Roja rani

Romance Classics Others

4.6  

Roja rani

Romance Classics Others

இரண்டாவது நாள்

இரண்டாவது நாள்

8 mins
7.7K


    இரண்டாவது நாள்


அதிர்ந்து போன வரலக்ஷ்மி மகளை பார்த்து

"என்னடி சொல்றே??!!"

"...."

"நீ சொல்றது உண்மையா??"

"....."

"உன்ன தான்டி கேக்கறேன்.. உண்மையாதான் சொல்றியா??"

"எத்தன முறை சொல்லுவாங்க... ஆமா.. ஆமா.. ஆமா. போதுமா?" சலித்து கொண்டவள் கோபமாக பதிலளித்தாள் சாகக்ஷி

"குடும்ப மானத்தையே வாங்கிட்டியேடி பாவி!! உங்க அப்பாவ யோசிச்சு பார்த்தியா!? அவர் மரியாதையை யோசிச்சு பார்த்தியா!? அட்லீஸ்ட் உனக்காக பார்த்து பார்த்து பண்ணுவாளே உங்க அக்காவை யோசிச்சு பார்த்தியா!? அவ வாழ்க்கைய பற்றி கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா!?"

"எல்லாரையும் பத்தி யோசிகிட்டு இருந்தா என் வாழ்க்கையை நான் எப்போ வாழறது?" என்று முன்பு முனுத்தாள்

"அதுக்காக இப்படி ஒரு வேலை செய்ய எப்படி உனக்கு மனசு வந்தது?"

என்று சாக்க்ஷியின் தலைமுடியை பிடிக்கச் சென்றவள் கையை தட்டி விடுகையில் தன் தந்தை வரவைக் கண்டு அவர் முகத்தை பார்க்க தயங்கிய சாக்க்ஷி தன் அறைக்குச் சென்றார்

கலங்கிய கண்களுடன் சண்முகத்தைப் பார்த்த வரலக்ஷ்மி

   "என் பொண்ணு எத செய்தாலும் சரியா தான்  வக்காலத்து வாங்குவீங்களே, இப்போ உங்க பொண்ணு செய்துட்டு வந்திருக்க வேலைய பாத்தீங்களா!!???"

எதையும் அறியாத சண்முகம் உள்ளே வந்து அமர்ந்தபடியே

"ஆரம்பிச்சிட்டீங்களா... ஆத்தாலுக்கும் மகளுக்கும் மாசத்துக்கு ஒரு குடிமிபிடி

சண்டைப் போடலன்னா... தூக்கமே வராதா..."

" வீட்ல என்ன நடக்குதுன்னு தெரியாம பேசாதீங்க. என்றவள் அழுதுகொண்டே அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

அதிர்ந்து போன சண்முகம் வாயடைத்து போனார். வீடே அமைதியானது. அழுகையை தாண்டி கோபம் கொந்தளிக்க

"பொண்ண பொண்ணா வளர்க்கனும் பையன் மாதிரி வளர்க்கறேன்னு அவ பேச்சு கேட்டு ஆடனீங்களே... இப்போ என்ன ஆச்சு!! பையன் இப்படி ஒரு காரியத்தை செய்துட்டு வந்திருந்தா நாம இப்படியா உட்கார்ந்திருப்போம்??"

வாயடைத்து அமர்ந்திருந்தவரை பார்த்து

"அவள பத்தி பேசினாலே வறிஞ்சி கட்டிகிட்டு வருவீங்களே... இப்போ பேசுங்க..."

அப்போதும் பதில் இல்லை

"அய்யோ.... எப்படி இருந்த மனுஷன இப்படி ஆக்கிட்டாளே பாவி... " என்றபடியே எழுந்து சென்றாள்

எந்த சத்ததிற்க்கும் சாக்க்ஷி வெளியே வரவில்லை. மணி ஏழைத் தாண்டியது. வீட்டிற்குள் வந்த சரண்யா அப்பாவின் சோகத்தையும் அம்மாவின் கண்ணீரையும் கண்டு தன் தாயின் அருகில் சென்று

"என்னம்மா... என்ன ஆச்சு?? எதாவது பிரச்சனையா?"

வரலக்ஷ்மி சண்முகத்தை பார்த்து முறைக்க அப்பாவை திரும்பி பார்த்த சரண்யா மீண்டும் தாயிடம்

"சொல்லும்மா.. என்"

"கேட்கறால்ல.. சொல்லுங்க, கல்யாணம் ஆகமலே, கண்ணி கழியாமலே அம்மா ஆகப்போறேன்னு சொல்லுங்க. குலுகுலுன்னு இருக்கும்." என்று சத்தம் போட்டாள்.

"என்னம்மா சொல்றீங்க? எனக்கு ஒன்றும் புரியல"

"ஆமான்டி எதையும் புரிஞ்சிக்காத இப்படி வெகுளியாவே இரு. எல்லாரும் அவங்க அவங்க வாழ்க்கையை வாழட்டும்." தாயின் கோபத்தை உணர்ந்தவள்

"பொறுமையா இருங்கம்மா.. நீங்க நினைக்கிறா மாதிரி எல்லாம் ஒண்ணும் இருக்காது. நானே அவள் கூப்பிட்டு கேட்கிறேன்." என்று தங்கையை அழைக்க தயாரானவளை கோபமாக அழைத்தாள் வரலக்ஷ்மி

"சரண்யா. நீ யாரையும் கூப்பிட்டு கேட்க வேண்டாம். நான் ஒன்னும் கற்பனை பண்ணி பேசல, அவளே வந்து சொன்னது தான். அம்மனி வேலைக்கு சேர்ந்து முழுசா பத்து மாசம் ஆகல. அதுக்குள்ள வயித்துல மூனுமாசம்ன்னு வந்து நிக்கறா. கூட வேலை பாக்குற அரவிந்த் தான் காரணம்ன்னு என் கிட்டயே வந்து சொல்றா. அவன பார்த்துலே எனக்கு பிடிக்காது. அவன்தான் காரணம்ன்னு கேட்க எனக்கு எப்படி இருக்கும்?.. திமிரு பிடிச்சவள். நல்லாவே இருக்க மாட்டாள்."

"அம்மா... ப்ளீஸ்.. சும்மா இருங்கம்மா"

"அப்படித்தான்டி சொல்லுவேன். எங்கள பத்தி யோசிக்கலன்னாலும் பரவாயில்லை, உண்ண பத்தி கூட நெனச்சு பாக்கலையேடி அந்த கல்நெஞ்சக்காரி..."

  "அம்மா, நம்ம பொண்ண நாமலே நம்பளன்னா எப்படிம்மா? அவ ஏதாவது சொல்லப்போக நீங்க ஏதாவது புரிஞ்சுகிட்டீங்கன்னு நினைக்கிறேன். அப்படி ஏதாவதுன்னா அவ என்கிட்ட தான் முதல்ல சொல்லி இருப்பா. எனக்கு தெரிஞ்சு அவளும் அரவிந்தும் நல்ல பிரண்ட்ஸ்! அப்பா கூட கேட்டு பாருங்க! அப்பா நீங்களே சொல்லுங்க"

ஆவேசமாக பேசி அவளிடம் அமைதியாய் பதிலளித்தார் சண்முகம்

   "அவளுக்காக நான் பேசத் தயார். இவ்வளவு தூரம் நீயும் அவளுக்காக பேசிட்டு இருக்கே. ஆனா அவ மேல தப்பு இல்லன்னா அவ ஏன் இன்னும் வெளியே வரல? அவ மேல பழி விழுந்தா அவளுடைய குரல் தானே ஓங்கி நிற்கும்? எதுக்கு இவ்ளோ அமைதி? எனக்கு புரியலம்மா!!"

   "என்னப்பா நீங்களும்... இருங்க நான் அவளை கூப்பிட விசாரிக்கிறேன்"

   "சரண்யா"

என்று சத்தம் போட்டு சரண்யாவை வாயை அடைத்தாள். பயத்தில் அமைதியானவளிடம் கோபமாய் கொந்தளித்தார் வரலட்சுமி

   "உன் தங்கச்சி கெட்டு போய்ட்டாள். அதுதான் உண்மை. அவ உன்னை பற்றியும் உன் எதிர்காலத்தை பற்றியும் யோசிக்கலனீனு மனசு குமிரி போய்க் கிடக்கிறேன்!! என நம்பவில்லை நீ? இங்க பாருடி... இதை பத்தி மட்டுமில்ல இனி அவ கிட்ட ஒரு வார்த்தை பேசினாலும் நான் செத்ததுக்கு சமானம்! என் மேல சத்தியம்" என்று சரண்யாவின் கையை அவள் தலைமீது வைத்து கூறினாள் வரலட்சுமி.

தாயின் ஆவேசத்தில் உண்மையை உணர்ந்தவள் வாயடைத்துப் போனாள். வரலட்சுமி சமையலறைக்குச் செல்ல சரண்யாவும் தன் தந்தையின் அமைதியைக் கண்டு தங்கை இருந்த தன் அறைக்கு எழுந்து சென்று தன் உடையை மாற்றிக் கொண்டு முகத்தை கழுவிக் கொண்டு வெளியே சென்ற சரண்யாவிடம் சாக்ஷி பேசக்கூட முயற்சி செய்யவில்லை

சண்முகம் மனத்தில் பழைய நினைவுகள் வந்து சென்றன

    "பாரும்மா... இதுவரைக்கும் நீ எப்படி வேணா இருந்திருக்கலாம். இப்போ நீ பெரிய பொண்ணாகிட்டேல்ல... இனி அடக்க ஒடுக்கமா இருக்கணும். வெளியே போகும்போது தல குனிஞ்சபடியே போயிட்டு தலை குனிஞ்சபடியே வரணும்"

   "ஏன்பா?"

   "நீ தலை குனிஞ்சு நடந்தா தாம்மா அப்பா தலை நிமிர்ந்து நடக்க முடியும்"

   "போன வாரம் வரைக்கும் நீங்க தலை குனிஞ்சா நடந்துட்டு இருந்தீங்க?"

   "அப்படி இல்லம்மா... போன வாரம் வரைக்கும் நீ சின்ன பொண்ணு. இப்போ நீ பெரிய பொண்ணு"

    "ஒரு வாரத்தில் அதே வயசுதானே இருக்கும்"

   "அதில்லம்மா..."

   "அப்பா. எனக்கு புரியுது. என் உடம்பில் தான் மாற்றமே தவிர என் மனசளவுல நான் அப்படியே தான் இருக்கேன் அப்படிங்கறது தான் உங்ககிட்ட சொல்ல வரேன். ஏன்ப்பா பொண்ணுங்க தலைநிமிர்ந்து பார்த்தாலே தப்பு பண்ண மட்டும் தானாப்பா?"

இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத சண்முகம் அமைதியானார்

    "நான் தலை குனிந்து நடக்க நான் எந்த தப்பும் பண்ணல. நீங்க தலை குனிஞ்சி நடக்கிற மாதிரி நான் எந்த தப்பும் பண்ண போறதும் இல்ல. அப்புறம் எதுக்குப்பா இந்த ஃபார்மாலிட்டீஸ்" என்று சிறு சிரிப்புடன் துள்ளி குதித்து ஓடினாள்.

வளர்ந்த சாக்க்ஷியிடம் சண்முகம்

    "முதல்முறையாக கோயட்ல படிக்க போற... ஏதாவது பிரச்சனை வந்து போகுது

   "உங்க பொண்ணு சண்டை வலிக்காம இருந்தா சரி." வரலட்சுமி மதிய உணவை சாக்க்ஷியிடம் கொடுத்தபடியே கூறினாள்

   "சும்மா இருடி. இதுவரைக்கும் கேர்ள்ஸ் ஸ்கூல்லையே படிச்சவ, கோயட்ல ஆம்பிளை பசங்க வேற படிப்பாங்க"

   "ஆம்பள பசங்கன்னா என்னப்பா? அவங்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைச்சிருக்கு?"

   "நான் அப்படி சொல்லலாமா..."

    "அப்பா சண்டை போடுறது என்னோட ஹாபி இல்ல. எனக்கு தப்புன்னு தெரிஞ்சா கேட்பேன்! அங்கே எதுவும் தப்பில்லைன்னா நான் ஏன் கேட்க போறேன்? அதுமட்டுமில்ல ராகிங் எல்லாம் என்டர்டைன்மென்ட்! இது காலேஜ் லைஃப்ல மட்டும்தான் கிடைக்கும். வேற எந்த வயசுலையும் கிடைக்காது. அதையெல்லாம் என்ஜாய் பண்ணிட்டு போயிட்டே இருக்கணும்"

   "இருந்தாலும் ஆம்பள பசங்க முன்னாடி..."

    "ஆம்பள பசங்க மட்டும் என்ன வானத்தில் இருந்து குதிச்சா வந்தாங்க? அவங்களும் அம்மா அக்கா தங்கச்சின்னு குடும்பத்தோட வாழ்ந்துட்டு வரவங்க தான்ப்பா. அவங்களுக்கும் மனசாட்சி எல்லாம் இருக்கு நிம்மதியா அனுப்பி வைங்க"

   "சரிம்மா. பத்திரமா போயிட்டு வா."தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு புறப்பட்டவளைப் பார்த்து

    "என் பொண்ணுனா என் பேச்சை தட்ட மாட்டாள். இதுவே உங்க பொண்ணு பாருங்க! எப்ப பாத்தாலும் எதிர்த்து எதிர்த்து பேசிகிட்டு, கொஞ்சமாவது அடங்குறாளா" வரலட்சுமி சண்முகத்தை பார்த்து கேட்க

    "நான் அவளை பையன மாற்றி வளர்த்திருக்கேன்டீ! தைரியமா... நேர்மையா..."

    "போதும் போதும் உங்க பொண்ணு புராணம்"

வேலைக்கு சென்ற சாக்கஷி அரவிந்துடன் வண்டியில் வந்து இறங்க வரலட்சுமி

   "யாரடி அவன்?"

   "கூட வேலை செய்கிறவன்!"

    "எதுக்கு அவனா கூட வந்து இறங்குறே?"

    "இந்த பக்கமா போறேன். வா அப்படியே உன்ன டிராப் பண்றேன்னு சொன்னான். அதான் வந்தேன்!"

    "அவ்வளவுதானா?"

   "ஸ்ஸ்ஸ்சப்ப்பா...." என்று சலித்துக் கொண்டவள் தன் தந்தையைப் பார்த்து

   "அப்பா, எனக்கு இப்ப லவ் பண்றதுக்கோ கல்யாணம் பண்றதுக்கோ எந்த ஐடியாவும் இல்ல. இவங்க கற்பனையை கொஞ்சம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, அக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்கிற வேலைய மட்டும் பார்க்க சொல்லுங்க. செவ்வாய் தோஷம், சூரியன் உக்கறம், மூக்கு சரியில்ல, நாக்கு சரியில்லன்னு தட்டிக் கழிக்கிறத விட்டுட்டு, அவளுக்கு பிடிச்சு இருக்கான்னு கேட்டு முடிவு எடுக்க சொல்லுங்க. இவங்க போய் வாழ போற மாதிரி குறை சொல்லிக்கிட்டு"

   "அடி" என்று கோபமாக வரலட்சுமி கூறியதும் சிரித்தபடியே தன் அறைக்கு சென்றாள். சண்முகத்தின் சிரிப்பு சத்தம் மனதில் கேட்க நிஜத்தில் முகம் வாடியிருந்தது

   "என்ன நீங்களும் அவ சொல்றது சரிங்கிற மாதிரி சிரிக்கிறீங்க ஒரு தாயா நல்ல வரன் பார்க்கிறது தப்பா அவளுக்கு செவ்வாய்தோஷம் இருந்தால் நான் என்ன செய்யறது" அன்றைய வரலட்சுமியின் புலம்பல் மெல்ல அவர் காதில் இருந்து விலகியது. இவ்வாறாக இரவு முழுவதும் சிந்தனையில் மூழ்கிப் போனார் சண்முகம்.

    இரவு அனைவரும் உண்ணாமல் உறங்கிப் போனார்கள். காலை விடிந்தது சரண்யா அம்மா அப்பாவிற்கு காபி கொண்டு வந்து கொடுக்க, காய்கறி அறிந்து கொண்டிருந்த வரலட்சுமி முகம் கழுவிக்கொண்டு வந்த சண்முகத்திற்கு காபியை எடுத்துக் கொடுத்துவிட்டு

    "என்ன முடிவு பண்ணி இருக்கீங்க" பொறுமையாக கேட்டார்

    "சரண்யா ஆபீஸ் கிளம்பட்டும். சாக்கஷி கிட்ட கொஞ்சம் பேசணும். அப்புறம் தான் முடிவு பண்ணனும்"

    மணி எட்டை தாண்ட சரண்யாவிற்கு முன் சாக்க்ஷி பணிக்கு புறப்பட்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினாள் ஹாலுக்கு வந்து மதிய உணவைக்கூட எடுத்துக் கொள்ளாமல் சென்றவளை வரலட்சுமி அவசரமாய் நிறுத்தினாள்

   "ஏய் சாக்கஷி. நில்லு. எங்க போற?"

   "இது என்ன கேள்வி? ஆபீசுக்கு தான்!"

   "சரண்யா தானே 8 மணிக்கு கிளம்புவா? நீ 9 மணிக்கு தானே கிளம்புவே? உன் அக்கா கிட்ட மடிப் பிச்சை எடுக்க வெளியே போய் இடம் பாக்குறியா?"

   "அம்மா என்னமா பேசுறீங்க நீங்க?" சரண்யா சங்கடப்பட்டதும்

   "இது என் வாழ்க்கை. யார்கிட்டயும் மடி பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை"

   "சாக்க்ஷி நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" சண்முகம் கூற

   "இனி பேச எதுவும் இல்லப்பா. ஆக வேண்டிய வேலையே பாருங்க" என்றவள் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து வேகமாக புறப்பட்டாள்

   "பாத்தீங்களா திமிர? உங்களுக்கே ஆர்டர் போட்டுட்டு போறாங்க மகாராணி! இவ்வளவு திமிர் பிடித்தவள் என் வயித்துல சுமந்து நினைச்சு நினைக்கும் போது வயிறு எரியுது. விளங்காமல் போக, அவ வயித்துல வளருது மண்ணா போக," சாபத்தை கொட்ட சரண்யா

    "அம்மா!! சும்மா இருங்க பிளீஸ்..."

   "இங்க பாருடி அவளை வெளியே வெச்சு பேசலாம்னு கனவு கூட காணாத" வரலட்சுமி மதிய உணவை சரண்யாவிடம் கொடுத்து வழியனுப்பி வைத்தாள்

பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சாக்கஷியை அழைத்தபடியே சரண்யா ஓடிவர, சாக்க்ஷி அதை பொருட்படுத்தாமல் வந்த பேருந்தில் ஏறிச் சென்றாள்

வீட்டில் சாப்பிட்டு முடித்ததும் சண்முகத்திடம் வரலட்சுமி

   "என்ன செய்யலாம்னு முடிவு பண்ணி இருக்கீங்க"

   "என்ன செய்றது! கல்யாணம்தான்.. வேற என்ன செய்ய முடியும்?"

   "நானும் அதைத்தான் நினைச்சேன். மாப்பிள்ளை..."

    "என்ன கேள்வி கேக்குற? யார் காரணமோ அவனுக்கு தான் கட்டிக் கொடுக்க முடியும்"

     "உங்களுக்கு என்ன கிறுக்கு புடிச்சி போச்சா? பெரியவள வீட்ல வச்சுக்கிட்டு சின்னவளுக்கு எப்படி கல்யாணம் பண்றது? ஏற்கனவே ஒழுங்கா வரன் வரமாட்டேங்குது. இதுல இந்த எழவெடுத்தவளுக்கு முதல்ல கல்யாணம் பண்ணி வச்சா? பெரியவிளை கேட்டு யார் வருவாங்க? அதான் வெட்கம் கெட்டுப்போய் கெட்டு போயி வந்து நிற்கிறாள். அவளுக்குதான் பெரியவ மேல அக்கறை இல்லை. இவளும் நீங்க பெத்த பொண்ணு தானே? உங்களுக்கு அக்கறை இல்லாம போச்சா?"

   "என்ன பேசுற வரலட்சுமி? ஒன்பது வருஷமா சரண்யாவுக்கு வரேன் தேடிட்டு இருக்கோம். அப்ப எல்லாம் அமையாத வரன் இந்த ரெண்டு மூணு மாசத்துலயா கிடைச்சிட போகுது? இதுக்கப்புறம் பார்த்து, பேசி, கல்யாணம் முடிக்கிறதுக்குள்ள என்ன நடக்கும்னு நினைத்துப்பார்? குடும்ப மானம் கப்பல் ஏறிடும். அதனால பர்ஸ்ட்டு சாக்கஷிக்கு கல்யாணத்தை முடித்து விடலாம்"

  "இதுக்கு நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்"

   "சரி என்ன பண்ணலாம் நீயே சொல்லு"

   பேசாம போன மாசம் சிங்கப்பூரிலிருந்து வரன் வந்து கேட்டாங்க இல்ல அவங்களுக்கு சரண்யாவை திரும்பவும் பேசலாமா? அவங்க தான் கல்யாணத்தை சீக்கிரம் பண்ற ஐடிவுல இருக்காங்க"

   "அவனுக்குதான் தலையில் முடி இல்லை வயசான மாதிரி இருக்குன்னு சொல்லி வேணான்னு சொன்னியே"

   "அதுக்கு என்னங்க பண்றது..?" தயக்கத்துடன் கூறினாள் வரலட்சுமி

    "அதைவிட போனவாரம் ப்ரோக்கர் காட்டினார் பாரு. கவர்மெண்ட் டீச்சர் வேலையில இருக்கிற ஒரு வரன். அதைப் பார்க்கலாமா?

   "ஐயோ அவனா போட்டோல பார்க்கும்போதே பேக்கு மாதிரி இருந்தான். நேர்ல எப்படி இருப்பானோ? அவன போய் எப்படி உங்களுக்கு பிடிச்சிது?"

   "அப்படி இல்லை லட்சுமி. சிங்கப்பூர் வரனுக்கு பொண்ண கொடுத்தா கல்யாணம் ஆன கையோட அவன் கிளம்பி ஃபாரின்க்கு போயிடுவான். அவன் வந்து நம்ம புள்ளைய கூட்டிட்டு போக ஆறு மாசமோ ஒரு வருஷமோ ஆகும். ஏற்கனவே நம்ம பொண்ணுக்கு லேட் மேரேஜ் இதுல என்னும் வாழவிடாமல் காத்துக்கிட்டு இருக்கிற பொழப்பு தேவையா? ஆனா இவனுக்கு என்ன குறை? கவர்மெண்ட் வேலை, சொந்த வீடு, பிஎச்டி வேற படிக்கிறான். நாம் நெனச்ஙா ஒரு மணி நேரத்தில் போய் பிள்ளையைப் பார்த்துட்டு வர முடியும்."

   "கரெக்டுதான்.. ஆனா கல்யாணத்துக்கு சீக்கிரமா வச்சுக்க அவங்க சம்மதிக்கணுமே?"

    "அதெல்லாம் நான் பேசிக்கறேன்"

மறுநாள் பெண்பார்க்கும் படலத்தில் அனைவரும் அமர்ந்து இருக்க

    "நான் உங்க பொண்ணு கிட்ட கொஞ்சம் பேசலாமா?"

    "தாரளமா பேசுங்க தம்பி. சரண்யா தம்பி கூட்டிட்டு போம்மா" என்றார் சண்முகம்

    தோட்டத்தில் வாழை மரம் அருகே இருவரும் நின்றிருந்தனர்

    "என்ன படிச்சு இருக்கீங்க?"

   "எம் கம் முடிச்சிட்டு பிரைவேட் பேங்க்ல வொர்க் பண்றேன்"

   "சூப்பர் எனக்கு உங்கள போட்டோல பார்க்கும்போதே புடிச்சு போச்சு. ஆனா உங்க பக்கத்துல இருந்து எந்தவித பதிலும் வரல. இப்ப அவசரமா வர சொல்லி இருக்கீங்க. ஏன் இந்த இடைவெளின்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" கண்ணாடியை தூக்கி விட்டபடியே பேசினாள்

   "இப்படி கேட்டா என்ன சொல்றது?"

   "அச்சோ உங்களை சங்கடப்படுத்த நான் இதை கேட்கல. ஏதாவது குறை இருந்தா நீங்க கேட்டு தெரிஞ்சுக்கலாம், எந்த ஒரு தயக்கத்தோடும் வாழ்க்கையை ஆரம்பிக்க வேணாமேன்னுதான். எதுவா இருந்தாலும் கிளியர் பண்ணிக்கலாம்னு தான் இந்த கேள்வி"

    "எனக்கு எந்த தயக்கமும் இல்ல. அம்" என்று ஆரம்பிக்கும் போதே

   "வேற யாரோட தயக்கத்தைப் பற்றியும் எனக்கு தேவையில்லை. நீங்க கிளியரா இருந்தா பிக்சர் பத்தி பேசலாமா? என்று சரண்யாவை உற்றுப்பார்க்க

   வெட்கம் கலந்த சிரிப்புடன் தலையை குனிந்தவள் "ம்" என்று தலையசைத்தாள்

மாலை வீட்டிற்குள் வந்த சாக்கஷியிடம் வரலட்சுமி

   "இங்க பாருடி... உன் அக்காவுக்கு வரன் பார்த்து முடிவு செஞ்சியிருக்கோம். உனக்கு ஃபாரின் ஆப்ஷன் வந்து இருக்கு அதனால கல்யாணத்தை சீக்கிரம் செய்யணும்னு பொய் சொல்லி தான் அடுத்த மாசமே தேதி குறித்து இருக்கும்"

   "ரொம்ப சந்தோஷம்"

   "அது வரைக்கும் உன் வாயை வைத்தியம் கட்டிக்கிட்டு இரு. தேரை இழுத்து தெருவுல விட்டுடாதே"

    "அது நீங்க நடந்து" என்று சொல்லும்போதே நெஞ்சில் எத்துக் கொண்டு வந்த வாந்தியை வாஷ்பேஷனில் சென்று எடுத்தாள். சரண்யா அவளுக்குச் உதவ முன்வர, தடுத்து நிறுத்தினாள் வரலட்சுமி.

   "நீ எங்க போற? திருட்டுத்தனமா புள்ள வாங்கிட்டு வந்தவளுக்கு அவள் பார்த்துக்த தெரியும். உன் வேலையை பாரு"

   திருமண நாள் நெருங்கியது. தன் கப்போர்டில் இருந்து துணியை எடுத்து தன் சூட்கேஸில் வைத்துக் கொண்டிருந்த சரண்யா சந்தேகப்பட்டு எதையோ தேட அவளுக்கு கிடைக்கவில்லை. மறுநாள் மணப்பெண் அறையில் சரண்யா சில சிந்தனையுடன் அமர்ந்திருந்தாள். அந்த அறையில் இருந்த குழந்தைகளிடம் சாக்க்ஷி

   "நீங்கல்லாம் கோவிலுக்கு போகலையா? பெரியம்மா பெரியப்பா அங்கதான் போயிருக்காங்க மாப்பிள்ளை அழைப்புல நீங்களும் டேன்ஸ் ஆடிட்டு வாங்க, போங்க போங்க" என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.

   "அங்கிருந்த தட்டுகளை எடுத்து கொண்டு புறப்பட்ட சாக்கஷியை சரண்யா அழைத்தாள்

   "சாக்க்ஷி" கோபமாக அழைத்தவளுக்கு தெனாவட்டாக பதிலளித்தால் சாக்க்ஷி

   "என்ன" அவள் அருகில் சென்றவள்

   "எதுக்காக இப்படி பண்ணின?" கண்களில் நீர் தேங்கி நிற்க

   "என்ன பண்ணாங்க?" மீண்டும் தெனாவட்டாக பதிலளித்தாள்

   பளார் என்று கன்னத்தில் அறைந்தாள் சரண்யா

   "பேசாதடி. இப்படி ஒரு தப்பு பண்ண எப்படி உன்னால முடிஞ்சது? இதுக்காகத்தானே?"

   "ஓ... கண்டுபிடிச்சிட்டியா? ஆமாக்கா. இதுக்காகத்தான். பின்னே? நல்லது பண்றேன் நல்லது பண்றேன்னு யாரும் எதையுமே பண்றதே இல்ல. யாருதான் பூனைக்கு மணி கட்றது? அதான். நானே கட்டிடேன். சத்தம் எப்படி பலமாக கேக்குதா?" என்றாள் மகிழ்ச்சியாக

   மேள சத்தம் சரண்யாவின் காதில் விழ சாக்கஷியை கட்டி அணைத்து கொண்டாள் சரண்யா

   "நீ ஏன்க்கா கில்டியா பீல் பண்ற?"

    "எனக்காக எவ்வளவு திட்டு, எவ்வளவு சாபம், எவ்வளவு அவமானம்,"

    "என்னக்கா நீ.. நம்ம அம்மா பேசினதெல்லாம் கணக்கில் எடுத்துக்கிட்டு. புதுசா இருந்தா கவலைப்படலாம். என்னைக்கும் அடிக்கிற அலாரம் தானே. மசக்கை வாந்திக்கும் ஃபுட் பாய்சன் வித்தியாசம் தெரியல. இவங்கல்லாம் சாபமிட்டு.. நான் விளங்காம போகப் போகிறேனா? விட்டு தள்ளுக்கா. இனி நீ ஏதாவது கவலைப் பட்டால் அது உன் வாழ்க்கைக்காக தான் இருக்கணும் எங்களுக்காக கவலைப்படுவது எல்லாம் போதும் ஹாப்பியா இரு."

   "இருந்தாலும் நெ எவ்வளவு ஃபீல் பண்ணி இருப்ப?"

   " ஃபீலிங் அ? எனக்கா? 1% கூட இல்ல. ஏன்னா நான் அந்த கேட்டகிரியிலயே இல்லையே? அதெல்லாம் அம்மா அப்பாவுக்கும் தெரிய வரும்போது அதுவும் சரி ஆகிடும். சில்"

   "ஆனா அது எதுக்கு இந்த நேரத்துல?

   "இதுவரைக்கும் எந்த வரன பத்தையும் நீ பேசினதில்ல. ஆனா இந்த வரன் போட்டோவை நீ ரெண்டு முறை பார்த்தே. ரெண்டு முறை இது சம்பந்தமா என்கிட்ட பேசினே"

   "நானா? எப்போ....?"

   "ஒரு நாள் நைட்டு 'ஒரு வயசுக்கு மேல புத்திசாலியால மட்டும்தான் முடியும்'ன்னு சொன்னே, மறுநாள் காலையில ஆபீஸ் கிளம்பும்போது கவர்மெண்ட் வேலைன்னா டென்ஷனே இல்ல' அப்படின்னு சொன்னே"

   "அடிப்பாவி இந்த 3 இன்சிடென்ட வெச்சா இவ்வளவு தூரம் கொண்டு வந்தே?"

    கண்ணடித்து விட்டு நகர்ந்தவள் சட்டென்று நின்று திரும்பி சரண்யாவை பார்த்து கேட்டாள்

  "ஆமா இத நீ எப்படி கண்டுபிடிச்ச?"

   "இத மட்டும் இல்ல. இன்னும்  கண்டுபிடிச்சேன்"

   "என்னது?"

   "பக்கெட் என் கபோர்ட்ல இல்ல. நீ கோவிலுக்கும் போகல. சோ உனக்கு இன்னைக்கு இரண்டாவது நாள்



Rate this content
Log in

Similar tamil story from Romance