Vadamalaisamy Lokanathan

Abstract

3.1  

Vadamalaisamy Lokanathan

Abstract

சிகப்பு எனும் எச்சரிக்கை

சிகப்பு எனும் எச்சரிக்கை

3 mins
15


சிகப்பு எனும் எச்சரிக்கை

செந்தில்ஒருவசதியானகுடும்பத்தில் 

பிறந்து வளர்ந்தவன்.

கல்லூரியில் படித்து பட்டம் வாங்கி இன்றைக்கும் மென்பொருள் நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் வாங்கி கொண்டு இருக்கிறான்.

அவனுக்கு ஆரம்பம் முதலே காதல் என்றால் அலர்ஜி.காதல் துன்பத்தை கொடுக்கும் என்று அவன் மனம் எப்போதும் எச்சரித்து கொண்டே இருக்கும்.

இப்போது அவனும் திருமண சந்தையில் தன்னை விளம்பர படுத்திக்கொள்ள நேரம் வந்து விட்டது.பெற்றோர்கள் சீக்கிரம் ஒரு பேரன் அல்லது பேத்தியை கொஞ்ச வேண்டும்,உனக்கு பிடித்த பெண் இருந்தாலும் எங்களுக்கு சம்மதம் என்று சொல்லி விட்டார்கள்.

அவனுக்கு காதலே அலர்ஜி,

காதலுக்குபிறகுகல்யாணம்,

பெண்டாட்டி,பிள்ளைகள்,படிப்புவீடு வாசல், கார்,இத்தனையும் கட்டி மேய்க்க வேண்டும்.

அவனுக்கு தெரிந்த நண்பர்கள்,மச்சி

கல்யாணம் என்று கட்டாய படுத்துவார்கள்,ஜாக்கிரதை,அந்த வலையில் சிக்கி கொள்ளாதே என்று

அக்கறையுள்ள நண்பர்கள் சொல்லி கொண்டே இருந்தார்கள்.இன்னும் சிலர்,எத்தனை நாளைக்கு,ஹோட்டலில் சாப்பாடு,பணி முடிந்து வீட்டிற்கு போனால், சூடா காப்பி கொடுக்க யார் இருக்கா,உன் அழுக்கு துணியெல்லாம் யார் துவைத்து தருவார்கள்.நீ சேர்த்து வைக்கும் பணத்தை யாருக்கு கொடுக்க முடியும்,so கல்யாணம் நிச்சயம் தேவை,சீக்கிரம் செய்து கொள் என்று அவசர படுத்தினார்கள்.

அப்பவும் அவன் மனம் எச்சரித்தது,

எல்லோரும் சேர்ந்து உன்னை படுகுழியில் தள்ளி விடுவார்கள்,இன்னும் சற்று யோசி

என்று மனம் மீண்டும் எச்சரித்தது.

எதற்கும் இன்னும் இரண்டு பேரை விசாரிப்போம் என்று ஒன்று விட்ட அக்காவை கேட்டான்.அவளும் திருமணம் ஆனவள்.சிக்கலான கேள்வி தான் இருந்தாலும்,காதல் கல்யாணம் வேண்டாம்,பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்தால் தயங்காமல் ஏற்றுக்கொள் என்று சொன்னாள்.இருவரும் பேசி கொண்டு இருப்பதை கவனித்த,அக்கா வீட்டுக்காரர்,என்ன ரொம்ப நேரம் பேசி கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்க,உடனே அக்கா,தம்பியை திருமணம் செய்து கொள்ள,ஆலோசனை சொல்லி கொண்டு இருந்தேன் என்றாள்.

உடனே அவர் மாப்பிள்ளை,நீ தவறான கேள்வியை தவறான ஆளிடம் கேட்டு கொண்டு இருக்கிறாய்.அனுபவ பட்டவன்,நான் சொல்கிறேன்,கேட்டுக்கோ என்றார்.

மாமா சரியான ஆலோசனை சொல்லுவார் என்று அவர் வாயை பார்த்துக்கொண்டு இருந்தான்.

அவர் நீ ரெயிலில் பயணம் செய்தது உண்டா என்று கேட்டார்.அவனும் ஆமா அடிக்கடி செல்வேன் என்றான்.பிரயாணம் எப்படி இருக்கும் என்று மாமா கேட்க,குளிர்சாதன வசதி,confirmed berth,அதுவும் லோயர் பர்த்,பயணம் அருமையாக இருக்கும் என்றான்.

சரி எப்பாவது ticket confirm ஆகாமல், waitlist டிக்கெட் RAC வரை வந்து ஸ்லீப்பர் கிளாசில் பயணம் செய்தது உண்டா என்று கேட்டார்.உடனே அவன் ஐயோ அது மாதிரி கொடுமை எதுவும் இல்லை.TTR எப்ப வருவார்,பெர்த் confirm ஆகுமா என்று 

கவலை பட்டு கொண்டே இருக்க வேண்டும்,TTR வரவே பாதி தூரம் கடந்து விடும்.வந்த பிறகு,நான்கு கோச் தள்ளி ஒரு side upper தருவார்.

பெட்டி படுக்கையுடன்,அங்கு சென்றால்,அதில் ஒருவர் முகத்தை மூடி படுத்துக்கொண்டு குறட்டை விடுவார்.அவரை எழுப்பி,பெர்த் என்னுடையது என்று சொல்லும் போது அவர் சொல்வார்.மிகவும் சரி,என்னுடைய மனைவி பக்கத்து பெர்த்தில் படுத்து இருக்காள்.

எனக்கு கிடைத்த பெர்த் அடுத்த கோச் சில் இருக்கு, பிளீஸ் நீங்க அங்கே போய் படுத்து கொள்ளுங்கள் என்று சொல்வதை கேட்கும் போதுஇரயில்,முக்கால்வாசி தூரம் கடந்து இருக்கும்.அப்புறம் என்ன,பயணம் தூக்கம் துறந்து.

அது ஒரு பயங்கர அனுபவம்.அன்று முதல் confirmed டிக்கெட் இல்லாமல் ரெயிலில் போவது இல்லை மாமா என்றான்.

சரியாக புரிந்து கொண்டீர்கள் மாப்பிள்ளை.திருமண வாழ்கையும் அது போல தான்.RAC டிக்கெட் போல,

அது confirm ஆகுமா ஆகாதா, ஆனா

எப்படி பெர்த் தேடி போகிறோம் ,அதே கதை தான் திருமணம் செய்தவன் கதையும்.

புரிந்ததா,மாப்பிள்ளை இப்ப நீ முடிவு செய்துக்கோ,RAC டிக்கெட் பயணம் வேண்டுமா வேண்டாமா என்று கூறினார்.

நல்லவேளை தக்க தருணத்தில் மாமா வந்து சிகப்பு விளக்கை போட்டு எச்சரித்து விட்டார்.நன்றிங்க மாமா உங்க ஆலோசனைக்கு என்று கூறி விட்டு,பெற்றோரை பார்க்க சென்றான் செந்தில்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract