடும் மன்னவா

தோட்டாக்களாய் சீறிடும் மன்னவா

8 mins
248


முடிவடையா கேள்விகளும் நிறைவடையா தேடல்களும் சுமந்து சிவந்த அவ்விழிகள் இரண்டும் தன் தாய்மண்ணை கூர்ந்து நோக்கிக் கொண்டு இருந்தது... அவள் வாழ்வின் எத்தனை மணிநேரங்கள் இப்போது வீணாய் தன்னை மாய்த்துக் கொண்டதோ.., சலனமற்ற அவள் வதனத்திலிருக்கும் மைவிழிகள் இரண்டும் அழுகையை வெளிப்படுத்த நினைத்தும் அதனை வெளியிடாமல், உள்ளுக்குள் எரியும் நெருப்பின் காரணமாக சிவந்து மட்டுமே இருந்தது... அவளுள் எரியும் கணலில் கானலாய் கரைந்தது போலும் அவள் கண்ணீர்...

அவள் அமைதியாகவே இருந்தாள்... முகத்தில் தோன்றா சலனம் மொத்தமும், அவளுள் ஓடும் உதிரத்தில்... துடிக்கும் இதயத்தில்... சிந்திக்கும் சிந்தையில்... சுவாசிக்கும் காற்றில் என உச்சி முதல் பாதம் வரை பரவிய நாடி நரம்புகளிலெல்லாம் வெறியை தூண்டி கொண்டே இருக்க....

அதன் காரணமானவனோ....

நகருக்கு வெளிப்புறத்தில், ஒரு உள்ளாச மாளிகையில் தலைக்கேறிய போதையில் தலைமுழுகிப்போய்.. தான் நினைத்ததை நடத்தி விட்ட ஆனவத்திமிரில்.. தற்காலிக வெற்றியால் இழந்து விட்ட நிதானத்தில் கண்ணை திரையிட்ட மடத்தனதில், குத்தாட்டம் போடாத குறையாக ஆனந்தத்தில் திளைத்திருந்தான்..

அவனை நேருக்கு நேரா எதிர்கொண்டு நின்று அவன் சட்டையை பிடித்து கேள்வி கேட்கவோ... அல்லது கீழ்தர வார்த்தைகளை உதிர்த்த அவன் நாவை நொடிப்பொழுதினில் அறுத்தெரியவோ... இல்லை கையில் கிடைக்கும் எதையாகிலும் எடுத்து ஒரே வீச்சில் அவனை கொள்ளவோ தைரியமும் வேகமும் அவளிடம் இருக்கத்தான் செய்தது.

ஆனால்., ஒரு குரல் அவளுள் ஒலித்ததால் அடங்கிப்போய் காத்திருந்தாள் .

"சரியான நேரம் வரனும் மதி... அதுவரை நம்ம வெறி மொத்தத்தையும் கரெக்டா கையாளனும்... நம்ம கோபம் யார் கண்ணுக்கும் தெரிஞ்சுர கூடாது... அப்டி தெரிஞ்சா அதுவே நம்ம வீக்னஸ் ஆகிடும் டா.... சோ... எக்காரணத்த கொண்டும் நாம அவசரபட்டுரவே கூடாது...", என கலகலப்பாக... முகத்திலிருந்து என்றும் நீங்கா புன்னகையுடன், அவள் இதயத்துடிப்பானவன் மொழிந்த சொற்கள் ஒவ்வொன்றும் அவள் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்ததால், தன் ஆத்திரம் மொத்தத்தையும் கண்ணிலும் பேச்சிலும் செயலிலும் வதனத்திலும் மூடிமறைத்து வெளி உலகிற்கு காட்டாமல் உள்ளுக்குள்லேயே கடிவாளமிட்டு கட்டி வைத்து, அவளுள் சுழலும் ஒரு புயல் காற்றையே சிறு புன்னகையின் பின்னால் மறைத்து, அமைதியாக அந்த பூங்காவில் அவர்களின் வழக்கமான கல் பென்ஞ்சில் அமர்ந்திருந்தாள் மதுரா என்கிற மதுரமதி....

அப்பூங்காவிர்க்கு தினசரி வரும் நபர்களாயின் அவர்களின் பார்வைகள் நிச்சயம் மதுராவை கண்டு ஒருமுறையாவது குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும்...

பார்த்தே பழகிய விஷயம் ஒருநாள் திடீரென மாற்றத்தை கொண்டுவந்தால், அதை இத்தனை நாட்கள் கவனிக்காமல் இருந்தவர்களுக்கு கூட அந்த திடீர் மாற்றம் அவர்களின் கவனத்தை அண்ணிச்சையாகவே தன்னை நோக்கி திரும்ப வைக்கும்.. அவ்வாறு திரும்புவது மனித இயல்பே.. அதனை போன்றே தான் இக்குழப்பமும்..

பல நாள் இருவர் மட்டுமாய் இருப்பவர்கள்.. சிலநாள் நால்வர் அடங்கிய சிறு குழுவாகவும் அதிசயத்தின் அதிசயமாக ஓரிரண்டு நாள் மட்டும் கிட்டத்தட்ட பத்து பேருக்கு குறையாமல் இருந்து, சூழலை மறந்து நாள்தவறாமல் கத்திகூச்சலிட்டு மகிழ்ச்சியுடன் காணப்படும் அந்த கல் இருக்கை, என்றும் இல்லாமல் இன்று தனிமையில் இருக்கும் மதுராவின் மௌன மனநிலையால் அனைவரின் கவனத்தையும் சம்பாதித்தது...

எத்தனை பணிசுமைகள் தடையாய் முன்நின்ராலும் அவற்றையெல்லாம் நொடி பொழுதில் தீர்த்து விட்டோ... கற்றோடோ காற்றாக அப்படியே பறக்க விட்டோ.... அதை முற்றிலும் மறந்து இந்த ஒரு மணி நேரத்தை தன்னுடன் நிம்மதியாய் கடத்த, கடந்த பத்து ஆண்டுகளாய் நேரம் தவறாமல் இவ்விடம் வந்திடுபவன் இன்று இங்கில்லை.... அதை நினைக்க நினைக்க அவள் கண்ணில் ஊற்றெடுத்த வற்றாத சுனை எவர் கண்ணிலும் படவில்லை என்பதே உண்மை... வழக்கமாக தனிமையை நாடுபவள் இன்று அதை வெறுத்தாள்... சிந்தையை சுற்றிலும் அவன் நினைவுகள் விடாது வட்டமிட்டு சாபஓலங்களாய் ரீங்காரமிடுவதால்...

அதை யோசித்து யோசித்து அரைமணிநேரம் சிலையாகிபோய் இருந்தவளை சடன்ப்ரேக் இட்டு சாலையில் வந்து நின்ற அந்த வெண்ணிற யுனோவா கார் திசை திருப்பியது.... காரின் ஹாரன் ஒலியாலே வந்திருப்பது யாரென அறிந்துகொண்டவள், ஒரு பெருமூச்சை மட்டுமே இழுத்து விட்டு பார்வையை வேறெங்கோ பதிவு செய்து கையை கட்டி நிமிர்ந்து அமர்ந்தாள்.

அமைதியான அவ்விடத்தில் வந்து நின்ற அந்த காரின்முன்புற கண்ணாடியின் மேல்புறத்தில்

"கீதா 💕💕 மதிகா" என ஜொலிக்கும் நிறத்தில் எழுதி இருக்க... பின்புற கண்ணாடியில் நட்ட நடுவே ஒரு கருப்பு வட்டத்தில் வெள்ளைநிற காலர் போட்ட ஒரு அடையாளம் பளிச்சென மின்னி காருக்கு சொந்தமானவரின் தகுதி மற்றும் அந்தஸ்த்தை எடுத்து கூறியது..

அந்த காரின் முன்பக்க இருக்கையின் கருப்பு கண்ணாடி மெல்ல கீழிறங்க.. அதன் வழியாக ஸ்டெயரிங்கை பிடித்து கொண்டிருந்த ஐம்பது வயது மதிக்கதக்க ஒருவரின் பதட்டம் கலந்த முகம் தெரிந்தது.. மதுராவை கண்ட பின்னர் அந்த பதட்டம் மொத்தமும் கோபமாய் மாரிட... வேக நடையில் பூங்காவின் வாயிலை நோக்கி விரைந்தவர் நேராக வந்து நின்றது அவள் முன்பு தான்...

"மதுரா... இங்க என்ன பண்ணுற... வா வீட்டுக்கு போகலாம்..", என்றவரிடம் கோபமில்லை.. பயமே..

"இது என்ன ப்பா கேள்வி... நா தெனமும் இந்த நேரத்துல இங்க தானே இருப்பேன்... இன்னைக்கு என்ன புதுசா வீட்டுக்கு வான்னு சொல்லுறீங்க... நா எப்பவும் வர்ர டைம்க்கு வந்துறுவென்... நீங்க கெலம்புங்க..", இவள் பதிலில் தந்தையின் நிலமை புரிந்தும் அலட்சியமே...

"மதுரா.. சொன்னா புரிஞ்சுக்கோ... இப்போ அந்த பையன் உன் கூட இல்ல..."

"அவன் இல்லன்னா என்னப்பா... அவன் இல்லாம நா இங்க வர்றதுல இப்போ என்ன ஆகிற பொகுது....

"புரிஞ்சுக்கோ மா... நீ இங்க தனியா இருக்க..."

ஹ்ம்ம்.... தனியாவா??... சுத்தி இத்தன பேரு இருக்காங்களே... அது தெரியலையாப்பா உங்களுக்கு", என வேகமாக கூறியவளுக்கும் தெரியும், இப்போது திடீரென நான்கு ரவுடிகள் வந்து இவளை அடித்து துன்புருத்தினாலோ... கடத்தி சென்றாளோ இல்லை கொலையே செய்தால் கூட சுற்றி இருப்பவர்களின் வேடிக்கை பொருளாகவே இருந்து, அவர்களின் பரிதாபங்களை மட்டுமே சந்திப்பபாள் என்பது.... ஆனாலும் அதையெல்லாம் எதிர்பார்த்தே தக்க முன்னெச்சரிக்கையுடன் இருந்ததால் வார்த்தைகளை தொடர்ந்தாள்..., "ஏன் ப்பா.. நா இது வர தனியா எங்கையும் போனதில்லயா... கூட யாரும் இல்லாம இருந்ததில்லையா.....??.. இப்போ என்ன ஆச்சு??... ", என சாதாரணமாகவே கேட்க.., "அப்போ நிலம வேர... இப்போ இருக்குற நிலம வேர மதுரா... சொன்னா கேளு... கிளம்பி வந்து வண்டில ஏறு...

இப்போதைக்கு எனக்கு இங்க இருக்க தா தோணுது ப்பா... தனியா இருக்குறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல... நீங்க கெலம்புங்க.. நா எப்பவும் போல பத்ரமா வந்துடுறேன்..

ஏன் புரிஞ்சுக்க மாட்டுற மதுரா... உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல தா... ஆனா எனக்கு பிரச்சன.. உன்ன தனியா விட்டுட்டு நா அங்க பதர வேண்டி இருக்கு... கால் பண்ணி மிரட்டுறான் அந்த பொறுக்கி...", என அவள் பிடிவாதத்தை சமாளிக்க முடியாமல் வழக்கமாக அனைவரும் எடுக்கும் கூச்சல் என்னும் ஆயுதத்தை அவர் கையில் எடுத்துவிட... அதற்கெல்லாம் அடங்கிடும் அளவிற்கு இல்லை அவள் வளர்ப்பு.., கையை பின்னால் கட்டி கொண்டு சாதாரணமாகவே புல் தரையை உதைத்து கொண்டு நின்றாள்.

அவர் வளர்ப்பை எண்ணி அவரே நொந்து கொள்ள.., வேறு வழி அறியாமல் இறைஞ்சும் குரலில் "பயமா இருக்கு டா... நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து செய்யுற காரியம் அப்புடி... இப்போ யார எதிர்க்குறீங்கன்னு உங்களுக்கே தெரியும் தானே..

ஹ்ம்ம்.. தெரியும் ப்பா.. தெரியும்... நல்ல்ல்லாவே தெரியும்... நாங்க எதிர்க்கிறது யாரன்னும் தெரியும்.. அந்த பொறுக்கி நாய்ங்கள காப்பாத்த எங்கள எதிர்க்கிறது யாருன்னும் தெரியும்...", என்றவளின் விழிகள் நேருக்கு நேராக தந்தையின் விழிகளை சந்திக்க... அவரால் மகளின் பார்வையை தாங்க இயலாமல் வேறுபுறம் திரும்பினார்... சரியாக அதே நேரம் அவரின் காரின் அருகில் சீறிகொண்டு வந்து நின்றது ஒரு பல்சர் பைக்.

அந்த வண்டியில் இருந்து பரபரப்பாக இறங்கியவனை கண்டுவிட்டு, "ம்க்கும்.. தனியா இருந்தாலே நீ வர மாட்ட.. இதுல இந்த தருதலையும் வந்துருச்சா... இனி நீ வந்த மாறி தா... ஹ்ம்ம்.. சரி ரெண்டு பேரும் பத்திரமா வந்து சேருங்க", என ஒருவித நிம்மதியில் கூறி முடிக்கையிலேயே பதட்டத்துடன் ஓடிவந்தவன் இருவரையும் கண்டுவிட்டு மூச்சிரைக்க நிம்மதியுடன் நிற்க..., அவனை கண்டதில் மதுராவிர்க்கு ஒரு இனம் புரியாத ஆறுதல்...

சற்று மலர்ந்த முகத்துடன், "இப்போ இங்க ஒரு சம்பவம் நடக்கனுமே", என மைண்ட் வாய்ஸ் ஓடவிட்டு கொண்டிருகையிலேயே பலாரென அவன் கன்னத்தில் ஒரு அறை விழ... லேசாக சிரித்து விட்டாள்.... அறை வாங்கியவனோ பேந்த பேந்த முழித்துக் கொண்டு நிற்க..., "இது தா நீ என் பொன்ன பாதுகக்குற லட்சணமா.... பத்துரமா பாத்துக்கோ டா.. இல்ல சேதாரம் ஜாஸ்தியா இருக்கும்", என மிரட்டுவது போல் கத்தி விட்டு நிம்மதியுடன் அங்கிருந்து நகர்ந்தார்.....

அவரின் தறுதலை என்றவார்த்தைக்கு சொந்தாமானவன் வருகையில் தந்தையின் கண்டிப்பான பேச்சிலும் அவள் அதரங்கள் லேசாக மேல்நோக்கி வளைந்தது..., அவர் தலை மறையும் வரையில் அவர் போகும் திசையையே அவன் பார்த்து நிற்க.., "என்னாச்சு மிஸ்டர் தறுதலை.... வலிக்குதா??...", என பாவமாக முகத்தை வைத்து கொண்டு நக்கலாக அவள் கேட்க.. "அடியே.. உன் டாடி கிட்ட சொல்லி வை டி... சும்மா சும்மா என்ன அடிக்குறாரு...", என முகத்தை சுருக்கி முறைத்தான்..

அவரு எங்க சும்மா அடிச்சாரு.. நீ சொன்ன வார்த்தைய காப்பத்தாம விட்டதால தானே லைட்டா தட்டுனாரு.

ம்ம்... ஆமா ஆமா... அதுகுன்னு உன்னயவே சுத்தி சுத்தி வந்தா ஊரு என்ன பேசும்...

அதுக்கு வாய் சும்மா இருக்காது.. அதனால என்ன வேன்னா பேசும்.. அது என்ன பேசுனாலும் நீ குடுத்த வாக்க காப்பத்தனுமா இல்லையா??...

ஹ்ம்ம்... இப்டி கிராஸ் கொஸ்டீன் கேட்டுகேட்டு வக்கீல் மகன்னு நிரூபிச்சுறு... சரி.... உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே.. என சற்று உறுத்து நோக்கும் பார்வையில் அவளை நோக்க.. சிறிதே சகஜமானவள் அவன் கேள்வியில் விரக்தி புன்னகை ஒன்றை வீசினாள்.

"ஏன் டா... எவனாவது கால் பண்ணி மிரட்டுனானா??...

"என்ன எவனாவது மிரட்டுவானா.. ஐயா யாரு..", என இல்லாத காலரை தூக்கி விட்டவன் அவள் நாக்கல் கலந்த பார்வையை கண்டு பல்லை காட்டிவிட்டு.. பின் சீரியசாக " நம்ம வக்கீல் ஐயாவ தா மிரட்டி இருக்காங்க.. உனக்கு கால் பன்னா ஃபோன் வீட்டுலயே இருந்துச்சு... அதா எனக்கு கால் பண்ணி எங்க இருக்கன்னு கேட்டாங்க.. நீ இங்க தா இருப்பான்னு சொன்னதுக்கே, "அவ கூட இல்லையா டா பாவின்னு", சிறப்பா வாழ்த்தவும் தா என்னமோ ஏதோன்னு நானும் வந்தே...", என கூறிகொண்டே அந்த கல் இருக்கையில் அமர.. அவன் மொபைல் அலறியது..

ஓய்.... லாயர் தா கூப்புடுறது... இரு பேசிட்டு வந்து என்னன்னு சொல்லுறேன்...", என்று விட்டு அவன் அங்கிருந்து நகர.. பார்வையை நிமிர்த்தியவள் முன் ஒரு டிவி ஷோரூம்... அதில் இருந்த ஒவ்வொரு டிவியிலும் ஒரே செய்தி தான்.. சத்தம் கேட்காவிட்டாலும் அவளால் அந்த செய்தி என்ன என்பதை கூற இயலும்... இன்றைய தலைப்பு செய்தியே அது தானே...

"பொது சேவைக்காக விருது பெற்ற கல்லூரி மாணவன் சதாக்ஷயசூர்யா சமூக விரோதியா?"

முதல் பக்கத்தில் பட்டை எழுத்தில் வந்திருந்த செய்தி பொய்யென்பது தெரிந்ததும் அதை நிரூபிக்க போராடும் அவன் உயிர்தோழி... வாழ்வை பகிரபோகும் காதலி..

மென்மேலும் அந்த ஷோரூமை காண இயலாமல் பல்லை கடித்து கண்ணை இருக்க மூடி தலையை இருகரங்களால் தாங்கிகொண்டு, குனிந்தவள் இரு நிமிடத்தில் நிமிர்ந்தாள்.... தலையில் உணர்ந்த ஒரு மென்ஸ்பரிசத்தில்... அவள் முன் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர்....

"கிரண் தாத்தா.. நீங்க இன்னும் கெலம்பலையா....", என லேசாக அவரை நோக்கி புன்னகைக்க...

"என்ன மா.., சூர்யா தம்பி பத்தி நெனசுட்டு இருக்கியா..", அவள் கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் மறு கேள்வி கேட்டு.. அவளின் சோகத்தில் பங்குகொள்ள ஆறுதலாய் அருகில் அமர்ந்தவரை நோக்கி ஒரு கசந்த புன்னகையை மட்டுமே வீசினாள் அவள்....

ஹ்ம்ம்ம்..... - நீண்ட மூச்சைவிட்டவர் தன்னால் இயன்ற அளவு அவள் மனதை திசைதிருப்ப முயன்றார்..., "கவல படாத மா... சூர்யா தம்பிக்கு இருக்குற நல்ல மனசுக்கு அவன் சீக்கிரமே இந்த கேஸ்ல இருந்து வெளிய வங்குறுவான்... அவனுக்கு எதிரா யாரு மா சாட்சி சொல்ல போறாங்க??.... எல்லாருமே அவனுக்கு ஆதரவு தா....", என கூறியவரின் வார்த்தைகளை கேட்டவள், நிதர்சனம் என்னவென்பதை சிந்திக்க..... அவளுக்கு சிரிப்பு தான் வந்தது...

"ஹ்ம்... ஆதரவா??... பொய் கேஸ் போட்டு அவன உள்ள தல்லுன அந்த அயோக்யனுக்கு நீங்க சொன்ன இந்த ஆதரவ விலைக்கு வாங்க எவ்வளவு நேரம் ஆகிர போகுது தாத்தா....", என கேள்வியால் அவரை பார்த்தவள் வெற்று புன்னகை ஒன்றை சிந்தி பார்வையை வேறு திசையில் மாற்றி கொண்டு, "அந்த ராஸ்கல் இந்நேரம் அவனுக்கு எதிரா பல பேர விலைக்கு வாங்கிருப்பான்.... அப்டியே இருக்குற இந்த ரெண்டு நாள் கேப்ல அந்த ஆதரவுக்கு போலி ஆதாரமும் ரெடி பண்ணிருப்பான்....", என விரக்தியில் வார்த்தையை முடித்தாள்.

அவள் வார்த்தைகளும் உண்மையே... ஒரு அரசியல்வாதியை எதிர்த்து வெற்றியை தேடுவது பனிமலையில் குளிர்காய காய்ந்த விறகை தேடுவதற்கு சமம்... அவள் பதிலில் அம்முதியவரும் மௌனமாக... அப்போதே அங்கிருக்கும் சூழலை கவனித்தாள் மதுரா..

"தாத்தா... மரம் செடிங்களுக்கு தண்ணி ஊத்தலையா??", என வாட்டமாய் இருந்த பூசெடிகளையும் நீரற்று வெடித்திருந்த மரத்தின் வேர்களையும் கண்டவள் தீவிரமாக அவரிடம் கேட்க.., "ஆமா மா.. நேத்து நடந்த பிரச்சனைல.. பார்க்குக்கு வர்ர தண்ணி கரண்டு கணெக்ஷனை எல்லாம் அறுத்துட்டு போய்ட்டானுங்க படுபாவி பசங்க...", என சபிக்காத குறையாக அந்த வேலையை செய்தவர்களை கடிந்து கொன்றார்.

"அப்டிலாம் யாரும் பண்ண முடியாது தாத்தா... நம்ம பார்குக்கு கவர்ன்மென்ட் லைசன்ஸ் இருக்கு... நா என்னன்னு பாக்குறேன்.. இப்போதைக்கு.... ம்ம்ம்ம்ம்ம்.... ஒரு சின்ன வேல பண்ணலாம்.. நம்ம தண்ணி லாரி அண்ணன கூப்புடலாம்"

அட எனக்கு இது தோனாம் போச்சே மா... தோ இப்போவே போய் பேசிட்டு வரேன்..", என அவர் கிளம்ப.. தனக்கு நேராக இருந்த இரு செங்காந்தள் மர கன்றுகள் நீரற்று கிடப்பதை அவளால் பொறுத்து கொள்ள முடியவில்லை.. தண்ணி லாரி வரும் வரை காத்திருக்க இயலாதவள் எழுந்துகொண்டு எங்கேனும் நீர் இருக்கிறதா என ஆராய.. அவழுக்காகவே அங்கு கிடந்தது ஒரு தூக்கி எறியப்பட்ட ஒரு லிட்டர் கேன்.

வாங்கியவர் தாராள வள்ளல் போலும்.. பாதி கேன் தண்ணீரை அப்படியே எரிந்து விட்டு சென்றிருக்கிறார்... நல்ல வேளையாக அதை மதுரா கண்டதால் இரு மரகன்றுகளுக்கு உயிர் கொடுத்தது...

அந்த தண்ணீரை மரகன்றிருக்கு ஊற்றியவள் அப்படியே குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டாள்.. அவள் நினைவில் அவளும் அவளவனும் அந்த கன்றை நட்டு வைத்த நாள்...

✨✨✨ S.M park...

சதாக்ஷ்யன் மதுராவின் கனவு பூங்கா... பத்து ஆண்டுகள் முன்பு வெற்று நிலமாக இருந்த சதாவின் பரம்பரை நிலம் இன்று இவர்களின் முயற்சியால் மக்களின் மகிழ்ச்சி பூங்கா.. இளநிலை ஜார்ணலிசம் கல்லூரியில் ஒன்றாக முடித்துவிட்டு ஓராண்டு காலம் சில முக்கிய தொலைகாட்சி நிறுவனங்களுக்கு செய்திகளை சேகரித்தும் தொகுத்தும் கொடுத்து தற்காலிக பணியின் மூலம் வந்த லாபத்துடன் தாங்களின் சேமிப்பையும் போட்டு இரண்டு ஆண்டு முன்பு பத்துசென்ட் இடத்தில் தொடங்கிய ஒரு தனியுரிமை பூங்கா தான் SM park.... அதன் ஒரு முனையில் இரண்டு சென்ட் நிலத்தில் அவர்களின் கனவு இல்லைத்தையும் கட்டி இரு மாதங்கள் முன்பு கிரகப்பிரவேசமும் நடந்து விட்டது..

அன்று தான் பூங்காவிர்க்கு புதிய மரங்களை நடும் பணியில் இறங்கினார்கள் இருவரும்... வரிசையாக மரங்களை நட்டு கொண்டே வந்தவர்கள் மறக்காமல் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரையும் அவற்றிற்கு வைத்து கொண்டே வர.. அதில் இரண்டே இரண்டு செங்காந்தள் மரக்கன்று இருந்தது..

"சதா.... எல்லா கன்டும் நெறைய இருக்கு இது மட்டும் ரெண்டே ரெண்டு தா இருக்கு.. சோ இதுக்கு ஸ்பெஷல் பேரு வைக்கணும்..."

"யூ ஆர் ரைட் மதி... நானும் கவனிச்சேன்... நா பேரு கூட யோசிச்சுட்டேன...

என்ன என்ன என்ன... யாரு பேரயாரு பேரு??", என அவள் ஆவலுடன் அவனை நோக்க.. அவனோ அந்த கன்றை கையில் எடுத்து நட்டு வைத்து விட்டு, "டாக்டர். கீதாஞ்சலி....", என கூற.. மதுராவின் கண்கள் கலங்கி விட்டது.. சிறு புன்னகையுடன் மற்றொரு கன்றை எடுத்தவள், "நானும் முன்னாடியே யோசிச்சேன் சதா...", என கூறி அதை நட்டவள், "பிரஃபஸர் விக்னேஷ்வரன்..., " என கூற.. அவளை மென் புன்னகையுடன் தன் தோளுடன் அனைத்து கொண்டவன் அவளுடன் சேர்ந்து அதற்கு நீரூற்றினான்.

கீதாஞ்சலி மற்றும் விகனேஷ்வரன், மதுராவின் இயற்கை எய்திய தாய் மற்றும் சதாக்ஷயணின் இயற்கை எய்திய தந்தை... இன்று பிள்ளைகளின் கரங்களால் இயற்கையின் ரூபமாகவே மறுவாழ்வு பெற்றுள்ளார்கள்...✨✨✨

இப்போது அதை எண்ணி கொண்டிருந்தவள் தோளில் உணர்ந்த ஸ்பரிசத்தில் நிமிர.., "மதுரா... எவ்ரிதிங் டன்.. லாயர் ரெடி... வா போய் பாத்து பேசிட்டு வரலாம்...", என கண்களில் பிரகாசத்துடன் அவள் கை பிடித்து தூக்கிவிட... எழுந்து கொண்டவள், "எல்லா பிரச்சனையும் சொல்லிடியா?", என கெட்டவள் அது யாரென கேட்க தவரினாள்.

ம்ம்.. சொல்லிட்டேன்.. அவங்களுக்கு ஓகே தா... ஆனா....

என்ன ஆனா??.. அதிகமா ஃபீஸ் கேக்குராங்களா...

ச்ச ச்ச.. அதெல்லாம் இல்ல.. சொல்ல போன பிரச்சினை சொல்லவும் ஃபீஸ கொரசுட்டாங்க.. ஆனா யாருக்கு எதிரா வாதாட பொராங்கன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவாங்கன்னு தா தெரியல" என தலையை தேய்த்து கொண்டே கூற.., "ம்ம்ம்.. அப்புடீங்கிற... சரி.... பேசி பாப்போம் வா....", என தன் உயிர்தோழன் உடன் பிறவா சகோதரனான சாதாவின் நண்பன் மிதுல்யன் உடன் தன் காதலனை மீட்டெடுக்க கிளம்பினாள் மதுரா..

சீற்றங்கள் தொடரும்...



Rate this content
Log in

Similar tamil story from Romance