Vadamalaisamy Lokanathan

Abstract Tragedy

4  

Vadamalaisamy Lokanathan

Abstract Tragedy

கைகள் காதல் செய்யுமா

கைகள் காதல் செய்யுமா

3 mins
420


கைகள் காதல் செய்யுமா


வாணிக்கு அடிதடி சண்டை என்றால் மிகவும் பிடிக்கும்.அதுவும் ஆண்களுடன்.அவள் கல்லூரியில் படிக்கும் இளம் வயது வாலிபன் என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும்.கல்லூரிக்கு வருவதே BMW பைக்கில் தான். பசங்களுக்கு போட்டியாக வேகமாக ஓட்டுவது,தூரமாக ஒட்டி கொண்டு போவது,தேவை படும் நேரத்தில் கையில் கோப்பை,வாயில் சிகரெட்.

ஆனால் கெட்டவள் கிடையாது.அவளுடைய தைரியம்,தன்னம்பிக்கையை பறை சாற்றும் நடவடிக்கை.

I love you என்று சொல்லி வரும் காதல் மன்னர்களிடம் அவள் சொல்வது ஒன்றே தான்.கல்யாணத்திற்கு பிறகு அடிக்கடி என் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து வெளியூர் செல்வேன்,ஒன்றாக தங்குவேன்,உனக்கு சம்மதமா சொல்,இருவரும் காதலிப்போம்,கல்யாணம் செய்து கொள்வோம்.உம் சொன்ன கெட்டி மேளம்,என்று சவால் விடுவாள்,ஒரு பையன் அருகில் வர மாட்டான்.

ஆனால் நிஜத்தில் அம்மா சொல்லை மீறி ஒரு அடியும் கூட எடுத்து வைக்க மாட்டாள்.

குறிப்பாக பெண்களை எந்த ஆணும் அடிமையாக எண்ணி விட கூடாது என்பதில் குறியாக இருப்பாள்.

மற்றபடி அவள் ஒரு பத்தரை மாற்று தங்கம்.


அவளுடைய அப்பா ஒரு பெரிய real estate முதலாளி.எந்நேரமும் அவருக்கு பணத்தின் மீது தான் ஞாபகம்.அதே நேரத்தில் அந்த பணத்தை கையாள தெரிய வேண்டும் அல்லவா.அதற்கேற்ப அவருடைய மகளை வளர்த்தி இருந்தார்.ஒரே பெண்.கெட்டிக்காரி

நல்லவருக்கு நல்லவர்.மீதியை சொல்ல வேண்டாம்.


அப்பாவின் வியாபாரத்தில் மூளையாக செயல் படுவது இந்த ஒரே மகள் வாணி தான்.அவளுக்கு ஏற்ற வரனை தேடி கொண்டு இருக்கிறார்,ஆனால் இன்னும் அமையவில்லை.அவளுடைய கெத்துக்கு பையன் அமைவது சற்று சிரமமாக இருக்கிறது.எங்கெல்லாம் தேடி பார்த்து விட்டார்.


கல்லூரியில் அவளை அவளுடைய சொத்துக்கு வேண்டி வளைத்து போட பல பணக்கார பசங்கள் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.ஆனாலும் அருகில் சென்ற பின் ஏதாவது வகையில் அவமானப்பட்டு வந்து விடுகிறார்கள்.காரணம் அவளுடைய அறிவு அவ்வளவு முதிர்ச்சி.அதுவே அவளுக்கு மறைமுகமாக ஒரு தலை கனத்தை கொடுத்து விட்டது.சொல்ல போனால் திருமணம் செய்து கொண்டாலும் குடும்பத்தில் அவள் தான் புருஷனாக இருப்பாள்.

அறிவும் பணமும் அவளுக்கு நிறைய அகந்தையை கொடுத்து விட்டது.


ஏற்றம் இருந்தால் இறக்கம் இருக்கும் அல்லவா.சில நேரங்களில் அவள் நடவடிக்கை அவளது பெற்றோருக்கு பயத்தை அளிக்கும் விதத்தில் இருக்கும்.இவளுக்கு ஏற்ற கணவன் அமைவான என்று அவர்கள் கவலை பட தொடங்கினார்கள்.


கல்லூரியில் அவளிடம் அவமான பட்டவர்களில் ஒருவன் சுரேஷ்,பெரிய அரசியல்வாதியின் ஒரே மகன்.அவனையும் அவள் கூட்டத்தில் கேலி பேசி அவமான பட வைத்து விட்டாள்.சில நேரங்களில் அது தவறு என்று அவளுக்கு புரிவது இல்லை.


சுரேஷ் வெகு நாட்களாக அவளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று திட்டம் போட்டு,அதற்கு சில அடி ஆட்களையும் தயார் செய்து வைத்தான்.ஒரு நாள் மாலை அவள் கல்லூரியில் இருந்து வீடு திரும்பி கொண்டு இருந்தாள்.எப்போதும் போல வெளிநாட்டு பைக்கில் வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது, அவளை வண்டியில் இருந்து தள்ளி விட நினைத்து,ஒரு மணல் லாரியை அவள் மீது மோத வைத்தான் சுரேஷ்.

அவள் விழுந்து அடிபடுவாள் என்று நினைத்து தான் அப்படி திட்டம் போட்டான்.அது யாருக்கும் தெரியாது.தெரியவும் முடியாது.

ஆனால் நடந்தது வேறு.அடிபட்ட வேகத்தில் ஒரு சுற்று சுற்றி தலை சக்கரத்தின் அடியில் செல்ல, தன் மீது சக்கரம் ஏறி விடும் என்று உயிரை கொடுத்து புரள,தலை தப்பித்து உயிர் பிழைத்து விட்டாள்.ஆனால் இரு கைகளும் சக்கரத்தில் பட்டு நசுங்கி இரண்டு கையும் முழங்கை வரை எடுக்கும் படி ஆகி விட்டது.

வெளிநாட்டு டாக்டர் கூட வந்து பார்த்து விட்டு ஒன்றும் செய்ய இயலாது என்று கை விரித்து விட்டனர்.இப்போது அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.கோடிகளில் பணம் இருந்தும் கூட அவளுக்கு போன கைகள் திரும்ப கிடைக்கவில்லை.

பணத்தை மட்டும் வைத்து எதையும் செய்யலாம் என்று நினைத்த அவளுக்கு இன்று அம்மா சோறு ஊட்டி விடும் நிலைக்கு வந்து விட்டது.

விலையுர்ந்த பைக், கார் எல்லாமே அவளை ஏளனமாக பார்த்தது.அலமாரி நிறைய இருந்த வகை வகையான ஆடைகள் அவளை பார்த்து எள்ளி நகையாடியது.ஆபரணங்கள் அவளை கவலையுடன் பார்த்தது.

இனி அவளிடம் இருக்கும் பணம் வெறும் காகிதங்கள் தான் என்று அவளுக்கு புரிந்தது.

அளவுக்கு மீறி கர்வம் கொண்டு விட்டோம் என்று இப்போது கவலை பட்டாள்.நண்பர்கள்,சக மாணவர்கள் உண்மையாகவே அனுதாபம் காட்டினாலும்,தன்னை கிண்டல் செய்வதாகவே எண்ணினாள்.

அந்த அளவிற்கு நொந்து போய் இருந்தாள்.

எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும்,பணத்தால் யாரும் பெரியவர் கிடையாது என்று புரிந்து கொண்டாள்.ஒரே ஒரு ஆறுதல்,இந்த நிலையும் அவளை மணம் புரிந்து கொள்வதாக விருப்பம் தெரிவித்தான்.வாணி தான் முடிவு செய்ய வேண்டும்.

முற்றும்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract