Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chriseeda Shinny

Drama Classics Fantasy

4.7  

Chriseeda Shinny

Drama Classics Fantasy

நேரமில்லை

நேரமில்லை

1 min
319


கண்கவரும் காட்சிகள் கண்ட கண்களுக்கு ,

இன்று நிமிர்ந்துப் பாக்க நேரமில்லை !

கதைகள் பல பேசிய உதடுக்கு ,

இன்று சிரித்து பேச நேரமில்லை ! 

அரவணைத்து நேசிக்கும் இதயத்திற்கு ,

இன்று அன்பு காட்ட நேரமில்லை !

கலைகள் பல கற்றக் கைகளுக்கு ,

இன்று கற்றுக் கொள்ள நேரமில்லை !  

பல மைல்கள் கடந்துவந்த கால்களுக்கு ,

இன்று கால்தடங்கள் உருவாக்க நேரமில்லை !  

எல்லா வளங்களை அனுபவித்த மனிதனுக்கு ,

அதைப் பண்படுத்த நேரமில்லை !

காசு , பணம் , சொத்து இருந்தும்,

அவன் கையில் நேரமில்லை !

சென்ற நேரத்தை மீண்டும் பெற முடியவில்லை !

ஓடும் நேரத்தை நிறுத்த முடியவில்லை !

நேரம் விரைந்துச் சென்றதோ ?

இல்லை மனிதன் சோர்ந்து நின்றனோ ?



Rate this content
Log in

Similar tamil poem from Drama