Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Vadamalaisamy Lokanathan

Abstract

4.5  

Vadamalaisamy Lokanathan

Abstract

வெற்றி

வெற்றி

2 mins
220



 வெற்றி என்றால் என்ன.அடுத்தவரின் பலவீனம்,எடுத்து கொள்ளும் முயற்சியின் பலம்,நம் அறிவை பயன் படுத்தி கொள்ளும் விதம்,இப்படி பல காரணிகள் ,நம் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.

சில நேரங்களில் அது ஒரு கூட்டு முயற்சி தான்.ஒரு முயற்சி எனக்கு எளிதாக அமைந்து விட்டால் அது வெற்றி என்று சொல்லி கொள்கிறேன்.

நான் கடந்த வந்த காலங்களை நினைவு கூர்ந்து பார்க்கிறேன்.

ஒன்றை ஆசை பட்டால் அதை அடைய என்ன வழிகள் என்று தேடுகிறோம்.அந்த தேடுதல் முறையாக இருக்க வேண்டும்.அதாவது அதை நல்ல வழியில் அடைய வேண்டும்.

கையூட்டு கொடுத்தும் ஒரு காரியத்தை சாதிக்கலாம்.நேர் வழியில் சென்றாலும் சாதிக்கலாம்.ஆனால் நேர்வழி நிறைய நேரத்தை எடுத்து கொள்ளும்.ஒரு முறையற்ற வழியில் சென்று சாதிக்கும் எந்த காரியமும் வெற்றி என்று எடுத்து கொள்ள முடியாது.

வெற்றியை எப்படி கணக்கிட முடியும்.குறைந்த பட்ச மதிப்பெண் வாங்கிய மாணவனும் வெற்றி பெறுகிறான்.நூற்றுக்கு நூறு வாங்கிய மாணவனும் வெற்றி பெறுகிறான். வெற்றி என்றால் அது ஒரு பிரம்மாண்டம் என்று ஒரு எண்ணம் உருவாகிறது.ஆனால் உண்மையில் அப்படி இல்லை தான்.

ஒருவர் போன வழியில் நானும் சென்று இலக்கை அடைந்தால் நான் எப்படி அதை எனக்கு வெற்றி என்று சொல்ல முடியும்.

யாருக்கும் தெரியாத ஒன்றை கண்டு பிடிக்கும் போது அது வெற்றி.

ஒரு குடும்ப வாழ்க்கையில் வெற்றி பெற விட்டு கொடுக்கும் மனப்பான்மை வேண்டும்.பிடிவாதம் வெற்றியை கொடுக்காது.அது போல எனக்கு எதிலும் வெற்றி பெற வேண்டும் என்றால்,என்னை சார்ந்தவர்களை அறிவாளி ஆக்க வேண்டும்.அவர்களுக்கு தெரியாத பல விசயங்களை சொல்லி கொடுக்க வேண்டும்.

போதனை,சொற்பொழிவு போன்றவை அவ்வப்போது தேவை படும்.

அடுத்தவர் மனதை புரிந்து கொள்ளும் பக்குவம் நமக்கு வேண்டும்.எதிராளியை புரிந்து கொள்ளாமல் போட்டி போட முடியாது.

வெற்றி எட்டாக்கனியும் அல்ல,அதே நேரத்தில் மந்திரத்தால் அடையவும் முடியாது.தெரிந்து கொள்ளும் ஆர்வம்,அதை செய்ய தெரியும் நுணுக்கம்,சமயம்,சந்தர்ப்பம்,இப்படி பல காரணிகள் தேவை படுகிறது.எந்த நேரத்தில் எப்படி செய்ய வேண்டும்,,போன்ற நெளிவு சுளுவுகள் அறிந்த இருப்பது அவசியம்.

அப்படி தெரிந்தாலும் எல்லா நேரமும் வெற்றி கனியை பறிக்கவும் முடியாமல் போகலாம்.அது எதிராளியின் பலவீனத்தை பொறுத்து அமைகிறது.



Rate this content
Log in

Similar tamil story from Abstract