வெண்பா வெண்பா

Romance

5  

வெண்பா வெண்பா

Romance

மன்னிப்பாயா தாரகையே 6

மன்னிப்பாயா தாரகையே 6

3 mins
503


பவித்ரா வீடு

     பிள்ளைகள் இருவரும் தூங்கிய பின் பெரிய ஐயா பேச ஆரம்பித்தார்.சதீஸ் இப்ப சரோவுக்கு ஐந்தாம் மாதம் ஆரம்பிக்க போது அதனால் வளைகாப்பு நடத்தளாம்னு இருக்கோம் நீ என்ன சொல்ற .


  தாத்தா வழக்கமாக ஏழு இல்ல ஒன்பதாவது மாதத்தில் தான செய்வாங்க. ஆமா பவி அப்படி தான் செய்வோம் ஆனா அது உன் அக்காவுக்கு இரட்டிப்பு மாதமா வருது அதனால் இப்பையே செய்யலாம் பார்க்குறோம்.



உன் மாமா என்ன வளைகாப்பு போட்டதும் நம்ம வீட்டுக்கா அனுப்பி வைக்கபோறாரு. நான் தான் உனக்கு மாதிரி இங்க வந்து பாக்கனும் என்றார் பவியின் அம்மா.



   அம்மா நீங்க என்ன சொன்னாலும் கோப பட்டாலும் உங்க மகளை நான் அனுப்பமாட்டேன் என்றான்.சரோ முதல் மூன்று மாதம் மிகவும் சிரமப்பட்டால் மசக்கையால் அப்போது பவி அம்மா நான் கூட்டி போய் பக்கத்துல வச்சு பாத்துக்கிறேன் என்றார அதற்க்கு மறுத்து விட்டு அவனே பார்த்தான்.அந்த கோபம் இன்னும் பவியின் அம்மாவிற்க்கு உண்டு. தன் மகள் அப்படி ஒரு சூழ்நிலையில் இருந்த போதும் அவளை அப்படி பக்கத்தில் வைத்து பார்த்து கொள்ள முடிய வில்லை அதையும் சரோ தான் பார்த்தால் அதனால் இவளுக்காது பார்க்க வேண்டும் என்று ஆசை பட்டார் அதையும் சதீஷ் ஒத்துக் கொள்ளவில்லை. 




 ஆனால் சதீஷ் என்றால் மாரிமுத்து மற்றும் பவானிக்கு மிகுந்த பாசம் அவர்கள் தன் மகன் போலவே பாவித்தானர் அதே மாதிரி தான் சரோவையும் வைத்து இருந்தனர்.இவ்வாறு இவர்களுக்குள் பேசிக் கொள்வது சகஜம்.



   சரி இப்ப அடுத்த மாதம் பத்தாம் தேதி நல்ல நாள் அன்னைக்கே மீனாட்சியம்மன் கோவில்ல போட்டுறலாம் என்று முடித்து வைத்தார் தாத்தா.



   சரி இப்ப இந்த விஷயம் நல்ல விதமாக பேசியாச்சு அடுத்து பவி உன் கிட்ட சில முடிவு கேட்க்கனும்.


என்ன தாத்தா எதுனாளும் சொல்லுங்க செய்றேன் ‌என்றால்.


இல்லமா இந்த விஷயம் நீ என்ன சொல்ற என்பதை வைத்தே நாங்க முடிவு எடுக்கனும் .


சரி கேளுங்க தாத்தா.


அடுத்து உன் வாழ்க்கையில் என்ன பண்ணபோற .


இது என்ன புது கேள்வி படிச்சு முடிச்சு டேன் சம்பாரிக்குறேன. அழகா இரண்டு பிள்ளைங்க இருக்காங்க அவுங்கள வளக்கனும் படிக்க வைக்கனும் ஆளாக்கனும்.



அது எல்லாம் சரி .இன்னும் கொஞ்ச நாள் ஆச்சுன்னா அப்பா எங்கனு கேட்பாங்க என்ன சொல்ல போற என்றார் அடக்கப்பட்ட கோபத்துடன் பவானி.



அது என்ன சொல்லனுமோ சொல்லி என் பசங்கள நான் வளத்துக்கிறேன.


என்னடி புரிஞ்சு தான் பேசுறியா இத்தன நாள் தான் அவன் யாரு என்ன ஏது எதையும் சொல்லல இனிமையும் சொல்ல மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்.



உன் வாழ்க்கைல கடைசி வரை இப்படி தான் இருக்க போறியா.உலகம் ரொம்ப மோசமானது டி அதுவும் கைல ஒரு பொட்டபிள்ளைய வேற வச்சு கிட்டு என்னடி பண்ணப்போற என்றார் கண்ங்களில் நீருடன். அவள் அப்பாவை பார்த்தால் அவர் எதுவும் பேச வில்லை அனால் அவரும் கவளையுடன் உள்ளார் என்பது அவர் அவளை பார்த்த பார்வையில் புரிந்து கொண்டால்.அம்மா அப்பா இருவரும் ஒரு பெண் பிள்ளை என்பதால் அதிக பாசம் ஆனால் அம்மா கொஞ்சம் கண்டிப்பாகவும் அதட்டி யும் விடுவார் ஆனால் அப்பா எப்பையும் அவள் செய்யும் சேட்டைகளையும் ரசனையோடு பார்க்க கூடியவர் அவளிடம் கடிந்து பேசியது கிடையாது .



தனக்கு அப்படி ஒரு துயரசம்பவம் நடந்தது என்று தெரிந்தும் கலங்கி போனவர் தன் மனதுக்குள் அவ்வளவு சங்கடங்களை சுமந்து கொண்டு தனக்கு பக்க பலமாக உள்ளார்.இப்போதும் தன்னை வாய்திறந்து கடிந்து பேச மனம் வரவில்லை.



     என்னடி கேட்டு கிட்டே இருக்கேன் பேசாம இருக்க என்றார்.அம்மா நீங்க எத்தனை தடவ கேட்டாலும் எனக்கிட்ட இருந்து நீங்க எதிர் பார்க்கும் பதில் வராது .வேற ஏதாவது இருந்தா பேசுங்க என்றாள்.


மனதிற்குள் சிரித்துக் கொண்டே தாத்தா சரிம்மா உன்ன பத்தி எல்லா விஷயத்தையும் சொல்லி வேற ஒரு நல்ல பையனாக பாக்குறேன் கல்யாணம் பண்ணிக்க என்றார்.    



       தாத்தா என்று அதிர்ந்தாள்.பின்ன என்ன உன்ன இந்த நிலைமைக்கு ஆளாக்குனவன் யாருனு அன்றைக்கு கேட்டோம் சொல்லல .அப்பறம் உன் வைத்துல குழந்தை இருக்குனு தெரிஞ்சு கேட்டோம் அப்பையும் சொல்லல.இப்பையும்பிள்ளைங்களுக்கு அப்பா வேனும் அவுங்க அப்பா யாருனு கேட்டோம் சொல்லல.அப்ப அவனை உனக்கு பிடிக்கல சரி இப்ப நாங்க எங்களுக்கு உனக்கு பிடிச்ச மாதிரி உன்னைய பத்தி எல்லா தெரிஞ்சு உன்னைய ஏத்துக்குற பையனா பாத்து கட்டி வைக்குறோம்.




    இல்ல தாத்தா எனக்கு அப்படி எல்லா யாரும் வேனா எனக்கு என் பிள்ளைங்க இருக்காங்க அதுவே போதும். அவுங்கள எப்படி சமாளிக்கனும் எனக்கு தெரியும் மறுபடியும் கல்யாணம் அப்படினு பேசாதிங்க.



  ஏன் சரோ சதீஷ் தம்பி பாத்துக்கிட்டு இருக்கிங்க ஏதாவது அவளுக்கு நல்லது சொல்லுங்க .அப்போது சரோ அம்மா நாங்க இத பத்தி அவ கிட்ட பேசலைனு நினைக்குறிங்களா.எல்லாம் பேசிட்டோம். இவ்வளவு ஏன் தாத்தா இனிமே தான் மாப்பிள்ளை பாக்குறேன்னு சொன்னார்.ஆனா எங்க கூட வேலை பாக்குற ஒரு டாக்டர் அவரே இவள் கிட்ட கேட்டாரு மாட்டேனுட்டா.எங்கள விட்டு பேச சொன்னாரு நாங்களும் எவ்வளவோ பேசினோம் மாட்டேன்னு சொல்லிட்டா.



    பவி இப்பையும் எல்லாரையும் வச்சு கேட்க்குறோம் பசங்க கிட்ட நாங்க எல்லாரும் பேசுறோம் .இப்பையும் ஒன்னும் கேட்டு போகவில்லை.சரினு சொல்லுடி என்றால் சரோ.


இப்போ நான் சொல்றது எல்லாரும் கேட்டுக்கங்க திருப்பி இந்த பேச்சு என் கிட்ட யாராவது மறுபடியும் பேசுனா உங்க யாருக்கிட்டையும் எதுவும் சொல்லாம ஏன் பிள்ளைகளை கூட்டிக்கிட்டு யாரும் கண்டு பிடிக்க முடியாத இடத்துக்கு போய்ருவேன் இத நான் சும்மா சொல்லல உறுதியாக சொல்றேன் என்றால்.  




    இதை கேட்ட அனைவரும் வாயை திறக்க வில்லை அமைதியாகி விட்டனர்.ஆனால் தாத்தா தான் மனதில் நினைத்ததை நிறைவேற்ற திட்டம் தீட்டினார்.ஆனால் இதை அறியாத பவித்ரா இனிமேல் யாரும் இந்த பேச்சை எடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் நிம்மதியாக இருந்தால்.ஆனால் அவளுக்கு தெரியவில்லை அவள் நிம்மதிக்கு ஆயுள் குறைவு என்பது. 


Rate this content
Log in

Similar tamil story from Romance