Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

கடிகாரம்

கடிகாரம்

2 mins
222



சுவற்றில் மாட்டி இருந்த கடிகாரம் ஒரே நேரத்தை காண்பித்து கொண்டு இருந்தது.

உடனே பக்கத்தில் இருந்த அண்ணாச்சி கடைக்கு சென்று ஒரு புதிய பேட்டரி வாங்கி கொண்டு வந்து மாட்டினான்.

குரு விர்க்கு அன்று விடுமுறை.கடிகாரம் மீண்டும் இயங்குவதை வியப்புடன் பார்த்து கொண்டு இருந்தான்.வினாடி முள் யாருக்கும் காத்து இருக்கவில்லை.

அது தன் வேலையை செய்து கொண்டு இருந்தது.

சும்மா வேடிக்கை பார்த்தால் அந்த முள் உயிருடன் வேலை செய்வது மட்டும் தான் தெரியும்.

இரண்டு வினாடியில் இருந்து மூன்றாவது வினாடிக்கு நகர்ந்து விட்டது.யோசிக்கும் முன்பு அது இப்போது ஆறு வினாடிகளை கடந்து விட்டது.

இந்த நான்கு வினாடிகளில் என்ன நடந்து இருக்கும்.சற்று யோசித்தான் குரு.

புதிதாக குழந்தைகள் பிறந்து இருக்கலாம்.ஆயிர கணக்கில் மக்கள் மடிந்து இருக்கலாம்.திருட்டு நடக்கலாம்,கற்பழிப்பு நடக்கலாம்,கொலை நடந்து இருக்கலாம்.விபத்து நடந்து இருக்கலாம்.

ஆயிர கணக்கான விமானங்கள் வானில் பறக்க தொடங்கி இருக்கலாம்.அதே அளவில் தரையில் இறங்கி இருக்கலாம்.சொந்ததை காண மக்கள் பதட்டத்துடன் ஓடி இருக்கலாம்.

காதல் மலர்ந்து இருக்கலாம்.காதல் பிரிந்து போகலாம்.

பட்டினியுடன் அடுத்த வேளை உணவிற்காக காத்து இருக்கலாம்.

பல நாட்டில் போர்கள் நடக்கலாம்.

கடும் குளிர் வாட்டலாம். வெள்ள பெருக்கில் உடமைகள் வீடுகள் இழந்து தவிக்கலாம்.

இது ஒரு மாதிரி மட்டுமே.எண்ணில் அடங்கா நிகழ்வுகள்.எண்ணி பார்க்க முடியாத நிகழ்வுகள் நடந்து முடிந்து இருக்கலாம்.இது அத்தனையும் முக்கியத்துவம் பெறவில்லை.காரணம் இந்த நிகழ்வுகள்,குருவின் வாழ்க்கையை இந்த நிமிடம் வரை பாதிக்கவில்லை.அதனால் அவனுக்கு கடந்த விநாடிகள் பற்றி கவலை இல்லை.

பத்து வினாடி போகும் போது என்ன நடக்கும் என்று அவனுக்கு தெரியாது.அவன் உயிருடன் இருப்பானா என்று கூட தெரியாது.

ஆனால் குரு,வரும் வினாடிகளில் சாதிக்க நிறைய உண்டு என்று எதிர்பார்ப்புடன் காத்து இருக்கிறான்.

குரு மட்டுமா,அவனை போல கோடி கணக்கானவர்கள் எதிர்பார்ப்புடன் அடுத்த வினாடி நல்லது நடக்கும் என்று காத்து இருக்கிறார்கள்.

யாரும் இன்னல் வரும் துன்பம் வரும் என்று காத்து இருப்பது இல்லை.

அடுத்த நொடியில் ஒரு நல்ல ஆண் ஒரு பெண்ணை கெடுக்கலாம்.ஒருவனின் உயிரை பறிக்கலாம்.திருடலாம்.திருடினால் இழந்தவன் என்ன பாடு படுவான் என்று யோசித்து பார்ப்பது இல்லை.

கடந்து போன விநாடிகள் நம்மை பாதிக்காத வரை அதை பற்றி கவலை இல்லை.

நடக்க போகும் அடுத்த நொடிகள் பற்றி எண்ணற்ற கவலை.ரெயிலை பிடிக்க வேண்டும்.தேர்வுக்கு செல்ல வேண்டும்.பசிக்கு சாப்பிட வேண்டும் என்று பல திட்டங்கள் மனதில்.அது அவனை பரபரப்பாக இயங்க வைக்கிறது.

குரு வியப்புடன் கடிகாரத்தை பார்த்தவன்,இதில் இவ்வளவு விசயங்கள் அடங்கி இருக்கிறதா என்று ஆச்சரிய பட்டான்.

எதுவும் ஒருவரை பாதிக்காத வரை அது ஒரு காட்சி பொருளாக தான் தென்படுகிறது.

இனி மேல் கடிகாரம் என்ன சொல்லும் என்று நினைத்து திட்டம் இட்டு நடக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான்.

கடிகாரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பயன் படுகிறது.


Rate this content
Log in

Similar tamil story from Abstract