Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

நண்பர்

நண்பர்

1 min
235



எனக்கு நண்பர் என்று சொல்ல இன்று யாரும் இல்லை.வேலை செய்த இடத்தில் கூட பணியாற்றிய நண்பர்களை தவிர.ஆனால் அவர்களால் நண்பர் ஸ்தானத்தை நிரப்ப முடியாது.

ஐம்பது வருடங்களுக்கு முன்பு படித்து பட்டம் பெற்ற பிறகு எங்கு வேலை தேடுவது என்று கூட தெரியாத நிலை.நான் பிறந்து வளர்ந்தது கிராமம்.அதை விட்டு வெளியில் சென்று சுற்றி பார்க்க பண வசதி இல்லை.

அந்த நேரத்தில் பள்ளி பருவம் முதல் நண்பர்கள் இரண்டு பேர்.அதில் ஒருவர் கோயம்புத்தூரில் படித்து கொண்டு இருந்தார்.அவர் தான் எனக்கு கோயம்புத்தூரில் வேலை வாங்கி கொடுத்தார்.அந்த உதவியை எப்போதும் மறக்க மாட்டேன்.இன்றைக்கு சொந்தமாக வீடு கார்,பணம் என்று வசதியான வாழ்க்கைக்கு காரணம் அன்று அவர் செய்த உதவி தான்.என்னை விட ஓரிரு வயது மூத்தவர்.உடல் நல குறைவால் இப்போது அவர் உயிரோடு இல்லை.இனி ஒரு நண்பர் இன்னும் இருக்கிறார்.வாய்ப்பு கிடைக்கும் போது சந்தித்து கொள்கிறோம்.

இருவரும் சுற்றி வளைத்து பார்த்தால் உறவினர்கள்.ஆனால் உறவை விட நட்பு தான் பிரதானமாக தெரிந்தது.

என்னுடைய வளர்ச்சிக்கு இருவருமே காரணம் .அது என் நெஞ்சை விட்டு என்றுமே நீங்காத நினைவு.அதுவும்

எனக்கு எந்த வசதியும் இல்லாத நேரம்.என்னுடைய சம்பளம் வீட்டிற்கு மிகவும் தேவை என்ற சூழ்நிலையில் எனக்கு என் நண்பர்கள் உதவியது நட்புக்கு ஒரு இலக்கணம்.

முற்றும்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract