Nageswara Rao NDSV

Drama Inspirational Children

4.7  

Nageswara Rao NDSV

Drama Inspirational Children

வாழ்க்கை

வாழ்க்கை

2 mins
292


 ‘மகனே! நமது பூர்வீக நிலத்தை விற்கமாட்டேன்' என்று தாழ்ந்த குரலில் கூறினார் சூர்யா. 


‘அப்பா! பண்ணையை நம்மால் வைத்திருக்க முடியாது; அது பூர்வீக சொத்து; நிலத்தில் எனக்கும் உரிமை உண்டு; என்றாவது ஒரு நாள், அதை நான் மரபு உரிமையாகப் பெறுவேன்... அதனால்தான், அதை இப்போது விற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று அவரது மகன் கூறினான். 


‘எதிர்காலத்தில் இந்தப் பண்ணையை நீயே பார்த்துக் கொள்வாய் என்ற எண்ணத்தில் தான், உன்னை விவசாயத்தில் இளங்கலை பட்டம் படிக்க வைத்தேன்’. 


‘ஆம், விவசாயத்தின் பின்விளைவுகளை அறிந்த பிறகு தான் கணினி துறைக்கு மாறினேன்’. 


‘ஓ! அப்படியா? அதனால்தான் விவசாயத்தில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறாயா?’ 


‘அதைப்பற்றி பேசவேண்டாம் அப்பா! நிச்சயம் விற்றுவிடுகிறேன்' 


‘உனக்கு விவசாயம் பிடிக்கவில்லையென்றால், அதை நான் நிர்வாகிக்கிறேன்... அல்லது, நாம் அதை யாருக்காவது குத்தகைக்கு விட்டு விடலாம்’. 


‘அப்பா...என் எண்ணம் அதுவல்ல. நீங்கள் அதை விற்க வேண்டும் என்று நான் இன்னும் எத்தனை முறை வலியுறுத்த வேண்டும்?’. 


‘மகனே, விவசாயம் செய்யாமல் என்னால் வாழ முடியாது. உனக்கு பணம் வேண்டுமென்றால், ஒரு ஏக்கரை மட்டும் எனக்கு விட்டுவிட்டு மீதியை விற்றுவிடு. என் வாழ்வாதாரத்துக்காக அதில் பயிரிடுவேன். நான் இந்த உலகத்தை விட்டு போன பிறகு, நீ அதை விற்கலாம்’ 


'அப்பா, எனது ஆர்வம் அந்த பணத்தில் இல்லை, உங்களை கவனிப்பதில் தான்’ 

.. .. .. .. 

.. .. .. .. 

'என்ன சொல்கிறாய் மகனே?' என்று உணர்ச்சிவசப்பட்டு கேட்டார் சூர்யா. 


‘உண்மைதான் அப்பா! சிறுவயதிலிருந்தே, நீங்கள் நிதிக்காக அரசு அலுவலகங்கள், வங்கிகள், பணம் கொடுப்பவர்கள் மற்றும் தரகர்கள் பின் ஓடுவதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு வருடம் முழுவதும் பண்ணையில் உழைத்தாலும், எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதை உங்களால் கணிக்க முடியாது. என்னைப் பொறுத்த வரை, விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் மிகக் குறைவு. நான், உங்கள் ஒரு வருட வருமானத்தை ஒரே மாதத்தில் சம்பாதிக்கிறேன். 


நான் உங்களைப் பற்றி கவலைப்படுகிறேன். பயிர்கள் நஷ்டம் அடைந்தோ அல்லது பயிர்களுக்கு சரியான விலை கிடைக்காத, காரணத்தினாலோ விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற செய்தியை படிக்கும் போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. 


அப்பா, உங்களுக்கு அந்த நிலைமை வர நான் விரும்பவில்லை. உங்களை என்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறேன். இந்த நிலத்தை நாம் விற்காவிட்டால், நீங்கள் என்னுடன் வர சம்மதிக்க மாட்டீர்கள். என் கவலை உங்கள் மீது தான், பணத்தின் மீது அல்ல’. 

.. .. .. .. 

‘மகனே கேள்! நாம் பண்ணையை விற்றுவிட்டால், அதை வாங்கும் விவசாயி தற்கொலை செய்து கொண்டால், நமக்கு குற்ற உணர்ச்சி இருக்காதா?’. 


‘அது நமது கவலை இல்லை. அதற்கு நாம் பொறுப்பாக மாட்டோம்’. 


‘மிகவும் அலட்சியமாக இருக்காதே, மகனே! என்னிடம் ஒரு ஆலோசனை உள்ளது. உன்னுடைய ஒரு மாத சம்பளம் என்னுடைய ஒரு வருட வருமானத்திற்கு சமம் என்று கூறினாய் அல்லவா? பண்ணையை விற்பதற்கு பதிலாக, நாம் பண்ணையை குத்தகைக்கு கொடுத்து, உனது ஒரு மாத வருமானத்தை அதில் முதலீடு செய்வோம். மகசூல் நன்றாக இருந்தால், விளைச்சலில் பங்கு கிடைக்கும், இல்லையேல் நம் முதலீட்டை மட்டுமே இழக்க நேரிடும், நிலத்தை அல்ல. குத்தகை விவசாயியும் செயல்பாட்டில் ஆதாயம் பெறுவார்’. 

.. .. .. .. 

‘இது மிகவும் சுவாரஸ்யமாகத் தெரிகிறது, இதைத் தொடரலாம். உங்களை விட எனக்கு விலைமதிபற்றது எதுவும் இல்லை அப்பா! நீங்கள் தான் என் வாழ்க்கை’. 


முற்றும் 



Rate this content
Log in

More tamil story from Nageswara Rao NDSV

Similar tamil story from Drama