Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

குளிர்காலம்

குளிர்காலம்

1 min
289


முத்துவுக்கு ஒரே கவலை,இந்த குளிர்காலம் வருவதற்கு முன்பு அம்மாவை ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அவனுடைய மனைவி போன குளிர்காலத்தில் இறந்து போய் விட்டாள் .தன்னுடைய ஒரே மகனை வளர்க்க வேண்டி அம்மா ஊரில் இருந்து வந்து ஒரு வருடம் ஆகிறது. குளிர்காலம் தொடங்கும் முன்பு ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.அம்மாவால் இந்த குளிரை தாங்க முடியாது.ஆஸ்த்மா தொல்லை வேறு.

மனைவிக்கு,தன்னுடைய மகன் பிறந்தது முதல் இருதயத்தில் கோளாறு.அவனுக்கு ஐந்து வயது ஆகும் வரை தாக்கு பிடித்து இருந்தாள்.ஆறாவது பிறந்த நாளை கொண்டாட எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டு இருக்கும் போது மாரடைப்பு வந்து,மருத்துவ மனை செல்லும் போது உயிரிழந்து விட்டாள்.

முத்துவுக்கு வியாபாரம் பெரிய அளவில் நடந்து கொண்டு இருந்தது.அதனால் அவனால் மகனை நேரடியாக கவனிக்க முடியவில்லை.மாமனார் மாமியார் இருவரும் நோயாளிகள்,அவர்களாலும் வந்து பேரனை கவனிக்க முடியவில்லை.

இருந்த ஒரே ஒரு ஆள் முத்துவின் அம்மா.

முத்து டெல்லிக்கு வந்து பத்து வருடங்கள் ஆகி விட்டது.ஆரம்பத்தில் உறவினர் ஒருவர் பங்கு தரராக இருந்தார்.அவரும் பங்கை பிரித்துக்கொண்டு செல்ல முத்து தான் வியாபாரத்தை கவனித்து,பெரிய அளவிற்கு கொண்டு வந்து இருக்கிறான்.அவனை நம்பி ஐம்பது குடும்பம் பிழைத்து க்கொண்டு இருக்கிறது.

அதனால் வியாபாரத்தை விட்டு வர முடியாது.

மகனோ இன்னும் அம்மா நினைவில் இருந்தான்.

பாட்டி வந்து கதை சொல்லி,ஓரளவிற்கு அம்மாவை மறக்க தொடங்கி இருந்தான்.

அதற்குள் குளிர்காலம் தொடங்கும் நேரம் வந்து விட்டது.மகனை அம்மாவுடன் அனுப்பி ஊரில் படிக்க வைக்கும் அளவிற்கு அவனும் முதிர்ச்சி பெறவில்லை.

ஹாஸ்டலில் விட்டு படிக்க வைக்கவும் இப்போது சரியான தருணம் அல்ல,அவனுக்கு இருந்த ஒரே வழி,வியாபாரத்தை வேறு யாருக்காவது பிரித்து கொடுப்பது தான்.

இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்த வியாபாரத்தை விடவும் மனமில்லை.இருந்தாலும் மகனுடைய நலனுக்காக,வியாபாரத்தை விட முடிவு செய்தான்.


ரொம்ப காலம் அவனுடைய வியாபாரத்தை வடன்க நிறைய பேர் போட்டி போட்டு கொண்டு இருந்தனர்.

அதனால் அதை விற்பனை செய்வது எளிதாக இருந்தது.

குளிர்காலம் தொடங்க பத்து நாட்கள் இருக்கும் போது வியாபாரத்தை விலை பேசி விற்றுவிட்டு,

அமமாவையும்,மகனையும் அழைத்து கொண்டு சொந்த ஊர் திரும்பினான்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract