hema malini

Classics Inspirational

5  

hema malini

Classics Inspirational

தீபா(வலி)வளி

தீபா(வலி)வளி

2 mins
427



தீபா(வலி)வளி🪔🎇



"கைபேசி ஒலித்து க்கொண்டிருக்க ராகவன் அழைப்பை எடுத்து ஹலோ என்றார். மறுமுனையில் இருந்து பாஸ்கர் மிக உற்சாகமாக


"காலை வணக்கம் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் டா ராகவா...


"ம்ம்... காலைவணக்கம் உனக்கும் வாழ்த்துக்கள் டா"...


"என்னடா ஆச்சு ஒரு சுரத்தே


இல்லாமல் வாழ்த்துக்கள் சொல்லுறே?


“அட போடா என்ன இனிய

தீபாவளி ? சுகர் இருக்க இனிப்பு சாப்பிட வாய்ப்பே கிடையாது பின்ன எங்கிருந்து உற்சாகம் வரும்?


அந்த கால கட்டத்தில் வீடு நிறைய பலகாரங்கள், இனிப்பு வகைகள்,அப்பப்பா இப்போ நினைத்தால் கூட இனிமை தான். இப்போ கட்டுப்பாடுகள்,மிரட்டல் கள் தான்,.,.


"எப்படியோ வந்து விட்டது சர்க்கரை நோய்...அது க்கு நானா பொறுப்பு?


"அதற்க்கு எல்லோரும் திட்டுறாங்க எனக்கு இனிப்பு என்றால் அலாதி பிரியம்..


"முதல்ல மருத்துவர் திட்டுறார்,பிறகு மனைவி பிள்ளைகள்,கட்டுப்பாடு கட்டுப்பாடு பின்ன என்னத்த தீபாவளி இனிய

தீபாவளி?


"டேய் என்னடா இப்படி விரக்தியாக பேசுற?


"இனிப்பு சாப்பிடு ஆசைக்கு அல்ல அளவோடு அதற்காக இனிப்பு சாப்பிடவே கூடாது என்று அர்த்தம் அல்ல..


பின்ன சாப்பிடலாமா?


டேய் முன்பு நிறைய சாப்பிடுவே இப்போ அளவோடு சாப்பிடு-


"எனக்கும் தான் சர்க்கரை நோய் இருக்கு அதற்காக நான் அப்படியே ஒதுக்கவில்லை ஒருநாள் கொஞ்சம் ஆசைக்கு சாப்பிட்டு முன்பு நிறைய சாப்பிட்டதை எண்ணி மகிழ்ந்து கொள்வேன்..


இப்படி இருவரும் பேசிக்கொண்டிருக்க...

"இதை கேட்டுக்கொண்டு ராகவன் மனைவி ராதா அங்கு வர... சைகையில் யார் ?என்று கேட்க "


"ராகவன் பாஸ்கர் என்று சொல்ல" தாங்க நானும் பேசுரேன் என்று ராதா லாவகமாக வாங்கி பேசும்போது அண்ணா உங்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள் என்றதும்...


* சகோதரி உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் என்று சொன்னபின் உங்களுக்கு இனிமை இருக்கா?என்றார் ஒன்றும் புரியாமல் ராதா என்ன அண்ணா சொல்றீங்க?" புரியல


என்றாள்" இல்ல ராகவனுக்கு சுகர்

இருக்கு..உங்களுக்கு இருக்கா என்றார்!"


அய்யோ அண்ணா எனக்கு இல்லை என்று மகிச்சியாக சொல்ல.


"அதுக்கு பாஸ்க்கர் சொன்னார் அது வந்தாதான் தெரியும் அதன் கஷ்டம் .


"என்ன அண்ணா நீங்க?


எனக்கும் சுகர் வரணும் என்று சாபம் விடுறீங்களா?


அய்யோ நான் யார் சாபம் விட நான் துர்வாசர் ஒன்றும் அல்ல .


நான் சாதாரண சர்க்கரை நோயாளி பாஸ்கரன்" உங்கள் கணவரின் நண்பர் என்று வெடிச்சிரிப்பு சிரிக்க.


ராதாவும் சிரிக்...


"யம்மாடி நல்ல நாள் அதுவுமா நான் ஒரு அறிவுரை கூறவா?

"சொல்லுங்க அண்ணே என்றாள் ராதா..."


இல்லமா ராகவனுக்கு சர்க்கரை நோய் இருக்கு அவனுக்கோ இனிப்பு என்றால் அலாதி பிரியம்


காட்டுப்பாடு கொஞ்சம் தளர்த்துங்கோ சரியா?


"கட்டுப்பாடுகள் தான் ஒரு சர்க்கரை நோயாளியை மேலும் நோயாளி ஆக்கும்


அவர்களுக்கே தெரியும் நோய் முத்தினால் இதயம் பாதிக்கும் என்று..


"வீட்டில் கட்டுப்பாடுகள் அதிகரிக்க வெளியில்


சென்று அத்துமீறி அள்ளி விழுங்கும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள் என்று சொன்னார் ராகவனின் நண்பர்

பாஸ்கர்..


"ராதா தன் தவறை உணர்ந்து யோசித்து சரி சரி அண்ணே மிக்க நன்றி என் கண்ணை திறந்து விட்டீர்கள்


நரகாசுரன் வதம் தீபாவளி என்று நாடுகள் கொண்டாட - என் அறியாமை என்ற நரகாசுரனை வதம் செய்தீர்கள் என்றும் இந்த இனிய நாளில் என் அறிவு கண்ணை திறந்து விட்டீர்கள் என்று சொல்லி கணவர் ராகவனின் கைக்கு கைபேசி கொடுத்து பேசுங்க என்று சொன்னதும்... ராகவன் என்னடா பாஸ்கர் வதம்


பண்ணிட்டீயா?


ஹஹஹ...

இருவரும் சிரித்த படி இனிய தீபாவளி வாழ்த்துக்கள் பாஸ்கர் என்று சொல்ல..


பாஸ்கர் பலே பலே ஸ்வீட் கொஞ்சம் எடு கொண்டாடு என்று சொல்லி இணைப்பை துண்டித்தார்!"


இ.டி. ஹேமமாலினி 



Rate this content
Log in

Similar tamil story from Classics