Madhu Vanthi

Comedy Drama Classics

4  

Madhu Vanthi

Comedy Drama Classics

2k kids - 9

2k kids - 9

4 mins
271


"அடியே.... எந்திரிங்க டி .... சேத்தாபுல ரெண்டு நாள் லீவு விட்ர கூடாதே.... அப்படியே ஸ்கூல மறந்து விடிய விடிய மல்லாந்துரது.... எந்திரி டி இன்னைக்கு லீவ் இல்ல.... ஸ்கூல் இருக்கு ..... சீக்கிரமா எந்திருச்சு கிளம்புங்க....", என அம்மா ஒருபக்கம் அவர்களின் முதுகில் அடித்து எழுப்பி விட்டு கத்திக் கொண்டே இருக்க.... மெதுவாக கண்களை தேய்த்துக் கொண்டே எழுந்தார்கள் நம் இரட்டை வானரங்கள்.

இவர்கள் எழுந்ததும் அம்மா காலை வேலையை பார்க்க கிளம்பி விட, "ஷப்பா.... எவன்டா சண்டேக்கு அப்புறமா மண்டேவ வச்சது.... ச்சை.... ரெண்டு நாள் லீவ் விட்டுட்டு ஸ்கூலுக்கு போறது எவ்வளவு பெரிய வேலையா இருக்கு....", என சுஜி சலித்து கொண்டே சோம்பல் முரிக்க... சகோதரிக்கு தப்பாமல், "ஹ்ம்ம்... அது விட பெரிய கொடும.... ரெண்டு நாள் லீவ்ல தானே இருக்கப் போறீங்க.. அதனால படிச்சுட்டு வாங்கன்னு சொல்லி ஹோம் வர்க்க மல மாதிரி குடுத்துர்ராங்க.... அதுல பாதி மலையை தாண்டி வர்றதுகுள்ள இந்த ரெண்டு நாள் லீவு முடிஞ்சு போயிருது.... ரெஸ்ட்டே எடுக்க முடியல யப்பா....." என கொட்டாவி விட்டவாறு, கண்ணை கசக்கிய சபி, சுஜியை பார்த்து தங்கள் நிலையை எண்ணி நொந்து கொண்டாள்.....

அப்போதே சுஜிக்கு ஒன்று நினைவு வர... "ஹையையோ... நேத்து மேக்ஸ் வேற ஃபுல்லா போட்டு முடிக்கலையே.... இப்போ எழுதலாமா??...", என வேகமாக

கடிகாரத்தை பார்க்க... அது ஏழரை மணியை காட்டியது...., இன்னும் ஒரு மணி நேரத்தில் இவர்கள் வீட்டில் இருந்து கிளம்பி ஆக வேண்டும்.... இருவரும் குளித்து கிளம்பி.. அவரவர் ஆறடி தலை முடியை உலர்த்தி... பின்னலிட்டு... ரிப்பன் வைத்து அதன் பின் சாப்பிட்டு முடித்து கிளம்பவே இந்த ஒரு மணி நேரம் சரியாக இருக்கும்.... தினமும் தலைமுடிக்கு மட்டுமே அரை மணி நேரம் எடுத்துக்கொள்வதால்.... சரியாக இன்னும் இரண்டு ஆண்டில் கல்லூரிக்கு சென்றதும் முதல் வேலையாக முடியை வெட்ட வேண்டும் என அவர்கள் முடிவே எடுத்து விட்டார்கள்... அந்த தலை முடியால் அவர்கள் அவ்வளவு அனுபவித்து இருக்கிறார்கள்.

"ஹ்ம்ம்... டைம் இல்லையே..... இப்போ என்ன பண்ண... ஸ்கூல் போனதும் எழுதலாமா??.. அஹான்... ஃபர்ஸ்ட் ஹவர் டெஸ்ட்க்கு இருக்கு... அதுக்கு ரிவிஷன் பண்ணனும்.... செகண்ட் ஹவர் மேக்ஸ்.... ஹையோ கடவுளே மாஸ்டர் நடக்கும் இன்னைக்கு லீவா இருக்கணும்....", என விடிந்ததும் படிப்பு புராணத்தை ஆரம்பித்துவிட்டாள் சுஜி.

"ஹே... நீ ஒன்னும் பண்ண வேணாம் டி... அரைகுறையா போட்டு வச்சிருக்கிறதே போதும்.... நேரா ஸார் கிட்ட போய்.... சார் சார்... நா மண்டையை பிச்சுகுட்டு ஸம் போட்டும் ஆன்சர் மட்டும் சரியா வரல சோ.... கொஞ்சம் டேளட்டா இருக்கு... சொல்லி குடுங்க ஸார்ன்னு அவர் முன்னாடி போய் நின்னா போதும்.... அவரே மொத்தத்தையும் போட்டு குடுத்துருவாரு....", என சபி தன் மாஸ்டர் ப்ளானை கூற.... "ஹான்... நல்ல ஐடியா... ஆனா இது வர்க் அவுட் ஆகுமா??...", என சுஜி ஆர்வமாக சபியை பார்க்க..., "ஹான்... ஹான்... அதெல்லம் நல்லாவே வர்க் அவுட் ஆகும்.. இந்த டெக்னிக்க வச்சு தானே நாங்க எங்க மிஸ் கிட்ட தப்பிகிரோம்... நீயும் டிரை பண்ண... இப்போ வா போய் பல்லு விளக்கலாம்....", என ஒரு மாஸ்டர் பிளானுடனேயே காலை வேலையை தொடர்ந்தார்கள் அந்த இரட்டை வானரங்கள்..

            ******

காலை எட்டு மணி....

       மித்ரா ஹர்ஷன் எப்போதோ அரக்க பறக்க பாதி உணவை உண்டும் மீதியை அப்படியே விழுங்கியும் முடித்து விட்டு எப்போதோ கல்லூரி பேருந்தை பிடிக்க பறந்திருந்தார்கள்.... கீர்த்தி இப்போது இவர்களின் வீட்டில் தங்கி இருப்பதால்... டான்ஸ் கிளாஸ் முடிந்ததும் அவளை வீட்டிற்கே அழைத்து வந்து விட்டான் அர்ஜுன்....

அவர்கள் இருவரும் வந்ததும் அனைவரும் உணவருந்த துவங்க... சங்கரி கீர்த்தியை மட்டும் விழுந்து விழுந்து கவனிப்பதை பார்த்து தீரா அவளை முறைக்க தொடங்கினாள்....

அவள் முறைப்பின் காரணம் அறிந்த சங்கரி, "என்ன லுக்கு... புள்ள நம்ம வீட்டுல கொஞ்ச நாள் தா இருக்க போறா... அவள நம்ம தானே நல்லா கவனிக்கும்.... அதா கவணிச்சுக்குறேன்... ", என பதிலுக்கு அவளை போலவே மெல்லமாக முறைக்க... "ம்ம்... மம்மி... நீ நல்லா கவனி.. கூடவே என்னயவும் கவனி... நானும் ஸ்கூலுக்கு போகனும்..." என தனது வெறும் தட்டை தூக்கி காட்ட... "கண்ணு முன்னாடி தானே இட்லி இருக்கு.... எடுத்து வச்சுக்கிறதுக்கு என்ன வலிக்குது....", என கூறி கொண்டே நான்கு இட்லியை எடுத்து வைத்தார்... அந்த இட்லியையும் கீர்த்தியை மாற்றி மாற்றி பார்த்து முறைத்துவிட்டு பின் முகத்தை உர்ரென வைத்து கொண்டு, "இப்போதைக்கு எனக்கு இட்லி தா முக்கியம்", என இட்லியை விழுங்க தொடங்கினாள் தீரா.

வழக்கம் போல மயூ இவர்களை கண்டு தலையில் அடித்து கொள்ள... ரக்ஷவ் சிரித்து கொண்டே உண்டு முடித்தான்...

கீர்த்திக்கும் சிரிப்பு தான் வந்தது... வெளியில் சிறுபிள்ளை போல் இப்படி தன்னை முறைப்பவள்... தன்னுடன் தனிமையில் இருக்கையில் அக்கறையாக கவனிப்பது இவளுக்கு பிடித்திருந்தது... சில நேரம் தன்னை விட குழந்தையாக நடந்து கொள்வாள்... பல நேரம் தனக்கு ஒரு அன்னை போல் நடந்து கொள்வாள்...

இப்படியே உணவை முடித்து விட்டு தத்தம் பைகளை தூக்கி கொண்டு வாயிலுக்கு வர... அர்ஜுன் தனது பைக்கில் ஏறுவதர்க்குள் தீராவும் கீர்த்தியும் அந்த வண்டியை பிடித்து கொண்டார்கள்..

"நா தா முன்னாடி ஒக்காருவேன்... நீ பின்னாடி ஒக்காரு.. " என தீரா கீர்த்தியை முந்தி கொண்டு வந்து நிற்க..., "நா பின்னாடி ஓக்காந்தா இவன் போற வேகத்துக்கு விழுந்துருவேனொண்ணு பயமா இருக்கு.... நீயே பின்னால ஒக்காரு", என கீர்த்தி அவளை முந்தி கொண்டு வர..."அப்போ எனக்கு பயமா இருக்காதா??...", என தீரா கீர்த்தியை முறைக்க தொடங்க.... இருவருக்கும் பின்னால் வந்த மற்ற மூவர், "இன்னைக்கும் ஆரம்பிச்சுருச்சுகளா?..", என ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.

கீர்த்தி இங்கு வந்த இந்த சில நாட்களாக இதுவே தொல்லையாக போய் விட்டது.... இப்படியே விட்டால் இன்று நேரத்திற்கு கிளம்ப முடியாது என நினைத்து... "கீர்த்தி மா... நீ ரக்ஷவ் கூட போ... தீரு.. நீ முன்னாடி ஓக்காரு.. நா பின்னாடி ஓக்காந்துகுறேன்....", என நாட்டாமையாய் ஆஜரானாள் மயூரி.

"ச்சே.. நிம்மதியா சண்ட கூட போட விட மாற்றாளே..." என வாய்க்குள் முனங்கியவாறு தீரா அர்ஜுனுக்கு பின்னால் அமர.. அவளுக்கு பின்னால் மயூ அமர்ந்து கொண்டாள்... கீர்த்தி ரக்ஷவுடன் கிளம்பினாள்...

வளர்ந்தாலும் இன்னுமும் குழந்தை போலவே நடந்து கொள்ளும் தன் பிள்ளைகள் அனைவருக்கும் டாட்டா காட்டி வழியனுப்பிவைத்தார் சங்கரி...

            ******

அன்று திங்கள் கிழமை என்பதால் சீக்கிரமே காலை வழிபாட்டுக் கூட்டம் துவங்கிவிட்டது.... சரியாக கேட் மூடும் வேளையில் உள்ளே வந்திருந்த சபியும் சுஜியும்.. வகுப்பிற்கு செல்லும் முன்பாகவே அனைவரும் வரிசையில் நிற்க வந்து விட.. அதனால் பேக்கை அங்கேயே ஒரு ஓரமாக கழற்றி வைத்து விட்டு வரிசையில் நின்று விட்டார்கள்...

ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஒரு பக்கம் வரசையாக நிற்க... மற்ற மூன்று வகுப்பும் மற்றொரு திசையில் வரிசையாக நின்றிருந்தார்கள்... வழிபாட்டு கூட்டம் இறை வணக்கத்துடன் துவங்கியது... பின் தமிழ் தாய் வாழ்த்து முடிந்து அன்று பிரெயர் நடத்தும் ஏழாம் வகுப்பு மாணவ மாணவிகள் திருக்குறள், பொது அறிவு, பழமொழி, இன்றைய தத்துவம்... தலைப்பு செய்தி என வரிசையாக கூறி முடிக்க... இறுதியாக மாணவர்களை ஊக்க படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு குட்டி கதை கூறுவார்கள்... இம்முறை அந்த வாய்ப்பு நம் தலைமை ஆசிரியர் சுகன் ஸாரையே அடைந்தது...

அவர் மைக்கை கையில் எடுத்த அடுத்த நோடி, அனைவர் உள்ளத்திலும் ஒரு உற்சாகம்... அவர் பேசுவதை கேட்பதற்காக அல்ல... அவர் பேசினால் மைக்கை வைப்பதற்கு தாமதமாகும் அதனால் முதல் பாடவேளையும் தாமதமாகும் என்ற காரணத்தினால் தான்.... அதே சமயம் போதும்னாலும் இவரு பேசுவாரே.. அவ்வளவு நேரம் நிக்கனுமே...", எனவும் சிலர் நொந்து கொண்டார்கள்....

கிட்டதட்ட இருபது நிமிடம் அவரே தான் பேசினார்... இறுதியாக... "பேசனும்னா இன்னைக்கு ஃபுல்லா உங்க கிட்ட நெறய பேச வேண்டி இருக்கு... ஆனா நீங்களும் பரிச்சைக்கு படிக்கனும்ல...", என்று கூறும்போது தான் அப்படி ஒன்று இருப்பதே அனைவருக்கும் நினைவுக்கு வர... அதை எண்ணி நொந்து கொண்டவர்களுக்கு மற்றொரு அணுகுண்டை அசால்ட்டாக வீசினார் சுகன் ஸார்....

கம்மிங் மன்டே ஆன்வர்ட்ஸ் உங்களுக்கு குவாட்டர்லி எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது... ஸ்கூல் லேட்டா ஸ்டார்ட் ஆனதால மிட்-டேர்ம் லாம் இல்ல... ஸ்ட்ரைட்டா கால் பரிச்சை தா...... சோ வெல் பிரிபார் ஃபார் இட்...", என கூறிவிட்டு பிரெயருக்கு வழி விட... "அதுக்குள்ள எக்ஸாமா ???", என வாயை பிளந்து கொண்டே தேசிய கீதத்தை முடித்து அவரவர் வகுப்புக்கு சென்றார்கள்.

😜😈GALAATTAS ON THE WAY 😈🤪


Rate this content
Log in

Similar tamil story from Comedy