Tamil Anbu

Drama Crime Thriller

5  

Tamil Anbu

Drama Crime Thriller

ஓடிப் போய் கல்யாணம்

ஓடிப் போய் கல்யாணம்

4 mins
485


எனக்கு அவளை மிகவும் பிடித்து இருந்தது. அவளுக்கும் என்னை மிகவும் பிடிக்கும் ரொம்ப நேசித்துப் பழகினோம். அவள் அக்காவின் திருமணத்திற்கு பின்பு தான் திருமணம் பற்றி பேசனும் என கட்டளை நானோ இந்து அவளோ கிறிஸ்துவ மார்க்கம் என் நண்பன் சிவக்குமாரும், கணேஷ் இருவரும் என் பணியில் உற்ற நண்பர்கள். 


நாங்க எதிர்பார்த்த படியே அவள் அக்காவிற்கு திருமணம் நடந்தது. அப்பாடா லைன் கிளியர் என நினைத்து ஒரு மாதம் கழித்து பேசலாம் என காத்திருந்தேன். அதற்குள் அவள் அம்மாவிடம விசியத்தை சொல்லி விட்டாள். அவுங்க அம்மா என்னை பார்க்கனும் என சொன்னாள். நானும் போய் பார்த்தேன் அவுங்க சொன்னாங்க "தம்பி எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை எனவே கொஞ்ச மாதங்கள் பொறுங்க" என்றார்கள். 


அப்பாடா! ஒரு பக்கம் கிரீன்லைட் கிடைத்து விட்டது இனி எத்தனை மாதம் வேணும் என்றாலும் காத்திருக்கலாம் என முடிவு செய்தேன். அதற்குள் எங்க காதல் என் காதலின்… அக்கா வீட்டுக்காரருக்கு தெரிந்து விட்டது. (அது தாங்க என் சகலைக்கு) அவன் ஏதாவது பிரச்சனை செய்ய போகிறான் எனவே அவனை எதிர்கொள்ள நான் ரெடியானேன். 


ஆனால் அவனோஅவனின் நிறைமாத கர்பிணியான பொண்டாட்டியை அடித்து அம்மா வீட்டிற்கு துறத்தி விட்டான். என்ன காரணம் என விசாரித்தால் அவன் வாலி அண்ணன் அஜீத் போல… அவனுக்கு இரண்டாம் மனைவியாக என் ஆள் வேணுமாம் பாவி! 


அவனுக்கு கல்யாணமான ஆறே மாதத்தில் இப்படி ஒரு கொடுர ஆசை பாவிப்பயல்! இனி காத்திருக்க முடியாது என நானே முடிவு செய்து… என் காதலியின் அப்பாவிடம் போய் ஒரு மதியப்பொழுதில் என் விருப்பத்தை சொன்னேன். அவரோ… தளபதி சாருஷாசன் போல…. எப்ப கட்டி வைக்கிறீங்க என கேட்டதுக்கு "என் இறப்புக்கு அப்புறம்" என்றார். 


அதற்குள் என் காதலியின் அம்மாவிற்கு முடக்கு வாதம் என்ற நோய் ஏற்பட்டு படுத்த படுகை ஆனார். "பெரிய பெண் மாசமாய் வயிற்றை தள்ளிக்கொண்டு வாழவெட்டியாய் வீட்டில், சின்னவள் லவ் பண்ணறா… 


இதுக்கு எல்லாம் உன் வளர்ப்பு தான் காரணம் எனவே உனக்கு ஏற்பட்ட நோய்க்கு நான் எந்த மருத்துவ செலவும் செய்ய மாட்டேன்" என்றுஅந்த பெரிய மனுசன் ஒதுங்கிட்டார். பாவம் இந்த இரண்டு பெண்கள் கையில் காசு இல்ல எனவே அரசு மருத்துவமனையில் சேர்த்தினார்கள். 


ஒரு நாள் நான் போய் பார்த்தேன் அவர் கொஞ்சம் கொஞ்சம் பேசினார்கள் அப்பொழுது " தம்பி! நான் ரொம்ப நாளைக்கு உயிருடன் இருக்க மாட்டேன்! என் சின்ன மகளை அவ அக்காவீட்டுக்காரருக்கு கட்டித்தர விரும்ப வில்லை. 


இப்ப என் சின்ன மகளை என்ன ஆனாலும் நீங்க தான் திருமணம் செய்து கொள்ளுங்கள்… என்று சத்தியம் செய்து தாருங்கள்" என்றார்கள். நானும் சத்தியம் செய்தேன்.


நானும் சத்தியம் செய்து வந்த இரண்டு நாளில் அவள் அக்காவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அவளை கூட்டிட்டு போயிட்டாங்க. என் காதலி மட்டும் தனியாக அவள் அம்மாவை கவனித்து வந்தாள். பாவம் அவள் அம்மா ஒரு வாரத்தில் இறந்து விட்டார். அவள் அப்பா இறந்த பின்பு தான் வந்தான். கல்நெஞ்சுக்காரர்.


இதுல என்ன கொடுமை என்னவென்றால் அந்த அம்மா இறந்த ஒரே வாரத்தில் அந்த ஆள் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அரசு வேலையில் இருக்கும் ஆம்பளைக்கு எந்த வயசிலும் எந்த நிலையிருந்தாலும் பெண் கொடுக்க ஆட்கள் ரெடியாக தான் இருக்காங்க.. என்பதை அப்பதான் உணர்ந்தேன்.


இனி பொறுப்பதில்லை! இந்த நிறைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்… என்ற பாரதி வரியின் படி அவளை என் நண்பன் சிவா வாயிலாக வரச்சொல்லி… "இதப்பாரு! இனி காலமில்லை உன் அம்மாவிற்கு வேற நான் சத்தியம் செய்து விட்டேன். இப்ப நீயும் அந்த வீட்டில் இருக்க முடியாது. 


எனவே நாளை காலை நீ எதுவும் எடுக்க வேண்டாம் கட்டிய சேலையுடன் அதுவும் நல்ல சேலை வேண்டாம். 9மணிக்கு வெளியே வா.. எங்கே என கேட்ட உங்க அம்மா கல்லறைக்கு என சொல்லு. உங்க சர்ச் கல்லறை முன் சைக்கிளில் கணேஷ் இருப்பான். நீ அவன் சைக்கிளில் ஏறி பஸ்நிலையம் வந்து விடு" என்றேன்.


அவள் நான் சொல்லுவதற்கு சரி என்று சொல்லி " ஏன் நீங்களே! சைக்கிளில் வந்து நிக்கலாம் அல்லவா?" என்றாள். நானோ " இல்ல நான் இருந்தா சந்தேகம் வரும். அது நம்ம திட்டத்தை கெடுத்து விடும்" என்றேன்.


"சரி…எங்க கல்யாணம் செய்யப்போகிறோம்்" என்றாள்.


"நம்ம ஊரல் இருந்து அரைமணிநேரம் பயணம் செய்தால் ஒரு மலைமேல முருகன் கோவில் உள்ளது. அங்க போய்… ஏன்" என்றேன்.


"ஐயோ! இந்து கோவிலா!" என்றாள்.


"இல்லமா! இப்ப நம்ம கல்யாணத்தை பதிவு செய்யனும் என்றால் அது தான் பாதுகாப்பு இதுல நமக்கு வாழ்வா! சாவா என்ற நிலை இதில் சட்டப்பாதுகாப்புக்கு பதிவு அவசியம் என்னோடு வேலை செய்கிறவனின் அப்பா தான் அங்க பொறுப்பாளர்" என்றேன்.


எல்லாம் முடிவாகியது… எனக்கு இரவு எல்லாம் தூக்கமே வருல… நான் சிவக்குமார் , கணேஷ் மற்றும் என் காதலி இவர்களைத் தவிர வேறு யார் நினைவும் இல்லை.


மறுநாள் எல்லாம் திட்டமிட்ட படி நடந்தது சரியா 11மணி மலைக்கோவிலில் மாலையும் கழுத்துமாய் நானும் அவளும். தாலியில் தங்கம் சேர்க்க முடியவில்லை…ஏனா அந்த அளவு காசு இல்ல. ஆனா அவள் கையில் சிலுவை போட்ட ஒரு டாலர் மாதிரி ஒன்றை வைத்திருந்தாள் அது அவள் அம்மா தாலியாம். அதை கோர்த்து கழுத்தில் கட்ட சொன்னாள். 


சரி என முடிவு செய்து முருகன் கோவிலில் சிலுவை தாலியைக் கட்டினேன் என்ன சமத்துவம் பாருங்க.. அங்கே குருக்கள் என் நண்பன் இருவர் என ஐந்து பேரும் மட்டும் சரியாக 11:50க்கு திருமணம் நடந்தது.


மதியப்பசி வேறு கீழே வந்து மட்டை சாப்பாடு மணி உணவகத்தில் வாங்கி நாலு பேரும் சாப்பிட்டோம். நான் எனது சொந்த ஊருக்கு என் விதவை அம்மாவை பார்க்க வந்து விட்டோம். என்னை மாலையும் கழுத்துமாய் பார்த்த என் அம்மாவுக்கு ஆச்சரியம்.. பயம். ஆனா ஏத்துக்கிட்டாங்க. அப்பாடா என நேரமே படுத்துக்கொண்டோம். என் மனைவி ஊரில் எந்த மாதிரி பிரச்சனை போகுது என இரண்டு நண்பர்களை அனுப்பி விட்டேன்.


இதோடு முடியலைங்க இனி தான் கதையே! சரியா இரவு 11மணிக்கு என் வீட்டுக்கதவை ஒரு நான்கு ஐந்து பேர் தட்டுனாங்க. லைட்டைப் போட்டு வெளியே வந்தா ஒரு ஐந்து போலீஸ் என் மாமனார் என ஒரு ஜீப்ல..ஆஹா.. கூடிட்டாங்கடா என முடிவு செஞ்சேன்.


என்ன… வழக்கு என்றால் அவர் வாங்கிய லோன் பணம் 75000ரூபாயை திருடிட்டு வந்ததாக பிராது. என்ன செய்ய எங்க திருமண முதல் நாள் இரவு காவல்நிலையத்தில்… நான் எப்படி உள்ளே போனேன் என்ற யோசிக்கிறீங்க. என் மாமனாரின் பணத்தை நான் தான் வங்கியில் போய் எடுத்து வந்தேன் என சாகலை என் முன்னாடி பொய் சாட்சி சொன்னான். அட பரதேசி நாயே! என குதித்து அவன் சட்டையைப்பிடித்தேன். அப்புறம் என்ன நடந்து இருக்கும் என உங்களுக்குத் தெரிந்து இருக்கும். இது எல்லாம் இரவு 12 முதல் 1மணிவரை நடந்தது. என்னையும் மனைவியையும் மட்டும் உள்ளே செல்லுல அடைச்சுட்டாங்க. காலையில் என் மாமனார் அவரின் நிறுவனத்தில் லோன் போடவில்லை என்பதை அவரின் மேலதிகாரி சொன்ன உடன் பொய் கேஸ் என முடிவு செய்து எங்கள் இருவரையும் விட்டுட்டாங்க. இதற்கு காரணமான என் நண்பர்களை என்றும் மறக்க முடியாது. இதுதாங்க நான் ஓடிபோய் கல்யாணம் செய்துகிட்ட அனுபவம். நல்லா இருக்குங்களா? முதலிலேயே சொல்ல வேண்டிய முக்கிய குறிப்பு ஒன்றை சொல்ல மறத்துட்டேன். இப்ப சொல்லறேன்.


குறிப்பு: "இக்கதையில் வரும் சம்பவங்கள், பெயர்கள் மற்றும் கதை மாந்தர்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல"



Rate this content
Log in

Similar tamil story from Drama