Vadamalaisamy Lokanathan

Others

4  

Vadamalaisamy Lokanathan

Others

பிறந்த நாள்

பிறந்த நாள்

1 min
337


விக்கி ,இன்றைக்கு உன் பிறந்த நாள் தெரியுமா என்று ஆவலுடன் தன்னுடைய செல்ல நாய் குட்டியை பார்த்து கேட்டு கொண்டு இருந்தாள்

நீல் எனும் நிலா.

அந்த நாய் எப்போது பிறந்தது என்று யாருக்கும் தெரியாது.ஆனால் அந்த நாய் இவளிடம் வந்து இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி ஆகிறது.

அதை கொண்டாட தான் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கேக்,வண்ண அலங்காரங்கள்,

விருந்து சாப்பிட ஒரு பிரபல உணவு விடுதியில் இருந்து உணவுகள்.


நிறைய நண்பர்கள் உறவினர்களை அழைத்து இருந்தாள்.பரிசுகளை தவிர்க்கவும் என்று தனிப்பட்ட வேண்டுகோள் வேறு அனுப்பி இருந்தாள்.


விழாவிற்கு வரும் வரை யாருக்கும் தெரியாது அவளுடைய நாய்க்கு பிறந்த நாள் என்று.வந்த பிறகு தான் birthday baby எங்கே என்று 

கேட்க, தன் நாய்யை காண்பித்தாள்.

வந்த நண்பர்கள் அவளுடைய குழந்தைக்கு பிறந்தநாள் என்று எண்ணி வந்தவர்களுக்கு ஏமாற்றம் தான்.



Rate this content
Log in