Vadamalaisamy Lokanathan

Classics

5  

Vadamalaisamy Lokanathan

Classics

சுதந்திர போராட்டம்

சுதந்திர போராட்டம்

1 min
428


குப்பு சாமிக்கு இப்போது வயது தொண்ணூறு.பத்து வயதில் அவருக்கு சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாது.

ஆனால் கிராமத்தில் வீட்டின் அருகில் இருந்த அத்தனை பேரும் அதை பற்றி கேட்பதும்,பேசுவதும்

அவர் கவனித்து இருந்தார்.

பக்கத்தில் உள்ள தொடக்க பள்ளிக்கு சென்று ஐந்தாம் வகுப்பு வரை படித்து விட்டு,கிராமத்தில் விவசாய நிலத்தில் பாடுபட்டு,குடும்ப தேவைக்கான உணவு தானியங்களை பெற்றோருடன் சேர்ந்து விளைவித்து கொண்டு இருந்தது நினைவில் இருந்தது.

அவருக்கு மேலே படிக்க ஆசை இருந்தது,ஆனால் பட்டணம் சென்று படிக்க அவருக்கு சரியான வழி காட்டுதல் இல்லை.வாழ்க்கை தரம் உயர நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்பது மட்டும் அவருக்கு தெரியும்.அவ்வப்போது நடக்கும்

போராட்டங்களில் கலந்து கொள்வார்.


ஆனாலும் விவசாயத்தில் முழு மூச்சுடன் ஈடுபட்டு,வந்தார்.அந்த நேரத்தில்,பக்கத்து நகரத்திற்கு மகாத்மா காந்தி பொது கூட்டத்தில் கலந்து கொள்ள வந்து இருந்தார்.

அதில் கலந்து கொண்டவர்கள் பலர்,தங்களுடைய சொத்துக்களை சுதந்திர போராட்டத்திற்கு தானமாக கொடுத்தார்கள்.அப்போது குப்புசாமி

யின் அப்பாவும் தன்னுடைய விவசாய நிலத்தை அதற்கு தானமாக கொடுத்து விட்டார்.

அதற்கு பிறகு,குப்புசாமி நெசவு தொழில் பழகி

கதர் ஆடைகளை நெய்து கொடுத்து கொண்டு இருந்தார்.இருபது வருடம் முன்பு வரை அவர் அந்த தொழில் தான் செய்து கொண்டு இருந்தார்.


அவருக்கு ஒரே மகன்.குப்புசாமி செய்து வந்த தொழிலை விரிவு படுத்தி இப்போது அதை பெரிய ஜவுளி கடையாக நடத்தி வருகிறார்.

ஆனாலும் குப்புசாமி இன்று வரை கதர் ஆடை அணிந்து,காந்தி குல்லா அணிந்து,ஒவ்வொரு சுதந்திர விழா விலும் கலந்து கொண்டு வருகிறார்.

இன்னும் பத்து ஆண்டுகள் வாழ அவருக்கு ஆசை.

வளமுடன் வாழ அவரை வாழ்த்துவோம்.

முற்றும்.



Rate this content
Log in

Similar tamil story from Classics