Vadamalaisamy Lokanathan

Drama

4  

Vadamalaisamy Lokanathan

Drama

பெண்மை

பெண்மை

4 mins
14


பெண்மை


அந்த அலுவலகத்தில் விஜயராணி என்று சொன்னால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

அவளுக்கு இருபது வயதில் ஒரு பெண்.கல்லூரி படிப்பை முடிக்க போகிறாள்.அவள் பெயர்

உஷா.பட்டம் வாங்கியதும் IPS படிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறாள்.

விஜயராணி திருமணம் செய்து கொண்டாலும்,இப்போது கணவனை விட்டு பிரிந்து வாழ்கிறாள்.

கணவன் தாமு,தற்போது இனியொரு பெண்ணுடன் வசித்து வருகிறார்.அந்த பெண் வேறு யாருமல்ல,விஜயராணியின் தங்கை தான்.அவளுக்கு திருமணம் ஆகி ஆறு மாதத்தில் கணவனை இழந்து விட்டாள்.வேறு புகலிடம் இல்லாமல் அக்காவை தேடி வர,விஜயராணி அவளுக்கு அடைக்கலம் கொடுத்து,

வீட்டோடு வைத்துக்கொண்டாள்.

விஜயராணி வேலைக்கு சென்று வருவதால்,வீட்டை கவனிக்க அவளுக்கும் ஒரு ஆள் தேவை பட்டது.மகள் உஷா கல்லூரியில் இருந்து திரும்பி வரும் போது அவளுக்கு சிற்றுண்டி கொடுக்க, ட்யூஷன் படிக்க அனுப்ப,தங்கைசித்ரா அவளுக்கு

மிகவும் உதவியாக இருந்தாள்.

தாமு ஒரு வக்கீல்,எந்தநேரம்

வீட்டுக்கு வருவார் என்று தெரியாது.சில நேரங்களில் பகல் உணவு சாப்பிட வீட்டிற்கு வருவார்.அதுவும் சித்ரா வீட்டிற்கு வந்தபிறகு.சித்ரா வருவதற்கு முன்பு

அவர் காலையில் அலுவலகம்,

அல்லது நீதி மன்றம் சென்றால்,

இரவு தான் திரும்புவார்.அவருக்கு இப்போது வயது ஐம்பது,ஒரு பெண்ணிடம் மயங்கும் வயதும் அல்ல.அதே நேரம் மனைவி உயிருடன் இருக்கும் போது இன்னொரு பெண்ணுடன் பழகுவது 

சட்டப்படி தவறு என்று அவருக்கும் தெரிந்து இருந்தது.

மனைவி விஜயராணி கூட அவருக்கு பேச நேரம் மிக குறைவு தான்.அவளும் களைப்பாக வந்து இரவு உணவை தயாரித்து மகளுக்கு கொடுத்து விட்டு,கணவருக்கும் எடுத்து டைனிங் டேபிளில் வைத்து விட்டு உறங்க சென்று விடுவாள்.

காரணம் அடுத்த நாள்அலுவலகம் 

செல்ல வேண்டும்.தாமு அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

காரணம் குடும்பத்தில் நிரந்தரமாக சம்பாதிப்பது மனைவி தான்.குடும்ப செலவை மொத்தமும் அவள் தான் பார்த்துக்கொள்வாள்.மட்டுமல்ல அவர் வரும் வரை சித்ரா காத்து இருந்து உணவு கொடுப்பாள்.அதனால் மனைவியை அவரும் கண்டுகொள்ளவில்லை.

வக்கீல் தொழிலில் நிரந்தர வருமானம் கிடையாது.கிடைக்கும் போது அலுவலக வாடகை,கரன்ட் பில்,குமாஸ்தா சம்பளம் போக கிடைப்பது அவருடைய செலவுக்கு சரியாக இருக்கும்.எப்போதாவது ஒரு பெரிய தொகை கிடைத்தால்,அதை விஜயராணி கையில் கொடுப்பார்.

அதையும் அவள் வாங்கி வைப்பு நிதி கணக்கில் போட்டு விடுவாள்.

இருப்பது பெண்,அவளுக்கு நிறைய செலவு செய்ய வேண்டும்.அதற்கு சேமிப்பு அவசியம்.


விஜயராணி தாமுவைதிருமணம் செய்யும் போது அவளது பெற்றோர்கள் மாப்பிள்ளை வக்கீல் என்று நினைத்து கொடுத்தார்கள்.

ஆனால்மாப்பிள்ளையின்வருமானம் 

என்ன என்று கேட்கவில்லை.

கேட்கவும் கூடாது.திருமணம் ஆகி தனி குடித்தனம் வந்த பிறகு தான் தெரிந்தது,குடும்ப செலவு கடனில் ஓடிக்கொண்டு இருக்கிறது என்று.

ஆச்சு,குழந்தையும் பிறந்தது மூன்று வருடம் ஆகி விட்டது.அது வரை விஜயராணி பெற்றோர் மகளுடைய நிலைமையை கண்டு பணம் கொடுத்து உதவினார்கள்.

அதனால் தாமுவுக்கு பெரிய ரோஷம் ஒன்றும் வந்து விடவில்லை.இருக்கும் வீடு சொந்த வீடு.ரேஷனில் கிடைக்கும் அரிசியை வைத்து சாப்பாடு பொங்கி விடலாம்.வேறு என்ன செலவு.கிடைக்கும் வருமானத்தில் மாதம் அல்லது மூன்று மாதம் ஒரு முறை கொஞ்சம் பணம் கொடுப்பார்.

அது எம்மாத்திரம்.உஷா மூன்று வயது ஆனதும்,பள்ளியில் சேர்த்து விட்டு,அவள் தன் படிப்புகேற்ற ஒரு வேலையை தேடி கொண்டு.மேலும் படித்து,சொந்த முயற்சியில் இப்போது மேனஜர் ஆக பதவி உயர்ந்து இருக்கிறாள்.வேலை அதிகம் ஆக வீட்டை சரியாக கவனிக்க முடியவில்லை.

கணவனையும் ஒரு பொருட்டாக கருதாமல் கடமைக்கு அவருடன் பேசி வந்தாள்.

பெற்றோரும் இறந்து போக,கணவனை இழந்த தங்கை அக்காவிடம் புகலிடம் கேட்டு வர,சரி வீட்டை நிர்வகிக்க ஒரு நல்ல ஆள் என்று சற்று சுயநலத்துடன் தங்கையை சேர்த்துக் கொண்டாள்.


ஆனால் அது அவளுக்கு எதிராக திரும்பும் என்று நினைக்கவில்லை.

திருமணம் ஆகி ஆறு மாதத்தில் கணவனை இழந்து வந்த தங்கை 

உணர்ச்சியை எவ்வளவு தூரம் கட்டுபடுத்த முடியும்.பஞ்சும் நெருப்பும் பத்திக்

கொண்டது.

கணவனும் தங்கையும் பழகுவது ஒரு நாள் நேரில் பார்த்து விட்டாள்.

அது கூட அவளுக்கு கோபத்தை வரவழைக்கவில்லை.இன்னும் இரண்டு வருடம் போனால் திருமணம் செய்து கொடுக்க வேண்டிய மகளை வீட்டில் வைத்துக்கொண்டு இருவரும் இப்படி பழகி வந்தது தான்அவளுக்குபெரியஅதிர்ச்சியை

கொடுத்தது.

ஆனால் மகளுடைய திருமணம் முடியும் வரை கணவன் கூட இருக்க வேண்டும்.

தங்கை செய்த தவறை தண்டிக்கும் விதமாக அவளை வீட்டை விட்டு வெளியில் அனுப்பினால்,அவளது பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி விடும்.அல்லது கணவனையும் தங்கையையும் சேர்த்து வெளியில் அனுப்பி விட்டால்

தங்கையை வைத்து காப்பாத்த கணவனுக்கு போதிய வருமானம் இருக்காது.

என்ன செய்வது என்று யோசித்து,வீட்டில் இருந்து கொண்டு மகள் இதை பார்த்து விட கூடாது என்று நினைத்து,உடனே அவளை ஒரு ஹாஸ்டலில் சேர்த்து விட்டாள்.

படிப்பை முடித்து விட்டு IPS ஆக வேண்டும் என்று சொன்னதால் தொடர்ந்து விடுதியில் இருந்து கொண்டு அதற்கான பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டாள்.


இப்போது கணவனும் தங்கையும் எப்படி இருந்தாலும் யாருக்கும் தெரிய போவது இல்லை.தானும் அந்த வீட்டில் தான் இருந்து கொண்டு அலுவலகம் சென்று வந்தாள்.வெளி உலகத்திற்கு அக்கா தங்கை ஒற்றுமையுடன் குடும்பம் நடத்துவதாக தான் பார்ப்பார்கள்.படிப்புக்கு வேண்டி மகள் விடுதியில் இருப்பது யாருக்கும் எந்த சந்தேகத்தையும் கொடுக்காது.

தானும் தனியாக இருந்தால் பாதுகாப்பு இருக்காது.வெளிப்பார்வைக்கு கணவனுடன் குடும்பம் நடத்தும் ஒரு பெண்ணாக தான் தெரியும்.அது போதும் அவளுக்கு.ஒரு வேளை கணவன் இந்த சுகத்திற்கு ஆசைப்பட்டு வேறு பெண்ணை தேடி இருந்தாலும் அது அவளுக்கு அவமானம்.இப்போது எல்லாமே காப்பாற்ற பட்டு விட்டது.அந்த மனுஷன் வயதாகும் போது அவரே அடங்கி விடுவார்.

விஜயரணி நினைத்து இருந்தால் குடும்பத்தை பிரித்து இருக்கலாம்.

ஒரு சாமர்த்தியமான பொண்ணுக்கு அது அழகல்ல என்று பொறுத்துக் கொண்டாள்.

அவளுடைய பொறுமை ஏற்று கொள்ளும் படி தானே இருக்கிறது.

(முற்றும்.)



Rate this content
Log in

Similar tamil story from Drama