வினு மணிகண்டன்

Comedy Drama Classics

4.2  

வினு மணிகண்டன்

Comedy Drama Classics

டோக்கன்

டோக்கன்

3 mins
269


கல்யாண வீடு களை கட்டி விட்டது. ஒரு வரவேற்பு விழா பெரும் வரவேற்பை பெறுவது என்பது அந்த வைபவத்திற்கு வருகை தரும் சிறப்பு விருந்தினரை பொறுத்ததே.

இப்பொழுது சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பெறுபவர்கள் இரண்டு பேர் தான். ஒருவர் சினிமா நட்சத்திரம் இன்னொருவர் அரசியல்வாதி. இரண்டும் சேர்ந்த ஒரே கலவையானால் அவருக்கு தனி சிறப்பு.

இந்த விழாவிற்கு வரப்போவது ஒரு பெரும் அரசியல் கட்சி தலைவர் கலிங்க மூர்த்தி. இந்த தொண்டரின் வீட்டு திருமண நிகழ்விற்கு அவர் வருகை தருகிறார் என்பது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய விஷயம். இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் அந்த தொகுதிக்கு ஒரு திருமண விழாவினை சிறப்பிக்க தலைவர் வருகிறார் என்பதே அந்த தேர்தலில் யார் நிற்க போகிறார்கள் யாரை நிறுத்த போகிறார் என்பதை உறுதிப்படுத்தவே என்றாகியும் போனது.


ஏகாம்பரம் சரியான ஆளுதான் சீட் கேட்ட மாதிரியும் ஆச்சு. கல்யாணத்தை தலைமை தாங்க சொன்ன மாதிரியும் ஆச்சு என்று அரசியல் வட்டாரங்கள் பேசத் தொடங்கின.

இந்த வரவேற்பு மட்டும் தலைவரின் செல்வாக்கை உயர்த்திக் காட்டி மனதுக்கு பிடித்தமாதிரி சந்தோசமாக அமைந்து விட்டால் கண்டிப்பா சீட்டு ஏகாவுக்கு தான். அதுக்காக இத்தனை நாள் கல்யாணத்தை தள்ளிபோட்டு இன்னிக்கு வச்சிருக்கான் பாரு என்று அனைவருமே பேசிக் கொண்டனர்.


தலைவரும் வந்துவிட்டார். மணமக்களை வாழ்த்தி பேசிக் கொண்டிருந்தார். வழக்கம்போல செருப்பு ஜோடிகளை தவிர மற்ற எல்லா ஜோடிகளையும் உவமையாய் வைத்து பேசினார்.

சிவாய நம.  இந்த தொகுதியில் இன்று ஒன்றாக கூடி பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முழுக்காரணம் இந்த தொகுதியை பொதுத் தொகுதியாக மாற்ற போராடித் தன் விசுவாசத்தை காட்டிய ஏகாம்பரத்தின் தந்தை ராஜசேகரனே காரணம். இன்று என் பெயர் பேசப்படுவது போல் நாளை நண்பர் ஏகாம்பரத்தின் பெயரும் பேசப்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.சிவாய நம.

நான் மன்னனாய் இருந்தால் என் முடிவே போதும். நான் மக்களின் சேவகன் என்பதால் மக்களின் முடிவே இந்த மூர்த்தியின் முடிவு. நீங்கள் தட்டும் இந்த கரவொலி உங்கள் தீர்ப்பை தெரிவிக்கிறது....... சிவாய நம கட்சிக் குழுவின் சார்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன். சிவாய நம... என்று முடித்து மேடையை விட்டு இறங்கினார்.


சாப்பிட அழைத்து சென்ற ஏகாம்பரம் கலிங்க மூர்த்தி யை அமர வைத்து சாப்பிடுவது போல பேருக்கு அமர்ந்து எழுந்து கிளம்ப தயாரானார்.

கார் வரை நடந்து சென்று கொண்டிருந்த கலிங்க மூர்த்தியிடம் மரக்கன்று ஒன்றை கையில் கொடுக்க முற்பட்டார். அதை தனது உதவியாளரிடம் வாங்க சொல்லி உள்ளே வைக்க சொன்னார்.

தலைவரே இது சாதாரண செடி இல்லை. இதை வச்சு சிவனுக்கு அபிஷேகம் பண்ணுனா உங்க செல்வாக்கும் பதவியும் ஒரு மணி அளவு கூட குறையாம நிரந்தரமாக அப்படியே இருக்கும்....

அப்படியா.... அப்போ இது.....


காலையிலே பேப்பர் பார்க்கலயா ஐயா.... இந்தாங்க பேப்பர் என்று கொடுத்து கார் கதவை திறந்து அவர் அமர்ந்த பின் பவ்யமாக கதவை சாத்திவிட்டு வணக்கத்துடன் நின்றார். கார் கிளம்பியது.

ஏகாம்பரத்தின் நெருங்கிய நண்பர் அருகில் நின்று கொண்டு.

அப்புறம் என்ன.... இந்த தொகுதிக்கு இனி நீ தான் எம். எல். ஏ... சந்தோசமா...

ஏகாம்பரம் சிரித்துக் கொண்டே...


"தலைவர் எனக்கு சீட் இல்லைங்கிறதைத் தான் நாசூக்கா சொல்லிட்டு போறாரு."

"என்னயா சொல்ற... உங்க அரசியல் பாஷையில இப்படியெல்லாம் அர்த்தமா?"

இந்த கல்யாணம் வரவேற்பு எல்லாம் அவர் பேரை வச்சு நான் பண்ணுன ஒரு முதலீடு மாதிரி.... அவர் பெயர் தான் எனக்கு இங்க டோக்கன்.. அதை வச்சு தான் இந்த கல்யாணத்த இவ்வளவு சிறப்பா நடத்தி முடிச்சேன்......

" அதான் சீட் இல்லைனு தெரியும் அப்புறம் ஏன்யா இவ்வளவு கவனிப்பு"

"சீட் இல்லைனு எனக்கு எப்பவோ தெரியும் ஆனால் இனி நானே கல்யாண செலவு செட்டில்மென்ட் பணம் கொடுத்தாலும் இங்கே எவனும் வாங்க மாட்டான்.... இருக்கட்டும் அண்ணே அப்புறம் பார்க்கலாம்னு சொல்வான்... ஒவ்வொருத்தருக்கும் என்னை வச்சு ஒவ்வொரு காரியம் நடக்க வேண்டி இருக்கு..... அவரு எனக்கு சீட் தர்றேனு இங்க நிக்க வைக்கிறேன்னு மேடையில சொல்லியிருந்தா அந்த எதிர்பார்ப்பு எல்லாம் உடைஞ்சிருக்கும்...... இப்போ பாரு இந்த எதிர்பார்ப்பிலேயே என் இன்னொரு பொண்ணு கல்யாணத்தை கூட முடிச்சிடுவேன்....


"அடப்பாவி..... கில்லாடியான ஆளு தான் நீ.... அப்போ எம். எல். ஏ பதவி ஆசையெல்லாம் இல்லையா"

"யார் சொன்னா.? ஏகாம்பரம் எம். எல். ஏ னு சொல்றப்ப பின்னாடி பதவி வருது... அதுவே அமைச்சர் ஏகாம்பரம்னு சொல்லிப் பாரு பதவியோடவே என் பேரு வரும்..."

"இந்த சீட்டே இல்லன்னு ஆயிடுச்சு இதுல எதுக்கு அப்படி ஒரு ஆசை. அது எப்படி நடக்கும்"

" அதுக்கு தான் கையில கொடுத்தனுப்பிருக்கனே....... "

பேப்பரை பிரித்து படித்த கலிங்க மூர்த்தி

ஆபத்தான போதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம் என்ற செய்தி இருந்தது.

யோவ் காரை நிறுத்து.. அந்த செடியை எடு...


ஏன் சார்...

அட நிறுத்திட்டு அந்த செடியை எடுத்து பாரு.

இந்தாங்க சார்.

யோவ் இது கஞ்சா செடி மாதிரி இருக்குயா.... அவனுக்கு ஃபோன்ஐ போடு.

நண்பருடன் பேசிக் கொண்டிருந்த ஏகாம்பரத்தின் போன் ஒலித்தது.

பார்த்தியா.. நான் சொன்னேன்ல தலைவர்கிட்ட இருந்து தான் காலிங்.

"தலைவரே சொல்லுங்க தலைவரே..."

"யோவ் என்னயா இது... என்ன வசமா மாட்டி விட்ருவ போல... என்னயா கொடுத்து அனுப்பிருக்கே....

" தலைவரே அதான் சொன்னனே.... நீங்க ஒரு சிவபக்தர் உங்களுக்கு தெரியாததா? அதுவும் போக பேஸ்புக்ல பார்த்தேன் ஒரு ஜோசியர் சொல்லிருக்காரு..... நீங்க முயற்சி பண்ணி தான் பாருங்களேன்."

"யோவ்... ஏதாவது பிரச்சினை ஆயிடப்போகுது. அது மருந்துக்காக உபயோகப்படுத்தலாம்னு தான் சொல்லிருக்காங்க.... வீட்ல வளர்க்கலாம்னு சொல்லல..... ஒழுங்கு மரியாதையா வீட்ல எதும் மிச்சம் மீதி இருந்தா தூக்கிப் போட்டுடு..... உனக்கு சீட் தரலாம்னு தான் இருந்தேன். இப்போ தான்யா யோசிக்க வேண்டியதா இருக்கு. "

தலைவரே அப்படி சொல்லாதீங்க... நான் உங்களுக்கு நேர்மையா இருப்பேன். வீடியோ கால் போடுங்க நான் உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்....

சரி சரி போனை வை.... நாளைக்கு பேசு யோசிப்போம்.

போனை வைத்துவிட்டு.,, யோவ் இந்த செடியை இங்கேயே எங்கயாச்சும் மறைவா புதைச்சிடு....

ஐயா புதைச்சா வளந்துடும்.


அட ஆமா.... எரிச்சாலும் வாசனை எதும் வந்து பிரச்சினை ஆயிடக்கூடாது. அதுல இருக்கிற இலையெல்லாம் பறிச்சு இந்த கவர்ல போடு.... தொட்டியை உள்ள வை வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம்....

அதே மாதிரி செய்ய., அந்த இலைகளை சேகரித்த கவரை பத்திரமாக வாங்கிக் கொண்டு சிவாய நம என்று சொல்லி தன் காரின் இருக்கைக்கு முன் இருந்த லிங்கத்தின் அருகில் பத்திரமாக வைத்தார்.

கார் கிளம்பியது......



Rate this content
Log in

Similar tamil story from Comedy