Arul Prakash

Thriller

4.9  

Arul Prakash

Thriller

ட்விட்டர் தற்கொலை

ட்விட்டர் தற்கொலை

8 mins
1.3K


ராம் ஒரு youtube சினிமா reviewer, வயசு 28.

அவர் சென்னை ல தனியா தான் இருக்காரு, அவனோட அம்மா ஊர்ல இருக்காங்க. அவரு ஸ்டில் சிங்கிள். அவர பார்க்க ஒரு நாள் நைட் அவன் நண்பன் வரான், அவன் பேரு சிவா.


ராம் to சிவா : வா டா என்ன அதியசமா, அதும் இந்த நைட் ல வந்து இருக்க.


சிவா : சும்மா பாக்கலாம்னு தான், அப்பறம் ட்விட்டர் ல verified லாம் வாங்கிட்டியாம்.


ராம் : ஆமா டா. அந்த கருமம் லாம் வந்துடுச்சு, ஆனா கமெண்ட்ஸ் ல திட்றது மட்டும் குறையவே இல்ல.


சிவா : ட்விட்டர்னாலே அப்படி தான் இருக்கும், நீயும் ஒரு சில விஷயத்தை மாத்திக்கணும்.


ராம் : என்ன அது, சொல்லும்.


சிவா : இப்ப குடிச்சி இருக்க, ஆனா அப்டியே ட்விட்டர் spaces ல போய், எதாவது ஹீரோவ கெட்ட வார்த்தை ல திட்டுற, அவனுங்க ரசிகர்கள் திருப்பி கெட்ட வார்த்தை ல திட்டுறானுங்க.


ராம்: ஆமா இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?


சிவா : இப்ப கூட நீ ட்விட்டர் ல பேசுனத பாத்து தான், உன்ன பாக்க வந்தேன்.


ராம் : ஓ, அப்படியா.சரி டா, மாத்திக்கிறேன்.


ராம் போன் அடிக்குது


சிவா : யாரு இந்த ராத்திரி ல போன் பண்றது.


ராம் : சொல்றேன்.


ராம் போன் எடுத்து பேசுறான், ஒரு லேடி வாய்ஸ்.


ராம் to லேடி : ஏய் உன்ன இனிமேல் எனக்கு கால் பண்ண கூடாது தான சொன்னேன்.


லேடி : நேத்து வரைக்கும் நல்லா பேசிட்டு, என் போட்டோ பாத்த பிறகு பேச மாற்ற.


ராம் : மொக்க மூஞ்சி போன வை.


சிவா to ராம் : யாரு டா அது.


ராம் : அவ ஒரு ஆண்ட்டி டா, youtube ல கமெண்ட் பண்ணி இருந்தா, அப்டியே கடல போட்டுட்டு இருந்தேன், மொக்க மூஞ்சினு தெரிஞ்சிது அதான் கழட்டி விட்டேன்.


சிவா : டேய், நல்லா பொசிஷன் ல இருக்க, ஆனாலும் இந்த ஆண்டிங்க சவகாசத்த விட மாற்றியே.


ராம் : என்ன டா இன்னைக்கு அட்வைஸ் பண்ற mode ல இருக்கியா.


சிவா : இன்னும் ஒரு அட்வைஸ் மட்டும் பண்ணிட்றேன், சொல்றது என் கடமை இல்லையா.


ராம்: ஓ சொல்லு சொல்லு.


சிவா : இந்த சினிமா review ல ஏன் அரசியல் பேசுற, ஒரு கட்சியை பத்தி பெருமையா சொல்ற, உனக்கு புடிக்காத கட்சியை மட்டமா சொல்ற.


ராம் : எப்பா சாமி, நான் மாத்திகிறேன், உன்னால போதையே இறங்கிடிச்சு, திருப்பியும் சரக்கு அடிக்கணும்.


சிவா : எப்படியோ போ, நான் கிளம்புறேன்.


ராம் திரும்பவும் சரக்கு அடிக்க ஆரமிக்குறான். போதை ஏறி,போன் எடுத்து ட்விட்டர்ல ஒரு tweet போடுறான் வாழ்க்கையே போய்டிச்சினு. அந்த tweet பாத்து நிறைய followers, எங்க ஹீரோ பத்தி spaces ல திட்டுறியான்னு, ராம திட்டி கமெண்ட் போடுறாங்க. போதைல ராம் அவங்கள திட்டுறான். அவங்க கண்டபடி பேசி உன் வீட்டு அட்ரஸ் கொடு டா உன்ன வீட்ல வந்து உதைக்கிறேன் சொன்னதும் , ராம் அவனோட வீட்டு அட்ரஸ் போட்டு கமெண்ட் பன்றான். அப்பவும் திட்றது நிக்கல நிறைய பேர் திட்டுறாங்க. போதை தலைக்கேரி, ராம் ஒரு tweet போடுறான் என்ன ட்விட்டர் ல நிறைய பேர் திட்டுறாங்க, அதனால நான் சாக போறேன்.


அவனுக்கு ஒரு கால் வருது.


ராம் to அந்த ஆள் : யாரு பேசுறது.


அந்த ஆள் : டேய் படம் விமர்சனம் பண்ண, அது மட்டும் பண்ணனும், எங்க கட்சிய நடுல நடுல மட்டமா பேசுற.


ராம் : யோவ் அது என் சேனல், நான் எப்படி வேணா பேசுவேன்.


அந்த ஆள் : யோவ் இரு திமிராவா பேசுற, இப்ப உன் tweet ல உன் அட்ரஸ் பாத்தேன் , ஆளுங்க கூட்டிட்டு வந்து உன்ன வாயிலேயே வெட்டுறேன்.


சொல்லிட்டு போன கட் பண்ணிடுறான்.


ராம்க்கு வேர்க்க ஆராமிச்சிடுது, போதை இறங்கிடிச்சு. ஐயோ கட்சி காரங்க வெட்ட வராங்கனு பயம் வந்துடுச்சி, வீட்ட பூட்டிகிட்டு நைட் வெளிய போயிடுறான். போய்ட்டு வண்டிய எடுக்கலாம்னு போனா , ஒரு ஆட்டோல நாலு பேரு வந்து ராம தூக்கி போட்டுக்கிட்டு போறாங்க.


----------------அடுத்த நாள் ---------------


ராமோட அம்மா, ராம காணும்ன்னு ஊருல இருந்து வந்து,போலீஸ் ஸ்டேஷன்ல கம்பளைண்ட் தராங்க.


ராம் அம்மா to போலீஸ் : ராம் ட்விட்டர்ல நான் தற்கொலை பண்ண போறேன் போட்டு இருக்கான் எனக்கு பயமா இருக்கு சார்.


போலீஸ் : பயப்படாதீங்க, நாங்க செக் பண்றோம்.


போலீஸ்,ராம் வீட்டுக்கு வராங்க, பக்கத்து வீடுலாம் விசாரிக்குறாங்க, ராம பத்தி. பெருசா எதுவும் தெரியல. ராம் வீட்டு எதிர் வீட்டு காரன் போலீஸ கூப்பிடுறான்.


போலீஸ் to எதிர் வீட்டு காரன் : என்ன பா சொல்லு.


எதிர் வீட்டு காரன் : நேத்து நைட் வேல முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தப்போ, ஒரு மணிக்கு ஒருத்தன் பைக் ல அந்த வீட்ட பாத்துட்டு இருந்தான்.


போலீஸ் : அந்த பைக் நம்பர் பாத்திங்களா.


எதிர் வீட்டு காரன் : பாத்தேன் சார்


போலீஸ் நம்பர் வாங்கி, அது யாரு பைக்னு தேடுறாங்க, அது வினோத்னு ஒரு பையனோட பைக்.


போலீஸ் to வினோத் : நேத்து நைட் நீ ராம் youtube reviewer வீட்டுக்கு போய் இருந்தியா.


வினோத் : அது வந்து சார்.


போலீஸ் : சொல்லுறியா முட்டிக்கி முட்டி தட்டவா.


வினோத் : போனேன் சார்.


போலீஸ் : எதுக்கு போன.


வினோத் : நான் ட்விட்டர் ல அவர கமெண்ட்ஸ் ல திட்டினேன், அவர் தற்கொலை பண்ணிக்க போறேன் சொல்லி tweet போட்ட உடனே பயந்து அவர் வீட்டுக்கு வந்து பாத்தேன். என்னை ட்விட்டர் ல நிறைய பேர் திட்டுறாங்க அதுனால நான் சாக போறேன் போட்டதால, நம்மளும் திட்டி இருக்கோம்னு பயத்துல பாக்க போனேன் சார்.


போலீஸ் : ஓ அப்போ ராம் தற்கொலை பண்ண போறதுக்கு நீயும் ஒரு தூண்டுதலா இருக்க.


வினோத் : சார், ட்விட்டர்ல நிறைய பேர் திட்டி இருக்காங்க ஒரு 2000,3000, பேர் திட்டி இருப்பாங்க. அவங்க எல்லாரையும் ஜெயில்ல போடுவீங்களா சார்.


போலீஸ் :ஓ வக்கீல் மாதிரி பேசிறியா, நீ என்ன பண்ற.


வினோத் : காலேஜ் ஸ்டுடென்ட் சார். என்ன விட்டுருங்க எங்க வீட்டுக்கு தெரிஞ்சா , அடி விழும்.


போலீஸ் : அப்படியெல்லாம் உன்ன விட முடியாது. ஒரு 3000 பேர் ராம திட்டி கமெண்ட்ஸ் போட்டாங்கனு சொன்னல, அவங்க எல்லாருக்கும் reply போட்டு இப்படி ட்விட்டர் ல திட்றது தப்புனு சொல்ற 


வினோத் : 3000 பேருக்கா,


போலீஸ் : ஆமா.


வினோத் : இப்படி பண்ண விட்டுடுவீங்களா.


போலீஸ் : ராம் உயிரோடு கிடைக்கலைன்னா, உன்ன தான் புடிச்சி உள்ள போடுவேன்.


போலீஸ பாக்க ராமோட நண்பன் சிவா வரான்.


சிவா to போலீஸ் : சார் ராம நான் நேத்து நைட் பாத்தேன் சார். நேத்து 10 to 11 அவன் கூட இருந்தேன்.


போலீஸ் : அவர் உங்க கிட்ட நல்லா பேசுனரா.


சிவா : நல்லா தான் பேசுனான். போதையில் இருந்தான் 


போலீஸ் : குடிச்சிட்டு எங்க உயிர எடுக்குறாங்கயா


சிவா : சார் ராம் வீட்டு எதிர்க்க ஒரு கேமரா இருக்கு சார்.அதுல பாத்தா ராம் எத்தன மணிக்கு வீட்டு விட்டு போனானு தெரிஞ்சுடும்.


போலீஸ் : நான் அந்த வீட்ல போய் கேமரா காக பாக்கலாம் னு போனேன், ஆனா அந்த வீடு பூட்டி இருந்துச்சு.


சிவா : இப்ப திறந்து தான் இருக்கு, வரும்போது தான் பாத்தேன்.


போலீஸ் : சரி வா போய் பாக்கலாம்.


போலீஸ் போய் அந்த கேமரா பதிவ பாக்கறாங்க, ஒரு ஆட்டோல ராம தூக்கிட்டு போறது தெரியுது.


போலீஸ் to சிவா : என்ன யா யாரு உன் friend ah தூக்கி ஆட்டோல போட்டுக்கிட்டு போறது.


சிவா : எனக்கு தெரியல சார்.


போலீஸ் : சரி அந்த ஆட்டோ நம்பர் செக் பண்ணலாம். சரி நீ கிளம்பு.


போலீஸ் அந்த ஆட்டோ நம்பர செக் பன்றாங்க, அது fake நம்பர்.


அப்பறம், ராமோட போன் நம்பர track பண்றங்க, location கண்டு பிடிச்சிடுறாங்க.


location போய் பாத்தா போன் மட்டும் ரோடுல இருக்கு.


போன்ல call history எடுத்து, கடைசியா யார்கிட்ட பேசி இருக்கான்னு பாக்குறாங்க.


அந்த கட்சி பேர வச்சி ராம மிரட்டுனவங்க நம்பர் போலீஸ் கிட்ட கிடைக்குது. அவங்கள விசாரிக்குறாங்க. அவன் பேரு ரகு.


ரகு to போலீஸ் : சார் நான் அவன மிரட்ட தான், போன் பண்ண, மத்தபடி நான் அவ்ளோ பெரிய ஆளு கிடையாது.


போலீஸ் இவன் இந்த வேலைய பண்ணி இருக்கமாட்டான்னு, நாலு அடிய போட்டு அவன இது மாதிரி இனி நடக்க கூடாதுனு கண்டிச்சி அனுப்பிடுறாங்க.


போலீஸ பாக்க சிவா வரான்.


சிவா to போலீஸ் : சார் ராம் கிட்ட இன்னொரு போன் இருக்கு.


போலீஸ் : என்னய சொல்ற, அந்த நம்பர் கொடு.


சிவா : அந்த நம்பர் எனக்கு தெரியாது.


போலீஸ் : ஒரு friend க்கு நம்பர் தெரியாதா.


சிவா : சார் அந்த நம்பர் ,கல்யாணம் ஆன ஆண்ட்டிங்க கிட்ட பேசுறதுக்கு மட்டும் வச்சி இருந்தான்.


போலீஸ் : ஓ அவ்ளோ பெரிய ஆளா அவரு.

இப்ப யாருக்கு தான் நம்பர் தெரியும்.


சிவா : எனக்கு தெரியல சார்.


போலீஸ் சரி ஒரு வேல பண்றேன்.


போலீஸ் மீடியாவ கூப்பிட்டு இந்த விசாரணை பத்தி சொல்லுது.


போலீஸ் to மீடியா : ராமோட விசாரணை நல்ல படியா போய்கிட்டு இருக்கு, அவர கண்டுபிடிக்க அவரோட ரெண்டாவது நம்பர் எங்களுக்கு வேணும், தெரிஞ்சவங்க எங்களுக்கு தெரியப்படுத்தவும். பெண்கள் நிறைய பேருக்கு அந்த நம்பர் தெரிஞ்சி இருக்கும்னு எங்களுக்கு தெரியும், பெண்கள் போலீஸதொடர்பு கொள்ள அச்ச பட்டிங்கன்னா , ராமோட ட்விட்டர் idக்கு ஒரு fake id ல இருந்து கூட அந்த நம்பர அனுப்பலாம். அனுப்பறவங்க பேர வெளிய சொல்லமாட்டோம்.


போலீஸ் சொன்னா மாதிரியே, ஒரு fake idல

இருந்து ராம்மோட நம்பர் வந்தது


sub இன்ஸ்பெக்டர் to போலீஸ் constable : யோவ் ராம கண்டு பிடிச்சதும், இந்த fake idல இருந்து நம்பர் அனுப்புன ஆள கண்டுபிடிச்சி அவ புருஷன் கிட்ட சொல்லிடுங்கய்யா, இது மாதிரி அவளுக்கு ராம் கூட தொடர்பு இருக்குனு.


constable: சார் நம்மள நம்பி அந்த பொண்ணு சொல்லி இருக்கு, நம்ம அதை பண்ணலாமா.


sub இன்ஸ்பெக்டர் : அவளோட புருஷன், அவளை நம்பி இருக்க மாட்டானா , அது மட்டும் தப்பு இல்லையா.


constable : சரி சார் நான் பண்ணிடுறேன். இப்போவே hacking டீம் சொல்லி அந்த அட்ரஸ் எடுக்க சொல்லிடுறேன்.


போலீஸ் அந்த நம்பர் location கண்டுபுடிச்சி, ராம கண்டுபிடிச்சிட்டாங்க. ராம கட்டிபோட்டு அடிச்சி இருக்காங்க. போலீஸ் ராம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுறாங்க 


போலீஸ் to ராம் : யாரு உங்கள கட்டி போட்டு அடிச்சா.


ராம் : எனக்கும் தெரியாது சார், நாலு பேரு கட்டி போட்டு அடிச்சாங்க.


போலீஸ் : இப்படி சொன்னா நாங்க எப்படி கண்டுபிடிக்கறது.


ராம் : இந்த case இதோட விட்டுடுங்க சார்.


போலீஸ் போயிடுறாங்க.


சிவா to ராம் : ஏன்டா, உன்ன அடிச்சவங்கள காட்டி கொடுக்குல.


ராம் : நான் ஒரு ஆண்ட்டிகிட்ட பேசிட்டு இருந்தேன்ல , அவங்க புருஷன் தான் ஆள் வச்சி அடிச்சுது. இந்த கேவலத்தை எப்படி போலீஸ் கிட்ட சொல்றது.


சிவா : சரி விடு.


போலீஸ் constable to sub இன்ஸ்பெக்டர் :சார் இந்த case இதோட முடிச்சிக்க சொல்லி ராம் சொல்லிட்டான்.


sub இன்ஸ்பெக்டர் : யோவ் யார் அவனை அடிச்சது கண்டுபிடிச்சிட்டு தான், கேஸ முடிக்கிற. அப்பறம் அந்த fake id பொம்பலயா, அவ புருஷன் கிட்ட காட்டி கொடுக்க சொன்னேன்ல 


போலீஸ் constable: hacking டீம் அவ அட்ரஸ கொஞ்ச நேரத்துல கண்டு பிடிச்சிடுவாங்க.


sub இன்ஸ்பெக்டர் : ஓகே.


sub இன்ஸ்பெக்டர் மற்றும் 2 constable, ராம் கட்டி போட்டு வச்சு இருந்த காலியான வீட்டோட ஓனர அடிச்சு விசாரிக்குறாங்க.


வீட்டு ஓனர் to போலீஸ் : சார் எனக்கு எதுமே தெரியுது, எப்படி யாரு இங்க ராம கட்டிப்போட்டதுனு


போலீஸ் அவனை அடிச்சு பாத்துட்டு விட்டுட்டு கிளம்புறாங்க, அப்போ வீட்டு ஓனர், போலீஸ கூப்பிடுறான்.


வீட்டு ஓனர் : சார் இந்த வீட்டு சாவியை ஒரு நாள் தொலைச்சிட்டேன்.என் கிட்ட ரெண்டு சாவி இருந்தது, ஒன்னு தொலைஞ்சிடிச்சு 


போலீஸ் : எங்க தொலைச்சன்னு ஞாபகம் இருக்கா.


வீட்டு ஓனர் : ரெண்டு பேரு வீட்டுக்கு அன்னைக்கு போன்னேன் சார், அந்த ரெண்டு வீட்டுல எங்கயோ தொலைச்சிட்டேன்.


போலீஸ் : உறுதியா சொல்றியா.


வீட்டு ஓனர் : கண்டிப்பா அவங்க ரெண்டு பேரு வீட்ல தான், எங்கயோ சாவிய விட்டுட்டேன், அவங்க தான் யாரோ இத பண்ணிருக்காங்க.


போலீஸ் : அவங்க ரெண்டு பேர் அட்ரஸ் கொடு.


போலீஸ் constable அட்ரஸ் எழுதிட்டாங்க.


sub இன்ஸ்பெக்டர் to constable : யோவ் அந்த fake id பொம்பள அட்ரஸ் வாங்க சொன்னேன்.


constable (mind voice): அந்த பொம்பளைய காட்டி கொடுக்க ஏன் இவளோ interest காற்றாருனு தெரியல


constable,hacking டீம் கிட்ட இருந்துஅந்த fake id பொம்பளையோட அட்ரஸ் வாங்கிடுறாரு.


constable ஷாக் ஆகி, sub இன்ஸ்பெக்டர கூப்பிடுறாரு


constable : சார் அந்த fake id அட்ரஸும், அந்த வீட்டு ஓனர் கொடுத்த ஒருத்தரோட அட்ரஸும் ஒரே அட்ரஸ்.


sub இன்ஸ்பெக்டர் : யோவ் அப்போ அந்த fake id தான் ராம ஆள் வச்சு அடிச்சி இருக்கா , உடனே அந்த அட்ரஸ்க்கு போனும்யா.


sub இன்ஸ்பெக்டரும், constable, அந்த fake id அட்ரஸ்ல போய் பிடிச்சிடுறாங்க.



sub இன்ஸ்பெக்டர் to fake id : சொல்லு நீ தான ராம ஆளு வச்சி அடிச்சது.


fake id : வீடு வரைக்கும் கண்டுபிடிச்சிட்டீங்க, நான் தான் அடிச்சேன்


sub இன்ஸ்பெக்டர் : ராம அந்த வீட்டுல விடாம, வெளிய ரோட்ல தூக்கி போட்டு இருந்தா, எங்களுக்கு கண்டுபிடிக்க கஷ்டமா இருந்து இருக்கும்.


fake id : அந்த வீட்டு ஓனர் என் நண்பர் தான், எதர்ச்சியா அவனுக்கு போன் பண்ணா, அந்த வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன் சொல்லிட்டான், என்ன பண்றதுனு தெரியாம ராம அங்கேயே விட்டுட்டு, fake id ல உங்களுக்கு தகவல் சொன்னேன். அந்த வீட்டு ஓனர் வரறதுக்கு முன்னாடியே நீங்க வந்து ராம காப்பாத்திட்டீங்க.


sub இன்ஸ்பெக்டர் : அதெல்லாம் விடு, ஏன் அவனை அடிச்ச.


fake id : youtube reviewer ah தான் எனக்கு தெரியும், பழகுனேன் நல்லா பேசுனான்,எங்க ரெண்டு பேரோட பழக்கம் அடுத்த கட்டத்துக்கு போச்சு,ஒரு நாள் போட்டோ அனுப்ப சொன்னான், அனுப்புனேன், என் மூஞ்சி மொக்க மூஞ்சினு சொல்லி avoid பண்ணிட்டான்.


sub இன்ஸ்பெக்டர் : ஓ.


fake id : பின்ன பழகிட்டு மூஞ்சி நல்லா இல்லனு சொன்னா, நாலு அடி போட்டா தான் இவனை மாதிரி ஆளுக்கு புத்தி வரும்.


sub இன்ஸ்பெக்டர் : உன் புருஷன்.


fake id : divorced.


sub இன்ஸ்பெக்டர் : சரி இதுக்காக அவன அந்த அளவுக்கு அடிக்கணுமா. 


fake id : இது மாதிரி பண்ற பசங்களக்கு ஒரு பாடமா இருக்கட்டும், என் மேல கேஸ போடுங்க. நான் நினைச்சா அரசியல்வாதி மூலம் இந்த கேஸ்ல இருந்து வெளிய வந்துட முடியும் ஆனா ஒரு பொண்ணு எந்த அளவுக்கு போவானு தெரியும்னு அந்த ராம்க்கு.


sub இன்ஸ்பெக்டர் : அர்ரெஸ்ட் பண்ணுங்க.


          ராம் வீட்ல


சிவா to ராம் : ஏன் டா என் கிட்ட, போலீஸ் கிட்ட விஷய்யத்த மறைச்ச.


ராம் : ஒரு பொம்பள கிட்ட அடி வாங்கினேன்னு எப்படி டா சொல்றது.



--------------------The End ----------------------------




Rate this content
Log in

Similar tamil story from Thriller