Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Vadamalaisamy Lokanathan

Drama

4  

Vadamalaisamy Lokanathan

Drama

திருமணம்

திருமணம்

3 mins
296


திருமணம்


வினிதா, பயந்த சுபாவம் கொண்ட பெண்.ஒருவர் அதட்டி கேட்டால் அழுது விடுவாள்.அவளுடைய பெற்றோர் திருமணம் செய்ய வேண்டிய நேரத்தில் ஒரு அப்பாவி மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்.

வினிதா மாமியார்  மகனையும் மிரட்டி விடுவார்.மருமகளை திட்டாதா  நேரம் கிடையாது.

வினிதா தன் துன்பத்தை கணவனிடம் சொல்லி அழும் போது,அவன் நான் பிறவியில் இருந்தே பயந்தவன்.நீயாவது தைரியமாக இருக்க வேண்டும்.என்னை மாதிரி பயப்பட கூடாது.எனக்கு சிறு வயதில் இருந்தே அம்மாவை கண்டால் பயம்.

இப்போதும் என்னை அடிக்க வருகிறார்கள்,என்றான்.


வினிதா,கருவுற்ற நேரத்திலும் அவளுடைய பெற்றோரை பார்க்க போக அனுமதிக்கவில்லை.அது அவளுக்கு சங்கடமாக இருந்தது.பலமுறை கேட்டும் அனுமதி கிடைக்கவில்லை.அவளுடைய பெற்றோர்களும் அடிக்கடி வந்து வினிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை.உனக்கு என்ன கஷ்டம் இருந்தாலும் என்னிடம் சொல்லு என்று மாமியார் கூறி விட்டார்.

வினிதாவின் மாமியார் உள்ளூர தன் மகன் மிகவும் அப்பாவியாக இருக்கிறான், என்று கவலை பட்டு கொண்டு இருந்தார்.திருமணம் ஆன பிறகு வரும் மருமகள் அவனுடைய பயத்தை போக்குவாள் என்று எதிர்பார்த்தார்.

தன்னுடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் நிச்சயம் கோப பட்டு தன்னிடம் சண்டை போடுவாள் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் தான் மிஞ்சியது.வினிதாவின் பெற்றோருக்கு இனியும் ஒரு பெண் திருமண வயதில் இருக்கிறாள்.அந்த பெண்ணின் திருமணத்திற்கு பணம் சேர்த்து வருகிறார்கள்.இந்த நேரம் மூத்த பெண்ணுக்கு தலை பிரசவம் என்று சிரமத்துடன் செலவு செய்வார்கள்.

அதனால் செலவை தானே செய்து கொள்ளலாம் என்று வினிதா மாமியார் நினைத்தார்கள்.

இவர்கள் இருவரையும் திட்டி கொண்டு இருப்பதாலும்,வினிதா பெற்றோரை பார்க்க முடியாமல் இருப்பதாலும்,யாரோ ஒருவர்,மகனோ,மரு மகளோ தன்னிடம் சண்டைக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்து வினிதாவின் மாமியார்க்கு ஏமாற்றம் தான்.


இருவருமே வினிதாவின் மாமியாரை எதிர்த்து பேசவில்லை.வினிதாவின் பெற்றோர் கூட,எதுவும் எதிர்த்து பேசவில்லை.வினிதாவிர்க்கு குழந்தை பிறந்தது.பிறந்த அன்று வந்து பார்த்து விட்டு சென்ற வினிதாவின் பெற்றோர்,திரும்ப வரவில்லை.மாமியாருக்கு  பயந்து அப்பா அம்மா வரவில்லை என்று நினைத்து கொண்டு இருந்தாள்.


உண்மை நிலவரம் என்ன வென்று யார்க்கும் தெரியாது.வினிதாவின் தங்கை தான் விரும்பிய பையனை தான் திருமணம் செய்வேன்,இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியில் போய் விடுவேன் என்று பயமுறுத்தி கொண்டு இருந்தாள்.அவளை சமாதானம் செய்வதா,இல்லை பெண்ணின் பிரசவம் பார்ப்பதா என்று புரியாமல் நின்ற வினிதா பெற்றோர்கள்,வினிதா மாமியாரை கேட்க,பிரசவம் நான் நின்று பார்த்து கொள்கிறேன்.நீங்கள் உங்கள் பிரச்சனையை பார்த்து விட்டு வாருங்கள் என்று சொல்லி விட்டார்.

அது வினிதாவிற்கு தெரியாது.மாமியாருக்கு பயந்து பெற்றோர்கள் வரவில்லை என்று நினைத்து கொண்டு,அவளுக்கே பொறுக்காமல்,மாமியாருடன்

சண்டைக்கு போய் விட்டாள்.அதை பார்த்து மகனும் தைரியமாக,அம்மாவிடம் சண்டைக்கு போனான்.


அதை கேட்ட மாமியார்,நான் செய்தது தப்பு தான்.நான் தான் அவர்களை வர விடாமல் தடுத்து விட்டேன்.நாளைக்கே வர சொல்கிறேன் என்று கூறி விட்டார்.அப்படி கூறியும் ஒரு வாரம் வரை,வினிதா பெற்றோர் வரவில்லை.மீண்டும் தைரியத்தை வரவழைத்து,மாமியாருடன் வினிதா சண்டை போட்டாள்.

உன் முன்னாடியே உன் அப்பாவிடம் சொல்கிறேன்,அவர் வராமல் இருப்பதற்கு நான் என்ன செய்ய முடியும் என்று வினிதா இருக்கும் போது மாமியார் வினிதா அப்பாவிற்கு போன் செய்து சொன்னார்,அதற்கு பிறகும் இரண்டு நாள் கழித்து அப்பா மட்டும் வந்தார்.அவர் வந்ததும் அவரை வைத்து கொண்டே,வினிதா மாமியாரிடம் சண்டைக்கு போனாள்.

வினிதா அப்பா உடனே,ஒரே சத்தத்தில் வினிதா வை அடக்கினார்.

உனக்கு என்ன தெரியும்.என்று நடந்த சம்பவம் முழுவதும் சொல்லி,உடனடியாக திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கிறேன்.உன் தங்கை வயிற்றில் இப்போது குழந்தை,தாமதித்தால் மானம் போய் விடும்.இதையெல்லாம் அறிந்த உன் மாமியாரின் பக்க பலம் தான் என்னை பொறுமை இழக்காமல் வைத்துள்ளது.இந்நேரம் அவமானத்தால் இறந்து போய் இருப்போம்.அவர் கொடுத்த தைரியம்,பணம் இரண்டும் தான் என் மானத்தை காப்பாற்றி கொண்டு இருக்கிறது. 

ஒரு மாதம் தாமதித்தால்,அவளுக்கு வளைகாப்பு தான் செய்ய வேண்டும்.இப்போது சொல்,நான் என்ன செய்ய வேண்டும் என்று.

அப்போது தான் புரிந்தது வினிதாவின் மாமியார் எவ்வளவு உதவி இருக்கிறார் என்று.அவர் நினைத்து இருந்தால்,மருமகளை அவமான படுத்தி அவளுடைய பெற்றோர் வீட்டிற்க்கு அனுப்பி இருக்க முடியும்.

வினிதா தன்னை தானே நொந்து கொண்டாள்.இப்போது தான் தனக்கு வீரம் வந்து மாமியாருடன் சண்டை போட வேண்டுமா.அவருடைய குணம் தெரியாமல் திட்டி விட்டேன் என்று கணவனிடம் சொல்லி அழுதாள்.

அப்போது அதை கேட்டு கொண்டு உள்ளே வந்த மாமியார்,எனக்கு எந்த வருத்தமும் இல்லை.இப்பாவாவது சண்டை போட உங்கள் இருவருக்கும் தைரியம் வந்ததே.அதுவே எனக்கு மகிழ்ச்சி என்றார்.

போங்க அத்தை,இந்த கோபம் வராமல் இருந்து இருக்கலாம்.வெளியில் காட்ட வேண்டிய தைரியத்தை உள்ளே காண்பித்து விட்டோம்.இனி

பாருங்க நாங்க எப்படி இருக்க போகிறோம் என்று.

எதுக்கு அத்தை அந்த கெடு கெட்டவள் திருமணத்தை நீங்க செலவு செய்து ஏன் நடத்த வேண்டும் என்று கேட்டாள்.

வினிதா,ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்து விட்டால்,அந்த குடும்பமும் என் குடும்பம் தான்.உன் தங்கையும் எனக்கு ஒரு மகள் போல தான்.இதுவே என் மகளாக இருந்து இருந்தாலும் இந்த முடிவை தான் எடுத்து இருப்பேன்.குடும்ப கௌரவம் முக்கியம்.அது நீ ஆனாலும் சரி நானாலும் சரி.இரு குடும்பத்தையும் பிரித்து பார்க்க கூடாது.என்னை நம்பி உன்னை என்னிடம் ஒப்படைத்து உள்ளார்கள்.உன்னை தைரியமாக வளர்த்த வேண்டும் என்று நினைத்து உன்னை திட்டி கொண்டே இருந்தேன்.அதை பார்த்து என் பையன் கோப படுவான் என்று எதிர்பார்த்தேன்.

இதில் நீங்க இருவரும் தான் ஜெயித்து விட்டீர்கள்.


யாரையும் பார்த்து பயப்பட வேண்டாம்.நியாயம் இருந்தால் குரல் எழுப்ப வேண்டும்.அப்பா அம்மா மரியாதை முக்கியம்,அதை காப்பாற்ற தான் இந்த திருமண ஏற்பாடு.

முற்றும்


Rate this content
Log in

Similar tamil story from Drama