Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Manoharan Kesavan

Inspirational

4.4  

Manoharan Kesavan

Inspirational

புனித நாட்கள்

புனித நாட்கள்

2 mins
246



அல்லதைப் போக்கி 

நல்லது தழைக்க 

பழையன கழிந்து 

புதியன மலர போகி !

உயிர் தழைக்க ஒளி கொடுத்து 

உலகு காக்கும் கதிர் அவனுக்கு 

உள்ளம் மகிழ நன்றி கூறி 

உவகை பொங்க பொங்கல் !

தாய்க்கு நிகராம் 

தன்னிகர் அற்றவளாம்

உழவனுக்கு தோழனாம் கோ மாதாவிற்கும்

எவரின் கால்கள் மண்ணில் பதிந்தால் 

அவரின் மூலம் இவ்வுலகு பசி ஆற்றுமோ 

நம்மவராம் உழவரைத் 

தூக்கிக் கொண்டாடிட மாட்டுப் பொங்கல் !

மூத்தோரைப் பணிந்து அவர்தம் 

முத்தான ஆசி பெற்று 

உறவுகளோடு மகிழ்ந்து உறவாடி 

ஏற்றம் பல காண 

காணும் பொங்கல் !

எவ்வரசு யாயினும் 

இவ்வரசு போல் ஆகுமோ 

என நம் வல்லரசை போற்றும் குடியரசு தினம் !

அன்பே சிவம் என்றும் 

ஒன்றே குலம் என்றும் 

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய 

வள்ளல் பிரானார்க்குத் தைப் பூசத் திரு நாள் ! 

உலகினுக்கு முதற் குருவாம் 

பேருண்மைப் பொருள் உணர்ந்தவராம் 

முக்கண் திறந்தவராம் 

மூவுலகமும் பணிபவராம் 

சிவ யோகம் தந்தவராம் அந்த

சிவத்தை அறிய உணர 

சிறப்பான தினமாம் சிவராத்திரியாம் ! 

 தன்னை யறிதலே மனித குலத்தின் 

தலையாய கடமையென உணர்த்திய 

யோகிராஜனுக்கு மகாவீரர் ஜெயந்தி  !

தன்னை சிலுவையில் அறைந்த போதிலும் 

அவர்களுக்கும் இறக்கம் காட்டுங்கள் என

புனித வெள்ளித் திருநாள் !

எம் மொழிக்கும் முதல் மொழியாம் 

எங்கள் தித்திக்கும் தமிழ் மொழியாம் 

அமுதை அழகை தொல்குடியை 

தரணிக்கு உணர்த்தும் சித்திரைத் திருநாள் !

இருளில் பிறந்தாலும் 

சமூக நீதி விளக்கேற்றி  

சமத்துவம் போதித்த உத்தமரை நினைந்து மகிழ 

அம்பேத்கர் ஜெயந்தி !

எங்கும் நிறை இறைவனுக்கு ஈடு இணை 

எவரும் இல்லையென நோன்பிருந்து அவன் தாள் பணியும் 

ஈகை பெருகும் ரம்ஜான் !

உழைப்பவர்க்கே உலகம் சொந்தம் 

உழைப்பே சிறப்பு என 

உழைப்பை 

உழைப்பாளரை கொண்டாடும் மே தினம் !

நங்கையாய் அவதரித்து 

நாராயணனை கைப்பிடித்த

திருப்பாவை தந்த 

தெய்வப் பிராட்டி ஆண்டாளுக்கு ஆடிப்பூரம் ! 

ஆண்டான் அடிமை முறை தகர்ந்து 

அடிமை விலங்கு அறுத்தெறிந்து 

சுதந்திர சுவாசம் தந்து எங்களின் 

வாழ்வினுக்கு வாசம் தந்த தேசத் தியாகிகளை 

நன்றியோடு நினைவு கூற சுதந்திரத் திருநாள் !

பக்தி கர்ம ஞான யோக யுக்திகளை

கீதை வடிவில் தந்து 

ஆயர்பாடியில் பிள்ளையாய் 

அர்ஜுனனுக்கு தேரோட்டியாய் 

பாஞ்சாலிக்கு அண்ணனாய் 

பஞ்ச பாண்டவர்க்கும் தோழனாய் 

கடமையில் கருத்தினைக் கொண்டு 

தன்னை யறிய கிரியா யோகம் தந்து 

தஞ்சம் அடைந்தவரை தாயினும் மேலாய் காக்கும் 

இறையின் வடிவை கொண்டாடும் கோகுலாஷ்டமி ! 

மூலாதாரத்தின் ஆதாரம் ஆனவன் 

முக்கண்ணன் அவன் முதல் மைந்தன் 

மூஷிக வாகனம் கொண்டவன் 

முதலானவன் முழு கணங்களுக்கும் முதலானவன் 

முதற் கொம்பொடித்து மாபாரதம் எழுதியவன் 

விக்னங்கள் தீர்ப்பவன் பெயரோ விநாயகன் 

தாளினைப் போற்றிட சதுர்த்தித் திருநாள் ! 

இறைவனின் தூதராய் 

திருக்குரான் அருளிய போதராய் 

இஸ்லாத்தின் தலைமகனாம் 

நபிகள் நாயகம் பிறந்த மிலாது நபித் திருநாள் ! 

எளிமையே வடிவாக 

கருணையே உருவாக 

அகிம்சையை போதித்த 

தேசத்தந்தையை போற்றிட காந்தி ஜெயந்தி !

பகையினை அழித்திடும் 

பரம்பொருளின் பாதி அவள் 

அவளே சக்தி 

அவளே முக்தி 

அவளை சரணடைந்தால் 

அளிப்பாள் அவளை ...அத்தோடு 

அரவணைப்பாள் காப்பாள் 

ஆதிபரா சக்தி ...

ஆயுதங்கள் ஆற்றலின் பரிமாற்றங்கள் ...

வீணையோ கலைகள் பிறக்கும் கருவறை ...

தாமரையோ வாழ்வின் வாழ்க்கைத் தத்துவம் ...

போதுமோ அவள் புகழ் பாட யுக ராத்திரி நாங்கள் 

போற்றி மகிழ்வதோ நவராத்திரி ! 

ராமன் சீதையோடு அயோத்தி திரும்பிய தினம் 

சக்தி தவம் செய்து அர்த்த நாரி ஆன தினம்

ஆணவம் தலைக்கேறிய நரகாசுரன் வீழ்ந்த தினம் 

கொண்டாடிக் களித்திட குதூகலம் காணும் தினம் 

பட்டாசு மத்தாப் புக்கள் பல வண்ணம் ஒளிரும் தினம் 

என்ன தினம் என்று நான் சொல்ல வேண்டுமா என்ன ?!

நெற்றிக்கண் திறப்பால்

அக்கினிக் குழம்பாய் 

முகம் ஆறு கொண்டு மலர்ந்தவன் 

தமிழ்க் கடவுள் எனும் பெயர் கொண்டவன் 

சூரபத்மனை வதம் செய்த சுப்ரமண்யனை 

ஷஷ்டி பாடி வணங்கி மகிழ கந்த ஷஷ்டி !

 


பைபிள் தந்த நாயகன் 

மேரி ஈன்ற தெய்வத் திருமகன் 

தன்னை அறிந்த தலைமகன் 

அன்பை வாழ்வின் செய்தியாய் 

அருள் செய்த ஆன்றக் குடிமகன் 

எங்களுக்கு மேய்ப்பன் 

இறை தந்த தூதுவன் 

அவதரித்த திருநாள் கிறிஸ்துமஸ் !

எத்தனை நாட்கள் வந்து போனாலும் 

மழலை உள்ளமும் பிறர்க்கு ஈந்துதவும் நெஞ்சமும் 

வாழ்வில் அமைந்து விட்டால் அத்துணை 

நாளும் தெய்வம் தந்த திருவருள் நாளே !

மழலையாய் வாழ்வோம் ! சேவகனாய் மகிழ்வோம் !


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational