hema malini

Others

4  

hema malini

Others

தேன் மிட்டாய்

தேன் மிட்டாய்

2 mins
340


"ராகவனுக்கு கடந்த மாதம் தான் (80)சகஸ்ர சந்திர தர்சன சாந்தி" முடிந்தது..

ஆனாலும் சுறு சுறுப்பாக 

ஓடி ஆடி தான் இருக்கார்...


"அன்று காலை எழுந்ததும்

அவசர 

 அவசரமாக மார்கெட்டில் 

 ஒவ்வொரு கடையாக

 ஏறி இறங்குவதை சாலை

 ஓரம் சவாரிக்கு காத்திரு நத சுபாஷ் கவனித்துக்கொண்டி ருந்தான்!"

 ஆட்டோவிலிருந்தபடி !"

 

"அவர் தேடி வந்த பொருள்

கிடைக்காத விரக்தி முக பாவனையில் உணர்ந்தான் சுபாஷ் !

ராகவன் ஆட்டோ வை நோக்கி வருவதை உணர்ந்த சுபாஷ் என்ன சார் ஆட்டோ வேணுமா சார் எங்க போகணும் சார் சொல்லுங்க!" என்றான்


இன்னும் இரண்டு கடைக்கு தள்ளி உள்ளே போகணும் நடந்து நடந்து கால் வலிக்குது கொஞ்சம்

வரியாப்பா? என்றார் முதியவர் ராகவன்!"


"ஓஹோ அப்படியா வரேன் சார் வாங்க உள்ளே ஏறி உக்காருங்க!" என்றதும் ராகவன் ஏறி உட்கார்ந்து கொண்டார்.."

"சுபாஷ் ரகவனிடம் என்ன சார் கடை கடை யாக ஏறி இறங்கி என்னாச்சு உங்களுக்கு என்ன வேண்டும்?

 அது ஒன்றும் இல்லை "தேன் மிட்டாய்" 

"தேன் மிட்டாயா? 

"ஆமாம் ஆமாம்...

ஒரு கடையிலும் இல்லை ..

சரி மார்கெட் உள்ளே சிறிய கடைகள் இருக்கும் அங்கு இருக்கலாம்"


"என் மனைவி பிறந்த நாள் இன்று அவளுக்கு தேன் மிட்டாய் என்றால் மிகவும் பிடிக்கும் அதான்!

"ஓகோ அவங்க எங்க சார் கூட கூட்டி வரவில்லையா?

இல்லப்பா அவளுக்கு கை கால் விழுந்து படுத்த படுக்கை எல்லாமே கட்டிலில் தான்! ஒன்றும்

ஞாபகம் கூட இல்லை..

நாட்க்களை எண்ணிய படி!


"சுபாஷ் அய்யோ பாவம் என்று மனது வலிக்க சார் அவங்களுக்கு ஞாபகம் இல்லை என்று சொல்றீங்க?


"அப்போ தேன் மிட்டாய் எப்படி ஞாபகம் இருக்கும்?

அவளுக்கு தான் ஞாபகம் இல்லை எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு அல்லவா? அவளுக்கு என்ன பிடிக்கும் என்று?


"அது உண்மை உண்மை

என்றான் சுபாஷ்"

அப்படியே பேசி பேசி இறங்கி ஏறி ஒவ்வொரு கடையாக தேன் மிட்டாய் தேட கடைசி ஒரு கடையில்

தேன் மிட்டாய் பாட்டிலில் இருப்பதை கண்ட ராகவனு க்கு முகம் மலர்ந்தது!

"கடைக்கரரிரடம் தேன் மிட்டாய் வாங்கி க்கொண்டு அதற்கான பணத்தை கொடுத்த பிறகு ஆட்டோவில்

ஏறி அமர்ந்தார்!

"என்ன சார் மகிழ்ச்சியா?

ஆமாம் இரட்டிப்பு மகிழ்ச்சி பா என்றார்!

 அடையாறு ஆல மரம் பக்கதில் இறக்கி விடு பா அதே தெருவில் தான் நான் போயிக்கொள்கிரேன்!

 "இல்ல சார் நானும் வரே ன் அம்மாவை நானும் வந்து பார்க்கலாம் அல்லவா சார்?

 அதுக்கு என்ன பா தாராளமா வாங்க எங்கள் வீட்டில் எங்களுடன் தேநீர் இடைவேளை பகிர்ந்து கொள்ளுங்க தம்பி என்றார் ராகவன்!

 "சுபாஷ் இப்படி ஒரு அப்பா எனக்கு இல்லையே அப்பா அம்மா இல்லாத அனாதைக்கு கடவுள் தந்த மாபெரும் பரிசு இவர் என்று மனதில் நினைத்து

 அவருடன் தேநீர் அருந்தி விட்டு படுத்த படுக்கையில்

 கிடந்த சாவித்ரி அம்மாவையும் வணங்கி  

 விடை பெறும் போது ...

""தன் மனைவி நீண்ட நாள் ஆசை ஆசையாக இலந்தை வடை கேட்டாள் இதுவரை வாங்கி கொடுக்கவில்லை !" "முதியவரின் நடத்தை அவன் கண்கள் திறக்க வைத்தது...

 "தன் மனைவி சுமதிக்கு

 இலந்த வடை வாங்கி வீட்டுக்கு திரும்பினான்!

 முற்றும்✍️


 



Rate this content
Log in