Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Vadamalaisamy Lokanathan

Abstract

4.5  

Vadamalaisamy Lokanathan

Abstract

சுதந்திரம்

சுதந்திரம்

2 mins
351


சுதந்திரம்.

நாட்டின் சுதந்திரம் பல பேருடைய தியாகத்தின் பரிசு.இப்போது உள்ள தலைமுறைக்கு சுதந்திரத்தை பற்றி தெரிய வாய்ப்பு இல்லை.

அவர்களுக்கு தெரிந்த சுதந்திரம்,தன்னுடைய வாழ்க்கை யாருடைய கட்டுப்பாட்டிலும் இருக்க கூடாது என்பது தான்.அவனோ அவளோ செய்யும் போது நான் ஏன் செய்ய கூடாது.இது இன்றைய தலைமுறையின் கொள்கை.யாரும் அவர்களை கேள்வி கேட்க கூடாது.

கேட்டால் அது என் சுதந்திரம் என்று சொல்வார்கள்.

வாணி படித்து முடித்து வேலைக்கு போகிறாள்.பணி செய்யும் நகரத்தில் தனி வீடு எடுத்து,தனியாக வாழ்ந்து வரும் பெண்.அவளுக்கு கட்டுப்பாடு பிடிக்காது,இரு பாலரும் சமம் என்று நினைப்பள்.பெண்ணாக இருந்தாலும் அவள் அதிக நேரம் ஆண்கள் நடுவே தான் இருப்பாள்.எனக்கே பயம் இல்லை உனக்கென்ன பயம் என்று ஆண் நண்பர்களை கேலி செய்வாள்.

ஒரு நாள் அவளும் அவளது தோழியும் இரு சக்கர வாகனத்தில் இரவு பன்னிரெண்டு மணிக்கு தங்கும் இடத்திற்கு திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது சில வாலிபர்கள்,ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து கொண்டு இருந்தார்கள்,உடனே வண்டியை நிறுத்தி அவர்களை கேள்வி கேட்க,அந்த கும்பல் இவளை அடிக்காத குறையாக பேசி,நாங்கள் நண்பர்கள் விளையாடி கொண்டு இருக்கிறோம்,இதில் தலையிட வேண்டாம் என்று கூறி விட்டார்கள்.உண்மையில் அந்த கும்பல் அந்த பெண்ணுக்கு துன்பம் கொடுத்து கொண்டு தான் இருந்தார்கள்.வாணி ஒன்றும் செய்ய முடியாமல் அங்கு இருந்து கிளம்பி போனாள்.கொஞ்ச தூரம் சென்று நிறுத்தி அவர்களை பார்த்து கொண்டு இருக்க,அப்போது ஒரு போலீஸ் ரோந்து வாகனம் வர,அந்த பெண்ணை விட்டு விட்டு ஓடி விட்டார்கள்.போலீஸாரிடம் ஒன்றும் பிரச்சினை இல்லை தெரிந்த நண்பர்கள் தான் என்று சொல்லி விட்டு அந்த பெண்ணும் இவர்களை கடந்து வண்டியில் வேகமாக சென்றாள்.

இரவு திரும்பும் போது அவளுடைய தோழி நாம் ஒரு வாடகை வண்டியில் போய் விடலாம்,காலையில் வந்து நமது வாகனத்தை எடுத்து கொள்ளலாம் என்று கூறியும் வாணி சம்மதிக்கவில்லை.நம்முடைய சுதந்திரத்தில் குறுக்கிட யார் இருக்கிறார்கள் என்றாள்.அதற்கு தோழி,நம்முடைய சுதந்திரம் இருட்டில் தனியாக போவது அல்ல.நடு இரவு வரை இங்கு குடித்து கும்மாளம் போடுவது தான் நம்முடைய சுதந்திரம்.

அது போல சமூக விரோதிகள் நடு இரவில் உலா வருவது அவர்கள் சுதந்திரம்.ஒரு பாம்பு சுதந்திரமாக ஊர்ந்து செல்லும் போது அது யாரையும் கடிக்க வேண்டும் என்று நினைப்பது இல்லை.அதற்கு துன்பம் வரும் போது அதை மிதித்தவன் காலை கடிக்கிறது.அது போல,அந்த கும்பல் சுதந்திரமாக அங்கு சுற்றி கொண்டு இருக்கிறார்கள்.அவர்களுக்கு நாம் இடையூறு செய்ய,திரும்பி நம்மிடம் வம்பு செய்கிறார்கள்.நம்மிடம் வம்பு செய்வது அவர்கள் நோக்கம் அல்ல,ஆனால் அவர்கள் சுதந்திரத்தை நாம் தொந்தரவு செய்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை,நம்மை பயப்படுத்த அடாவடி செயல்களை செய்கிறார்கள்.சுதந்திரம் என்பது நமக்குள்,நான்கு சுவருக்குள்.அதை விட்டு பொது இடங்களில் சுதந்திரம் என்று  கூறி அடுத்தவர்களை தொந்தரவு செய்ய முடியாது.

ஆகையால் இடம் பொருள் அனுசரித்து தான் நாமும் சுதந்திரமாக இயங்க முடியும்.கட்டுப்பாடு என்பது நம்முடைய பாதுகாப்பு கருதி அதை கடைபிடிக்க வேண்டும்.புரிந்து கொள் என்று தோழி சொன்னாள்.

முற்றும்..



Rate this content
Log in

Similar tamil story from Abstract