Vadamalaisamy Lokanathan

Abstract

5  

Vadamalaisamy Lokanathan

Abstract

சிவப்பு

சிவப்பு

1 min
411


மக்கள் பலமுறை புகார் அளித்தும் அந்த பள்ளிக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை.

குறிப்பாக அந்த பள்ளியில் பெண்கள் தான் அதிகம் படித்து வந்தனர்.

பள்ளி முடியும் நேரத்தில் டாஸ்மாக் கடைக்கு அருகில் தான் பேருந்து நிறுத்தமும் இருந்தது.குடிகாரர்கள் மத்தியில் தான் மாணவிகள் பேருந்தில் ஏறி பயணம் செய்து கொண்டு இருந்தார்கள்.

போதாக்குறைக்கு,பெண்களும் மது அருந்தி விட்டு,மாணவிகளுடன் தகராறு செய்து கொண்டு பேருந்தில் ஏறிக்கொண்டு இருந்தனர்.

பெண்களுக்கு இலவசம் என்பதால் குறிப்பிட்ட பேருந்து வரும் வரை மாணவிகள் காத்து இருக்க வேண்டும்.குடித்து விட்டு தள்ளாடிக் வரும் ஆண்களை பார்த்து மாணவிகள் பயந்து கொண்டு நின்றனர்.

மாநகராட்சி நிர்வாகம் அந்த கடையை மாற்ற எந்த ஏற்பாடும் செய்யவில்லை.அரசியல் பிரமுகர் பார் அங்கு நடத்தி வந்ததால் நிர்வாகம் எந்த நடவடிக்கையும்

எடுக்கவில்லை.

மாணவிகள் கூட்டமாக காத்து இருந்த நேரம் சில வாலிபர்கள் குடித்து விட்டு வந்து ரகளை செய்து கொண்டு இருந்தார்கள்.

அப்போது அங்கு வந்த ஒரு இநோவா காரில் இருந்து ஒரு பெண் இறங்கினார்.

அங்கு நடக்கும் கலாட்டாவை

பார்க்க தன்னிடம் இருந்த கைபேசியில் யாரையோ அழைக்க

உடனே ஒரு போலீஸ் ஜீப் வந்து கலாட்டா செய்த ஆண்களை பிடித்து கொண்டு சென்றனர்.அந்த பெண் புதிதாக பொறுப்பு எடுத்து இருக்கும் காவல் அதிகாரி.

மீண்டும் அவர் கைபேசியில் மாவட்ட நிர்வாகியை அழைத்து சொல்ல,அடுத்த நாள் அந்த டாஸ்மாக் கடை அங்கு இருந்து வேறு இடத்திற்கு மாற்றி விட

மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract