Nagarajan Subramanian

Comedy

5  

Nagarajan Subramanian

Comedy

நண்பன்

நண்பன்

2 mins
930


ஸ்ரீனியால் ராஜுவை மறக்க முடியவில்லை.

இத்தனைக்கும் ஸ்ரீனிவாசன் ராஜுவை விட ஒரு வயது பெரியவன்.

ஆறாம் வகுப்பில் அம்மை போட்டதால் ஒரு வருடம் படிப்பு கோவிந்தா.

அதுவும் நல்லதற்குத் தான்.

இப்படி ஒரு நண்பனை கடவுள் கண்ணில் காட்டத்தான் தேர்வு ஆகாதது.

இத்தனைக்கும் ஸ்ரீனிவாசன் அப்பாதான் அந்த பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மற்றும் சரித்திர ஆசிரியர்.

அவர் முதலில் ஹிந்தி ஆசிரியரா 

இருந்து ஹிந்தி நீக்கப்பட்ட பின் வரலாறு ஆசிரியர் ஆனவர்.

வரலாற்றில் ஏழாவது வகுப்பு முதல் பரிட்சையில் அவன் பெயர் சொல்லு மதிப்பெண் சொல்லி எல்லாரையும் கை தட்ட வைத்து பேப்பர் கொடுத்தது மறக்க முடியாதது.

அப்போது அறிமுகம் ஆனவன் தான் ஸ்ரீனிவாசன்.

முதல் நாளே அப்பா கிட்டே நல்ல பெயர் வாங்கிட்டே. எந்த ஏரியா?

மீனாட்சிபுரம்.

பக்கம்தான்.

"Neenga"

"வயக்காட்டு தெரு "

"பாம்பு, கொக்கு வராதா?"

"பரவா இல்லே. படிப்பு மட்டும் தான் வருமோன்னு பயந்துகிட்டு இருந்தேன். பேச்சும் நல்லா வருது. என்ன கிட்டே பேசின மாதிரி எல்லாரும் கிட்டேயும் சகஜமா ஜோக் அடிக்காதே?"

"ஏன் அண்ணா "

"அண்ணனா "

"நீங்க ஒரு வருஷம்.."

"சரி நட்புக்குளே அண்ணன் தம்பி உறவு வேண்டாம். பல பேரு, பேருக்கு படிக்க வந்தவங்க "

"பேரு தன் பிறக்கும் போதே வைத்து விடுவாங்களே?"

"மகனே. வீட்டில் அப்பா டார்ச்சர் தாங்க முடியாமல் வந்து இருப்பாங்க. அவங்க நோக்கம் ஸ்போர்ட்ஸ் கோட்டால "வேலையில் சேரறது. ஜஸ்ட் பாஸ் மார்க் போதும்."

"நல்லது. நமக்கு உடல் பலம் கிடையாது. வேலைக்கு படிப்பை விட்டால் நாதி கிடையாது. மணிக்கு அடிக்கிற வேலைக்கு கூட எல்லாரும் வரலாம்னு சொல்லற அரசு, ஒரு சாரர் எப்படி பிழைக்கணும்னு யோசிச்சதா தெரியலை "

"விடு மரம் வைச்சவன் தண்ணி விடுவான் "

"மெதுவா சொல்லு. தண்ணியும் சில சமயம் நிறைய விட்டு சென்னை பூரா வெள்ளம் "

"டெய்லி நியூஸ் பார்ப்பேயா?"

"ஆமாம். அப்பா உத்தரவு. அப்போது தான் பொது அறிவு வளருமாம் "

ஸ்ரீனிவாசன் நம்ப முடியாமல் பார்த்தான். இவனுடன் சேர்ந்தால் உருப்பட்டு விடலாம் என்ற யோசனை.

"படம் எல்லாம் பார்பியா?"ஸ்ரீனிவாசன் ஆர்வமாக கேட்டான்.

"எல்லா படமும் பார்க்க வசதி, நேரம் கிடையாது. விகடன், குமுதம் விமர்சனம் பார்ப்பேன். நல்லா இருந்ததுன்னு சொன்னா போவேன் "

"யார் கூட "

"எதிர்வீ ட்டு செல்லம் "

"செல்லம்மாவா "

"செல்லம் வாத்தியார் கூட "

"இனி நாம ஒண்ணாப் போகலாம் "

"அவர் எனக்கு டிக்கட் எடுப்பார் "

"டேய் நான் எடுக்கறேனே "

அப்படித்தான் நகைச்சுவையாலும், ஒரே வகுப்பு என்பதாலும் நண்பன் ஆனான் ஸ்ரீனிவாசன். விட முடியவில்லை.

செல்லம் வாத்தியரும் அவனுடன் படம் பார்க்கவே விரும்பினார்.

மூன்று பேரும் சேர்ந்து போகலாமே?

"எனக்கு உண் ஜோக் கேட்கணும். கமல் படம் என்னோட வா. மற்ற படம் அவனோட போ "

அவனுக்கும் கமல் படம் பிடித்து அவனும் இவனுடன் மட்டுமே பார்க்க விரும்ப ரெண்டு பொண்டாட்டிக்காரன் கதையாய் போனது அவன் கதை.

அவர்கள் அவர்கள் இரண்டு பேருடனும் இரண்டு முறை.

இளமை ஊஞ்சல் ஆடுகிறது இரண்டு முறை ஆடியது.

நல்ல நேரத்திற்கு இருவரும் பிரிய இவன் படிப்பு பிழைத்தது.

...

நா. நாகராஜன், தூத்துக்குடி.

...

ஆசிரியர் பற்றி

அரசு அதிகாரியாக பணி ஆற்றியவர். நாற்பது வருடம் பணியில் நாலு நாவல், ஐந்து சிறுகதை, இரண்டு ஜோக்ஸ் புக், ஒரு கட்டுரை தொகுப்பு, ஒரு வக்கீல் வரலாறு எழுதி முடித்து விட்டேன். பிரதிலிபி யில் ஒரு பெரிய நாவல், ஒரு ஐந்து சிறுகதை பிரசுரம் ஆகி உள்ளது. உலகலாவிய சிறுகதை போட்டியில் "துகள் "நடத்தியத்தில் என்ன சிறுகதை பிரசுரம் தேர்வு பெற்று புக் ஆக உள்ளது.

ஸ்டோரி மிரர் நண்பர் மகளால் காலை அறிமுகம். உடனே கதையும் எழுதி ஆச்சு. வாய்ப்புக்கு நன்றி.


Rate this content
Log in

More tamil story from Nagarajan Subramanian

Similar tamil story from Comedy