Arul Prakash

Thriller

4.5  

Arul Prakash

Thriller

எதிர் பார்க்க முடியாதது

எதிர் பார்க்க முடியாதது

6 mins
1.2K


ஒரு ஊர்ல ஒரு பெரிய வசதியான குடும்பம் , அந்த வீட்ல ஒரு அம்மா, பெயர் லட்சுமி, அவங்களுக்கு மூணு பசங்க மற்றும் அவங்களோட பேர பசங்க. அவங்களோட மூணு பசங்களும் ஒரே பிசினஸ் பண்றாங்க சென்னையில, ஒரே வீட்ல கூட்டு குடும்பமா இருக்காங்க. 


அம்மா பெயர் லட்சுமி, முதல் பையன் பேரு ராம், லக்ஷ்மன் இரண்டாவது பையன், பரதன் மூணாவது பையன். 


 அம்மா: ஏண்டா, இந்த ஊர்ல நீங்க தங்கிடலாம்ல , இங்க இல்லாத வசதி, சென்னையில என்ன இருக்கு.


 ராம்: இங்க கிடைக்கற காசு விட அங்கு 20 லட்சம் அதிகமா சம்பாதிப்போம், 20 லட்சம் னா சும்மாவா


அம்மா : டேய் இந்த ஊர்ல நம்ம தான் பெரிய பணக்காரங்க, தெரியுமில்ல.

 இவ்ளோ பெரிய வீட்ல நான் தனியா இருக்கேன், வேலைக்காரங்க இல்லனா, என் நிலைமை என்ன.


ராம் : நாங்க தான் சொல்றோம்ல, நீயும் அங்க வந்து தங்கிடு, உன்ன நல்லா தான பாத்துக்க போறோம். 


அம்மா : நீங்க நான் சொன்னா கேக்க மாட்டீங்க, நான் மட்டும் நீங்க சொன்னா கேட்கணுமா. இந்த ஊர்ல இருந்தா தான் எனக்கு நிம்மதி, அதுவுமில்லாம இந்த ஊர்ல இருக்க பாதி நிலம் நம்முடையது. அதை விட்டுட்டு அங்க எப்படி நான் வருவேன். என்னோட உடம்பும் சரியில்லை, அவ்வளவு தூரம் என்னால வர முடியாது.


ராம் : சரி நாங்க இங்க வந்து பத்து நாள் ஆகுது, நாளைக்கு சென்னை கிளம்புறோம்


அம்மா : சரி நம்ம குடும்ப சொத்தை எல்லாம் உங்க பேர்ல எழுதணும், ஒருநாள்கூட இருங்க.


ராம் : நாங்க எல்லாம் சேர்ந்து ஒரு முடிவு எடுத்து இருக்கோம்


அம்மா : அது என்ன முடிவு


ராம் : நம்ம குடும்ப சொத்தை எல்லாம், இந்த ஊர்ல இருக்க, இல்லாத பட்டவர்களுக்கு எழுதிடு. எங்கள அப்பா எதுக்கும் ஒதவாதவங்க சொன்னது எங்க மனசுல இருக்கு. எங்களுக்கு இந்த சொத்து வேணாம். 


அம்மா : பெரிய பாரி வள்ளல், ஊர் மக்களுக்கு சொத்தை எழுதி வைக்க சொல்ராங்க. அவன் அவன் சொத்துக்காக வெட்டிக்கிட்டு சாவுறாங்க, இவங்களுக்கு சொத்து வேணாமா. உங்க அப்பாவே அவங்க அப்பா சொத்துல தான் உட்கார்ந்து சாப்பிட்டாரு. அவர் சொன்னது எல்லாம் ஒரு பேச்சா. 


ராம்: நீ சொத்தை எழுதி வச்சா, இங்க வந்து நாங்க விவசாயம் பாக்கணும், நாங்க எங்க பிஸ்னெஸ்ஸ என்ன பண்றது. 


அம்மா : நீங்க சொல்ற மாதிரி, எவனுக்கும் சொத்தை எழுதிட மாட்டேன். நான் செத்த பிறகு அந்த சொத்து உங்க எல்லார்க்கும் வர மாதிரி எழுத போறேன். 


ராம் : எதாவது பண்ணு, நாங்க கிளம்புறோம். 


----------------10 நாள் கழிச்சு ----------------------


ராமுக்கு அவங்க அம்மா போனில் இருந்து கால் வருது ஆனா வீட்டு வேலைக்காரி பேசுறாங்க


வீட்டு வேலைக்காரி : உங்க அம்மா எதையோ இருட்டில் பார்த்து அதிர்ச்சியில் பேச்சு வரமாட்டுது, டாக்டர்ஸ் பாத்தோம், ஏதும் சரிபடல. உங்க அம்மா உங்கள பாக்கணும்னு எழுதி காட்டுறாங்க


ராம் : சரி நாங்க அங்க வறோம். 


வீட்டு வேலைக்காரி : இல்ல அவங்களே அங்க வராங்களாம், நாளைக்கு ஃப்ளைட், ஏர்போர்ட்டில் போய் ரிசீவ் பண்ணிக்கோங்க.


 ஏர்போர்ட்ல இருந்து ரிசீவ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க அவங்க அம்மாவ


ராம் to அம்மா : இந்த ஒரு வாரம் பொறுத்துக்கோ, அடுத்த வாரம் நம்ம டாக்டரா பார்க்க போகலாம். உனக்கு பேச்சு வர வைத்துவிடலாம் கொஞ்சம் பிசினஸ் வேலை அதிகமா இருக்கு. வீட்ல எல்லாரும் பிசினஸ் பார்த்துகரதால, வீட்ல சாயங்காலம் வரைக்கும், யாரும் இருக்க மாட்டாங்க, வழக்கம்போல சமையல்காரன் வீட்ல இருப்பான், அதனால உனக்கு மாத்திரை கொடுக்க உன்ன பாத்துக்க, ஒரு வேலைக்காரனை வேலைக்கு வைக்கப் போறோம்.


------------------யார் இந்த கணியன் -------------


கணியன் ஒரு வேலை இல்லா பட்டதாரி (VIP).


 கணியனின் அம்மா: டேய் இன்ஜினியர் படிச்சிட்டு , வேலைக்கு போகாம இருந்தா என்ன அர்த்தம். உன் நண்பன் அஜய்லாம் நைட்டில வேலை செய்றான் 


kaniyan: அம்மா அது நைட்டி இல்ல ஐடி (IT)


 கணியனின் அம்மா: ஏதோ ஒன்னு, நீ ஏன் செய்ய மாட்ற.


கணியன்: அது ஒரு போர் அடிக்கிற வேலை, பத்து மணி நேரம் ஒரே பில்டிங்குள்ளலாம் என்னால இருக்க முடியாது.


கணியனின் அம்மா: அப்புறம் வேற என்ன பண்ண போற


 கனியன்: டிடெக்டிவ்.


 கணியனின் அம்மா: தமிழ்ல சொல்றா


 கனியன்: துப்பறிவாளன் 


 கணியனின் அம்மா: சரி, ஒரு கிழவியை பார்த்துக்க ஒரு மாசம் மட்டும் 40,000 தராங்கலாம், அந்த வேலைக்கு ஒருமாசம் போ. ஆனா அந்த வீட்ல ஒரு மாசம் தங்கணுமாம். 


 கணியன்: 40,000 மா, ஒரு மாசம் மட்டும் செய்றன். BPO ல வேலை செய்யுறவனுக்கே அவளவ்வு சம்பளம் கிடைக்கிறதில்ல.


கணியன், ராம் வீட்டிற்குள் , லட்சுமி அம்மாவை பாத்துக்கும் வேலைக்காரனாக 

நுழைகிறான் 


வேலைக்கு சேர்ந்தவன், அந்த அம்மாவை ஒரு வெறுப்போடவே பாத்துகிறான், சாப்பாடு தட்டை தூக்கி எரியறது, மாத்திரை தூக்கி எரியறதுனு ஆனா அவங்க பசங்க ராம் லட்சுமண் லாம் இருக்கும்போது மட்டும் அக்கறையோடு பாத்துகிற மாதிரி ஒரு நடிப்பு. அங்கு கணியனுக்கு சமையல்காரன் மட்டுமே நண்பன். இப்படியே நாட்கள் போகுது.


 கணியனுக்கு சமையல் காரனுக்கு குடிக்கிற பழக்கம் இருக்கு. தினமும் ரெண்டு பேரும் நைட்ல குடிச்சிட்டு தான் தூங்குவாங்க 


 ஒருநாள் குடிச்சிட்டு தூங்குறாங்க, அந்த லட்சுமி அம்மா கனவுல வந்து அடி அடின்னு கனியன அடிக்கிறாங்க, இனிமே மரியாதையா சாப்பாடு போடுவியானு, மரியாதையா நடந்துகிவியான்னு. தூக்கத்திலிருந்து எழுந்து சமையல்காரன் கிட்ட சொல்றான், சமையல்காரனோ, கனவு டா விடுன்னு சொல்றான். 


 அடுத்தநாள் குடிச்சிட்டு வந்து தூங்குறான், மறுபடியும் அதே அடி, மரியாதை குடிப்பியான்னு அடி. 


இதே மாதிரி ரெண்டு மூணு நாள் தொடர்ந்து நடக்குது போதையில அப்படி தெரியுது போலனு இருக்காண் .


 ஒருநாள் சமையல்காரன் குடிக்க வரலைன்னு சொல்லிட்டான், கணியன் தனியா குடிக்கப் போறான், போயிட்டு வந்து, எப்பவுமே படுக்கிற இடத்துல இருந்து வேற இடத்துல படுக்கிறான். அப்பவுமே அதே மாதிரி லக்ஷ்மி அம்மா அடிக்கிறாங்க, அடிச்சிட்டு மாடிப்படியில் பாஸ்டா நடந்து போறாங்க, சாதாரணமா அவங்களால மெதுவாவே நடக்க முடியாது பாஸ்டா நடந்து போறதை பாத்து கணியன் ஷாக் ஆகிறான்


சமையல்காரன் அப்போவே போய் எழுப்புறான், விஷயத்தைச் சொல்றான்.


 சமையல்காரன்: டேய் குடிச்சிட்டு வந்து ஏதாவது உளராத டா.


 கணியன்: டேய் இன்னிக்கு நான் போறதுக்குள்ள கடையே மூடிடுச்சு டா. நான் சரக்கு அடிக்கவே இல்லை.


 சமையல்காரன்: உண்மையாவா, அப்போ தினமும் உன்ன லட்சுமி மா அடிக்கிறது உண்மையா.


 கணியன்: ஆமாடா, அப்புறம் அவங்க கிழவி இல்லை, ஒரு பொண்ணு.


 சமையல்காரன்: எப்படி சொல்ற


 கணியன்: அவங்க பொண்ணு குரல்ல பேசுறாங்க, ரொம்ப பாஸ்டா நடந்தாங்க.


சமையல்காரன்: சரி சரி, நீதான் டிடெக்டிவ் ஆச்சே, என்னவா இருக்கும்னு யோசிக்கிற.


 கணியன்: ஒன்னு அவங்களுக்கு பேய் பிடித்து இருக்கணும், இல்லன்னா இந்த குடும்பத்துல இருக்குறவங்களே சொத்துக்காக இவங்க அம்மாவை கொன்னுட்டு, prosthetic மேக்கப் போட்டு அவங்கள போல ஒரு ஆளை கொண்டு வந்து ஏமாற்றலாம்.


 சமையல்காரன்: முதல்ல என்ன பண்ண போறோம்.


 கனியன்:  நிஜமாகவே கிழவியா, இல்ல குமரியானு முடிவு பண்ண போறோம்.


 சமையல்காரன்: எப்படி கண்டுபிடிக்க போறோம்.


 கனியன்: கிழவி எப்பவுமே ரூம்ல இருந்து வெளிய வந்தா ரூம பூட்டிக்கிட்டு தான் வரும். சாவிய சாப்பாட்டு மேஜை மேல வைக்கும், அத உன்கிட்ட எடுத்து தந்திட்டு, நான் அவளுக்கு சாப்பாடு போடுவேன். அந்த நேரத்துல நீ அவ ரூமுக்குள்ள போயி, இந்த கேமராவை ஓட்டிட்டு வந்துடுவ.


 சமையல்காரன்: சூப்பர் பா, இப்போ அவளை கிழவியா இல்ல பொண்ணா அப்படினு தெரிஞ்சிடும்


--------------சிறிது நேரம் கழித்து ----------------


கனியன்: இப்பவே அவ ரூம்ல என்ன இருக்குனு, போன்லயே பார்க்கலாம். இதோ கிழவி தெரியுறா, பக்கத்துல பாத்தியா,prosthetic மேக்கப் போடுற கிட் லாம் இருக்கு. 


 சமையல்காரன்: ஆமாம் பா இவ கண்டிப்பா, டுபாக்கூரா இருப்பா போல. இவ கண்டிப்பா பொண்ணுதான்.


 கனியன்: இவ டுபாக்கூர் தெரிஞ்சிருச்சு. கேமரா கீழே விழுந்திருச்சு போல, ஒன்னும் தெரிய மாட்டேங்குது.


 சமையல்காரன்: இதுக்கு மேல எதுக்கு கேமரா, ஹவுஸ் ஓனர் கிட்ட சொல்லிடலாம்யா இவ ப்ராடு ன்னு


 கனியன்: ஏன் ஹவுஸ் ஓனர்களே அவங்க அம்மாவ சொத்துக்காக கொன்று இருக்கக் கூடாது. அந்த கொலையை மறைக்க ஒரு பொண்ணுக்கு அவங்களை போலவே prosthetic மேக்கப் போட்டு இருக்க கூடாது.


 சமையல்காரன்: என்னய்யா சொல்ற


 கணியன்: இது கலிகாலம் யா என்ன வேணா நடக்கும். நான் போய் அந்த கிழவி ஊர்ல உயிரோடு இருக்கான்னு பார்த்துட்டு வரேன். நான் ரெண்டு நாள் லீவு ல போறேன், நீ அந்த கிழவி மாதிரி வேஷம் போட்டு இருக்க டுபாகூருக்கு சாப்பாடு போடு.


 சமையல்காரன்: சீக்கிரம் போயிட்டு வந்து விஷயத்தைச் சொல்லு, எனக்கே ஆர்வமா இருக்கு


கணியன் அந்த கிழவியோட வீட்ட கேட்குறான், அந்த ஊர்க்காரங்க கொண்டு போய் விட்டாங்க. அங்கு கிழவியை பார்த்ததும் அப்படி ஒரு ஷாக். சென்னைக்கு திரும்ப வந்துட்டான்.


 அந்த வீட்டுக்குள்ள போறான்


 சமையல்காரன் to கணியன்: யோவ் வாயா, என்னாச்சு.


கனியன்: கிழவி ஊர்ல உயிரோடதான் இருக்கா, ஹவுஸ் ஓனர்கள போய் சந்தேகபட்டுட்டோம், அவங்க சொத்தே வேணாம்னு சொல்லிட்டு தான் வந்து இருக்காங்க.


 சமையல்காரன்: நம்ம ஹவுஸ் ஓனர்கள் தங்கம் யா, இப்பவே போய் அவங்க கிட்ட, இவ கிழவி இல்ல டுபாக்கூர்னு சொல்லப்போறேன்


 கனியன்: டேய் நான் ஒரு டிடெக்டிவ் ஆகணும்னு முயற்சி பண்றேன் யா, நான் இந்த கேச கண்டுபிடிக்கிறேன்.


 சமையல்காரன்: யோவ் போயா எனக்கு விசுவாசம் தான் முக்கியம், நான் போய் சொல்றேன்.


 ஹவுஸ் ஓனர் குடும்பம், சாப்பாட்டு மேஜைமேல் சாப்பிட்டுட்டு இருக்காங்க, அந்த கிழவி வேஷம் போட்டவங்களும் சாப்பிடறாங்க. 


 சமையல்காரன் ஹவுஸ் ஓனர் ராம் கிட்ட போய் உண்மையா சொல்லலாம்னு போறான்


 ராம் to கிழவி வேஷம் போட்ட பொண்ணு:  யார் நீ 


 கிழவி வேஷம் போட்ட பொண்ணு, எழுதி காற்றா. அந்தப் பேப்பரை கோபமா ராம் கிழித்துப் போட்டாரு.


ராம் : நீ என்னோட அம்மா இல்லன்னு எனக்கு நல்லா தெரியும், எங்க வீட்ல கிச்சன்ல மட்டும் எப்பவுமே கேமரா இருக்கும். சமையல்காரன் எதுனா திருடுறானான்னு பார்க்க. ஒரு நைட் நீ பாஸ்டா நடந்து போய் தண்ணி குடிச்ச, எங்க அம்மாவால அவ்வளவு பாஸ்டா நடக்க முடியாது. நீ யாருன்னு நீயே சொல்லிடு, இல்ல போலிஸ கூப்பிடுவேன்.


 கிழவி வேஷம் போட்ட பொண்ணு, அவளோட prosthetic மேக்கப்பை கலைக்கிரா, பாத்தா அவன் பையன்.


 ராம்: நீ பையனா, யார் நீ எதுக்காக இப்படி பண்ற.


 அந்தப் பையன்: என் பெயர் வேல்ராஜ், நான் ஒரு டிடெக்டிவ், உங்ககிட்ட கருப்பு பணம் இருக்கான்னு உங்களை செக் பண்ண சொல்லி உங்க பிசினஸ் போட்டியாளர் ஒருத்தர், எனக்கு பணம் கொடுத்தார். நீங்க கருப்பு பணம் வைத்து இருக்கீங்கன்னு ஒரு நாள் உங்க தம்பி கிட்ட நீங்க சொன்னத வாய்ஸ் ரெக்கார்ட்(voice record) பண்ணிட்டேன்.


ராம் to வேல்ராஜ் : வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணத கொடுத்துடு, உனக்கு எவ்ளோ காசு வேணும் அவ்ளோ நான் கொடுத்துடறேன்.


 வேல்ராஜ்: சாரி சார் நான் ஒரு விசுவாசி. உங்க போட்டியாளர் ஜான்சன் குரூப் கிட்ட கொடுத்திட்டேன். உங்கள பாக்க அவங்க இங்க வராங்க.


 சிறிது நேரம் கழித்து ஜான்சன் குரூப் ஓனர் ராம் வீட்டுக்குள் வந்தார்


 ஜான்சன் to ராம் : சாரி ராம் பிஸ்னஸ் காக தான் இப்படி பண்ண வேண்டியதா போச்சு.


 ராம்: உனக்கு எவ்வளவு பணம் வேணும்.


 ஜான்சன்: உன் கம்பெனியை என் பெயருக்கு எழுதி வச்சிடு. 


 ராம்: இது ரொம்ப அதிகம்


 ஜான்சன்: ரொம்ப அதிகமில்லை, எனக்கு தெரியும் உங்க ஊர்ல உங்க குடும்பத்துக்கு இருக்க பேருக்கு. இந்த ஐடி ரெய்டு வந்து, கருப்பு பணத்தால, உனக்கும் உன் குடும்பத்துக்கும் வர கெட்ட பெயர நீ விரும்ப மாட்ட. 


 ஒன்னும் பண்ண முடியாம, குடும்பத்துக்கு ஊர்ல கெட்ட பேரு வந்துடக் கூடாதுன்னு, ராம் அவங்களோட கம்பெனியை ஜான்சன் குரூப்புக்கு எழுதிக் கொடுத்தான்


Ram to his brothers: டேய் நம்ம ஊருக்கே போய்டலாம், நம்ம ஊர்ல, நம்மகிட்ட இல்லாத பணமா. அம்மா கேட்டா மட்டும், நம்ம அம்மாக்காக தான் சொத்தை வித்துட்டு ஊருக்கே வந்து செட்டில் ஆகிட்டோம்னு சொல்லணும். பாசத்துக்காகனு சொல்றோம். 


ஊருக்கு போய் ராமும் அவன் தம்பிகளும் செட்டில் ஆகிட்டாங்க, விவசாயம் பண்ண அரமிச்சிட்டாங்க. 


-----------ரெண்டு வாரம் கழிச்சு --------------


கணியனுக்கு, அந்த டிடெக்டிவ் வேல்ராஜ் ஓட வேலை பிடித்துபோய், அவர்கிட்ட அசிஸ்டன்ட்டா சேரனும் ஆசைப்பட்டு. அவரை தேடி அவர் ஊருக்கு போறான், வேல்ராஜ் மற்றும் ஹவுஸ் ஓனர் ராம் ஓட ஊரும் ஒன்னுனு தெரிஞ்சுக்கிராண்


 கணியன், வேல்ராஜை தேடி, ஒரு மரத்து கிட்ட நிக்கறார்னு தெரிஞ்சு கிட்டான். போய் பாத்தா லக்ஷ்மி அம்மா (ராம்மின் அம்மா ), வேல்ராஜ்க்கு பணம் தராங்க


 இப்பதான் ரியல் லட்சுமி அம்மா ஏன் ரீல் லட்சுமி அம்மாக்கு பணம் கொடுக்கறாங்கனு புரியுது. 


கணியன் to லக்ஷ்மி அம்மா : ஓ இந்த கேம் நீங்க தான் ஆரமிச்சிங்களா 


 லக்ஷ்மி அம்மா: ஆமா என் பசங்க என் கூட இருக்கணும் தான் அப்படி பண்ணினேன். அந்த பிசினஸ் நால தான, அவங்க இந்த ஊருக்கு வரமாற்றாங்க அதான், அவங்க பிஸ்னெஸ்ஸ அவங்களே விக்ர படி பண்ண. 


 கணியன்: சூப்பர் அம்மா நீங்க, எனக்கு சில கேள்விகள் இருக்கு


 லட்சுமி அம்மா: கேளு


 கனியன்: எப்படி ராம் கண்டிப்பா கருப்பு பணம் வைத்திருப்பார் என்று கண்டுபிடிச்சீங்க


 லட்சுமி அம்மா: அதுவா ஒரு நாள் அவன் தம்பிகளுடன் பேசிட்டு இருந்ததை கவனிச்சேன்


 கனியன்: எப்படி ஜான்சன்ஸ் க்ரூப் கம்பெனி இந்த கேம் குள்ள கொண்டு வந்தீங்க.


வேல்ராஜ் : இது மாதிரி ஒரு ஆஃபர் இருக்குன்னு சொன்னோம், நல்லா ஓடுற கம்பெனிய வாங்க கசக்குதா வாங்கிட்டாங்க.


கணியன் to வேல்ராஜ் : தினமும் நைட் என்னை ஏன் வந்து அடிச்சிங்க


 வேல்ராஜ்: மரியாதையா சாப்பாடு போடாமல் இருந்ததற்கு, போதையில் இருக்கும்போது அடிச்சா தெரியாதுன்னு அடிச்சேன். இதுக்கு மேல கேள்வி கேட்காத, வந்து அசிஸ்டன்டா ஜாயின் பண்ணிக்கோ.



 கணியன் சிலமாதங்களில் டிடெக்டிவ் ஆகிறான்



--------------------- The End---------------/-----




Rate this content
Log in

Similar tamil story from Thriller