Deepa Sridharan

Romance

4  

Deepa Sridharan

Romance

டின்டர் முத்தம் (பாகம் 4)

டின்டர் முத்தம் (பாகம் 4)

3 mins
450


இரவின் மௌனம் நிரஞ்சனாவை துளைத்துக் கொண்டிருந்தது. ஏசியிலிருந்து வரும் குளிர்காற்றில் அவள் தலைமுடி பறந்து அவள் முகத்தை வருடியது. அவள் தன் அலைபேசியையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவனிடமிருந்து பதில் வருமா வராதா? அவன் தன் நம்பரை டிலீட் செய்திருப்பானா இல்லையா? அவனுக்கு தன்னை நியாபகம் இருக்குமா இருக்காதா? போன்ற எதிர்வினைக் கேள்விகள் மௌனத்தின் துளையிலிருந்து குதித்துக்கொண்டே இருந்தன. 

அலைபேசியை படுக்கையில் வைத்துவிட்டு பால்கனிக்கு சென்றாள் நிரஞ்சனா. இரவு பதினோரு மணிக்கு இந்த அவஸ்தை தேவைதானா என்று நினைத்துக்கொண்டாள் நிரஞ்சனா.

இரவு வானம் வசீகரமாய்(வசீகரனாய்?) அவளைப் பார்த்தது. இந்த பிரபஞ்சம் நிகழ்வுகளின் உலை. அதில் அவரவர்க்கு, அவையவைக்கு தேவையானவற்றை பிரித்து எடுத்துக்கொள்வது தான் இருத்தலின் சாராம்சம். அதில் மூளையும் மனதும் ஒருங்கினைந்துவிட்டால் இருத்தல் எளிமையாகிவிடுகிறது. இல்லையென்றால் சவால்தான்! அன்றைய அத்தருணம் நிரஞ்சனாவிற்கு சவாலாகத்தான் இருந்தது.

அவள் அலைபேசியிலிருந்து கால் வந்தது. அவள் இதயத்துடிப்பு ஏனோ அன்று அந்த மென்மையான ரின்ங் டோனுடன் சின்க் ஆகவில்லை. அவள் விரைந்து உள்ளே சென்று அலைபேசியைக் கையில் எடுத்தாள். 'ரமேஷ் காலின்ங். எரிச்சலுடன் அந்த காலை அட்டென்ட் செய்தாள்.

“ஹேய் ரமேஷ் ஹியர். சாரி டூ கால் யூ லேட் அட் நைட்” என்றான்.

 “ஹேய் ரமேஷ் எப்படி இருக்க?” என்றாள்.

அவன் “ஹ்ம்ம்ம்” என்று பெருமூச்சு விட்டான்.

“என்ன நியாபகம் இருக்குமோ இல்லையோன்னு நெனச்சுட்டிருந்தேன்” என்றான்

நிரஞ்சனா சிரித்துக்கொண்டாள்.

“சொல்லு ரமேஷ் ஹௌஸ் லைப்ஃ?”

“அதுக்கென்னமா சூப்பரா இருக்கு” என்றான் ரமேஷ்.

“நீ சொல்லு புது ப்லேஸ், ஜாப், உனக்கு எப்படி போகுது?” என்றான். 

வினயின் வாட்ஸப் ப்ரோஃபைல் போட்டோவை பார்த்துக்கொண்டே “எக்ஸைட்டின்ங்” என்றாள் நிரஞ்சனா.

“குட்” என்றான்.

இருவருக்கும் மத்தியில் ஒரு சில நொடிகள் மௌனம். ஆனால் அதன் காரணமும், புரிதலும் வெவ்வேறு. விளைவுகளுக்கு மட்டும் பொதுவான பெயரை வழங்கிவிட்டிருக்கிறது மனித இனம். ஒரு சிலரால் மட்டுமே அதனை பாகுபடுத்திப் பார்க்கமுடிகிறது.

“இன்னிக்கு டின்டர்ல மீட் பண்ண ஒரு பொண்ணோட பேசிட்டுருந்தேன். திடீர்னு ஷவர் ரூம்லருந்து வீடியோ கால் பண்ணா. எனக்கு எப்டி ரியாக்ட் பண்ணனும்னே தெரியல. கால கட் பண்ணிட்டேன். ஏன்னு தெரில அந்த செகன்ட் உன்னோட நியாபகந்தான் வந்துது” என்று மௌனத்தை உடைத்தான் ரமேஷ்.

அதன் துண்டுகள் நிரஞ்சனாவின் மீது தெரித்து சிதறியது.

“ஒன் மினிட்” என்று சொல்லிவிட்டு ஃபிரிஜ்ஜிலிருந்து தண்ணீர் பாட்டிலையெடுத்து மடமனவெனக் குடித்தாள்.

அந்த குளிர்ந்த நீர் வாயிலிருந்து வழிந்து மேலும் கீழும் அசைந்துகொண்டிருந்த அவள் கழுத்தின் வழியே வழி தெரியாமல் உருண்டு கொண்டிருந்தது.

“ஆர் யூ தேர்” என்றான் ரமேஷ்

“யெஸ் தண்ணி குடிச்சேன்” என்றாள் நிரஞ்சனா.

“ம்ம்ம்” என்றான்

“ஓ ஹௌ டிட் யூ லைக் தி கேல்” என்றாள்.

“வாட்?” என்றான் ரமேஷ் எரிச்சலுடன்.

அப்டி கேட்டிருக்கக்கூடாதுன்னு நிரஞ்சனாவிற்கு உரைத்தது.

நெத்தியில் தன் நடு விரலை வைத்து அழுத்தி சுத்திவிட்டுக்கொண்டாள்.

“ஆர் யூ ஓகே?” என்றாள்.

சில நேரங்களில் இப்படித்தான் சில விஷயங்கள், பேச்சை எப்படிக் கையாள்வது என்று தவிக்கவிடும். அதுவும் அன்பின் வெளிப்பாடென்றால் அதை மொட்டையாக தவிர்த்துவிடும் ஆற்றல் எல்லோருக்கும் இருப்பதில்லை.

ஒரு வேளை அவள் வசீகரன் அவளுக்கு கால் பண்ணால், ஒருவேளை அவனிடம் அவள் தனக்கு எற்பட்ட அனுபவத்தைச் சொன்னால் அவனும் இப்படித்தான் திணறுவானோ என்று படபடத்தது நிரஞ்சனாவிற்கு.

“ஏதோ உங்கிட்ட ஷேர் பண்ணணும்னு தோனிச்சு அதான் கால் பண்ணேன். உன்ன அன்கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ண வெச்சிருந்தா சாரி” என்றான் ரமேஷ்

“ஹேய் நோ பிராபளம். எனக்கு புரியுது. ஆனா என்ன சொல்றதுன்னு தெரியல” என்றாள்.

“எனக்கும் புரியுது என்றான் ரமேஷ்.

இது தான் இந்த உலகத்துல பெரிய பிரச்சனை. சில விஷயங்களின் முடிவு தெள்ளத் தெளிவா நமக்குப் புரியும் ஆனாலும் மனம் அதை கட்டிக்கொண்டு அழும்.

வினயைப் பத்தி ரமேஷிடம் சொல்லலாமா என்று ஒரு கணம் யோசித்தாள் நிரஞ்சனா.

“ஓகே மா லேட்டாச்சு ஒனக்கு. டேக் கேர் என்றான்” ரமேஷ்.

“ஷூஅர், யூ டூ” என்றாள் நிரஞ்சனா.

கால் துண்டித்தது.

நியாமான, நாகரீகமான அன்பின் வெளிப்பாடு. ஆனால் அதை ஏற்க முடியாத மனம் ஒரு பக்கம், அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் மனம் இன்னொரு பக்கம். இந்த முக்கோணத்துக்குள் சிக்கியே பல உறவுகள் காணாமல் போய்விடுகின்றன. பெர்முடா ட்ரையன்கிள் போல.

டின்ங் என்று அவள் அலைபேசியில் மெசேஜ் வந்தது.

வினயிடமிருந்து மெசேஜ்.

“ஹேய் பேசலாம். நான் வெக்கேஷன்ல கொடைக்கானல்ல இருக்கேன். சென்னை வந்துட்டு பின்ங் பண்றேன்”

அவள் கழுத்தில் உருண்டு வழிந்த நீர் அவள் அணிந்த டாப்ஸில் உறைந்திருந்தது அப்பொழுதுதான் அவளுக்கு உரைத்தது.

“ஷூயர்” என்று ரிப்ளை அனுப்பினாள்.

அதை அவன் பார்க்க எப்படியும் ஒரு சில நாட்கள் ஆகும் என்று அவளுக்குப் பளிச்சிட்டது.

அந்த மெசேஜூக்கு ஆயிரம் அர்த்தங்களை அவள் மன டிக்ச(ஷ)னரி டைப் அடிக்கத் துவங்கியது.

இந்த பிரபஞ்சத்திலிருந்து தேவையானவற்றைப் பிரித்து எடுத்துக்கொள்வது கொள்வது மட்டுமே இருத்தலின் சாராம்சமாய் இருப்பதில்லை, அதனுள், பின்னிக் கிடக்கும் “” என்ற பெரும்சிக்கலை கையாள்வதும் கூட இருத்தலின் சாராம்சமே. அதுதான் இந்த இருத்தலை இன்னும் சவாலாக்குகிறது.

நிரஞ்சனா லேப்டாப்பைத் திறந்து அவள் ப்ளே லிஸ்டைத் துழாவினாள்.

“மோகம் கொண்டேன் முருகா எனக்கருள்வாய் முத்துக்குமரா குஹா” என்று தேஷ் ராகம் அவள் அறையை நிறைத்துஅவளைப் பிழிந்து கொண்டிருந்தது.

                                                                                                                 தொடரும்..



Rate this content
Log in

Similar tamil story from Romance