Vadamalaisamy Lokanathan

Crime

4  

Vadamalaisamy Lokanathan

Crime

திருடன்

திருடன்

3 mins
17


திருடன்


குட்டி என்பவன் பெயரை கேட்டால் மக்கள் எல்லோரும் நடுங்குவார்கள்.

திருட்டுக்கு பெயர் போனவன்.இது வரை அவன் செய்த குற்றங்களை நிரூபிக்க முடியவில்லை.திருட்டு நடக்கும் இடத்தில் அதற்கான தடயம் எதுவும் விட்டு வைக்க மாட்டான்.

காவல் துறை கடுமையான முயற்சிகள் செய்தும் அவன் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.


அவனால் பல குடும்பங்கள் நகை பணம் திருட்டு கொடுத்து விட்டு,பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.பல திருமணங்கள் நின்று போய் விட்டன,பலரது வாழ்க்கை நடுத்தெருவுக்கு வந்து உள்ளது.

அவன் செய்வது பாவமான செயல் என்று தெரிந்தும்,அவனுக்கு நெருக்கமான உறவுகள் அவனுக்கு புத்தி சொல்லியும் அவன் திருந்துவதாக இல்லை.

காவல் துறை அவனை சுட்டு பிடிக்கவும் ஆணை பிறப்பித்து இருந்தது.

எப்போது எங்கே,என்ன வேடத்தில் கொள்ளை அடிக்கிறான் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவன் திறமை.

ஒரு நாள் மதியம் உணவு அருந்த ஒரு ஹோட்டலுக்கு வந்து இருந்தான்.உணவை சாப்பிட்டு விட்டு பணத்தை கொடுத்து விட்டு வெளியில் வந்து பக்கத்தில் இருந்த பெட்டிகடையில் ஒரு சிகரெட் வாங்கி பற்ற வைத்து விட்டு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்று கொண்டு இருந்தான்.

அந்த ஹோட்டல் வாயிலுக்கு சற்று 

தள்ளி ஒரு ஏழு வயது பெண்

குழந்தை அழுது கொண்டு நின்றது.

அதை பார்க்க அவனுக்கு இறக்கம் தோன்றியது.

சாதரணமாக அவன் உணர்ச்சி வசப்பட மாட்டான்.ஆனால் இன்று அந்த குழந்தை தேம்பி தேம்பி அழுவதை பார்த்து,அந்த குழந்தை அருகில் சென்று கையை பிடித்து ஏன் அழுது கொண்டு நிற்கிறாய் என்று கேட்டான்.

அதற்கு அந்த குழந்தை,அம்மா உடம்பு சரியில்லாமல் பத்து நாளாக வேலைக்கு போகவில்லை.கையில்

கடைசியாக இருந்த நூறு ரூபாயை கொடுத்து ஹோட்டலில் ஒரு பார்சல் சாப்படும்.மீது காசுக்கு,மருந்தும் வாங்கி வர சொல்லி இருக்கிறாள்.

பார்சல் வாங்க ஹோட்டலுக்கு வந்து சட்டைப்பையில் பணத்தை எடுக்க பார்க்கும் போது பையில் பணம் இல்லை.ஹோட்டலில் பணம் இல்லாமல் சாப்பாடு தர முடியாது என்று சொல்லி விட்டார்கள்.அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் 

பயந்து போய் அழுது கொண்டு நிற்கிறாள் என்று குட்டி தெரிந்து கொண்டான்.

அவன் கையில் இருந்து ஒரு நூறு ரூபாயை கொடுக்க அந்த குழந்தை உங்க பணம் வேண்டாம்,எனக்கு என் அம்மா கொடுத்த பணம் தான் வேண்டும் என்று மீண்டும் அழ தொடங்கியது.

அந்த குழந்தை பக்கத்தில் இருந்த டாஸ்மாக் கடையை தாண்டி வரும் போது ஒரு குடிகாரன் அந்த குழந்தைக்கு தெரியாமல் அந்த பணத்தை எடுத்து இருக்கிறான்.

அதை அங்கு இருந்த இனி ஒரு குடிகாரன் வந்து குட்டியிடம் சொல்ல,அவனை தேடி டாஸ்மாக் கடைக்கு சென்று அவனை பிடித்து கூட்டிக்கொண்டு வந்தான்.

நல்ல வேளை இன்னும் அதை செலவு செய்யாமல் வைத்து இருந்தான்குட்டி அவனை பிடித்த எடுத்த பணத்தை  அந்த குழந்தை கையில் கொடுக்க சொன்னான்.

அந்த ஆள் தான்  எடுத்தான் என்று அவனை சொல்ல வைத்து பணத்தை கொடுக்க,அந்த குழந்தை அதை வாங்கிகொண்டு சாப்பாடு வாங்கி சென்றது.

அதை பார்த்த குட்டி சே ஒரு குழந்தை இவ்வளவு கஷ்டத்தில் அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படவில்லை.

அம்மாவுக்கு சாப்பாடும் மருந்தும் வாங்க முடியவில்லை வருத்தப்பட்டு நிற்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

எத்தனை வீட்டில் திருடி இருப்பேன்.

திருட்டு கொடுத்த குடும்பங்கள் எப்படி துன்பம் அனுபவித்து இருப்பார்கள் என்று நினைத்து மிகவும் வருந்தினான்.

இனி எக்காரணமும் கொண்டு திருட்டில் ஈடுபடக்கூடாது என்று முடிவு செய்தான்.

அந்த கணமே அந்த ஹோட்டலுக்குள் நுழைந்து அவனுக்கு ஏற்ற வேலை வேண்டும் என்று கெஞ்சி கேட்டு கொண்டு இருந்தான்.


Rate this content
Log in

Similar tamil story from Crime