தீபாவளி
தீபாவளி
எப்போது விடியும் என்று,
வெடிகளின் எதிரே அமர்ந்து,
நேரத்தை கடத்திய நாட்களும்,
வெடிகளை எண்ணி எண்ணி,
வெடித்த நாட்களும்,
முகமறிந்து பேசாதவர்களும்,
சேர்ந்து மகிழ்ந்த நாட்களும்,
வீட்டினில் செய்யும் இனிப்புகளை,
உண்டு மகிழ்ந்த நாட்களும்,
மனதினில் அவ்வப்போது நிழலாட தான் செய்கிறது.....
இனி இந்த மாதிரியான நிகழ்வுகள்,
வாழ்வில் நிகழுமா என்ற கேள்வியுடனே...