Vadamalaisamy Lokanathan

Abstract

5  

Vadamalaisamy Lokanathan

Abstract

பள்ளி வாழ்க்கை

பள்ளி வாழ்க்கை

2 mins
435


பள்ளி வாழ்க்கை.


சிவகுமார் இப்போது ஒரு பெரிய தொழில் அதிபர்.

ஆனால் அவர் ஒன்றும் பெரிதாக படிக்கவில்லை.

பத்தாவது கூட தேறவில்லை.

பள்ளியில் படிக்கும் போது,உருப்படமாட்டாய் என்று ஆசிரியர்களால் திட்டு வாங்கியது இன்னும் அவர் நினைவில் இருக்கிறது.

சிவகுமார் வீட்டில் அப்படியொன்றும் பெரிய வசதி கிடையாது.

அவனுடைய அப்பா,ஒரு சைக்கிள் கடை வைத்து,அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு இருந்தார்.சிவகுமார் ஒரே பையன்.அவனுடைய அம்மா சிறு வயதில் இறந்து விட்டார்கள்.பாட்டியின் அதாவது அவனுடைய அப்பாவின் தாயார் தான் அவனை வளர்த்தி ஆளாக்கினார்.

அம்மாவின் கண்டிப்பு இல்லாத காரணம்,பாட்டியின் செல்லம்,எல்லாம் சேர்ந்து அவனை படிப்பில் கோட்டை விட செய்தது.

படிப்பு ஏறாத காரணத்தால்,அப்பாவின் நச்சு தாங்காமல்,சிறிது நேரம் சைக்கிள் கடையில் அமர்ந்து அப்பா சொல்லிக்கொடுக்க,சைக்கிளை ரிப்பேர் செய்து வந்தான்.

அவனுக்கு இருபது வ்யதாகும் போது,அப்பாவும் இறந்து போக,இவனுக்கு கடையை என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறும் போது,ஒரு இரும்பு கடையை சேர்ந்த ஒருவர்,சைக்கிள் கடையில்  இருக்கும் பழைய சைக்கிள்கள்,உடைந்து போன இரும்பு போன்றவற்றை ஒரு விலை பேசி வாங்கி

கொண்டார்.

அதுவே ஒரு பெரிய தொகைக்கு விலை போயிற்று.ஆனால் இரும்புக்கடை மாணிக்கம்

அவ்வளவு பெரிய தொகையை அவன் கையில் கொடுக்க மனம் இல்லாமல்,அது என்னிடமே இருக்கட்டும்,உனக்கு வட்டி போட்டு தருகிறேன் என்றார்.சிவகுமார் விருப்ப பட்டால் தன்னுடைய இரும்பு கடையில் வேலை செய்யலாம்,அதற்கும் சம்பளம் தருகிறேன் என்று கூற,அவனுக்கு அப்போதைக்கு ஒன்றும் புரியாமல் சம்மதித்து விட்டான்.

அது மட்டுமல்ல,கடையில் இருந்து கொண்டு,மாணிக்கத்தை மகள் மல்லிகாவை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.அந்த நட்பு காதலாக மாற,மல்லிகா அவனிடம் நீ தொழில் செய்து சம்பாதித்தால் மட்டுமே அவளை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பார் என்று கூற,அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

ஒழுங்காக படித்து இருந்தால்,நல்ல வேலைக்கு போய் இருக்க முடியும்.இப்போது வருந்தி என்ன பயன் என்று யோசித்தான்.சேராத நட்புடன் சேர்ந்து,வகுப்பிற்கு செல்லாமல் ஊர் சுற்றியது,சினிமா பார்க்க,அப்பா சட்டை பையில் இருந்து பணத்தை எடுத்து கொண்டு போனது.,

ஆசிரியர் என்று கூட பார்க்காமல் அவருடைய சட்டையை பிடித்து அடித்தது,என்று எல்லாமே நினைவுக்கு வந்தது.வருந்தி என்ன பயன்.


என்ன செய்வதென்று தெரியாமல்,மாணிக்கத்தின் யோசனையை நாடினான்.அவரும் பழைய இரும்பு வாங்கி வந்தால் அதில் ஒரு சிறு பங்கு தருவதாக கூற,இவனும் ஒரு சைக்கிளில் ஊர் ஊராகச் சென்று பழைய இரும்பு வாங்கி வர,அவனுக்கு சம்பளம் போக ஒரு வருமானம் வரத்தொடங்கியது.

இப்படி சில மாதங்கள் செல்ல,மாணிக்கம் ஒரு நாள் மாரடைப்பால் மயங்கி விழ கடையை பார்க்கும் பொறுப்பு சிவகுமார் தலைக்கு வந்தது.கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல்,கடுமையாக உழைக்க,வியாபாரம் பல மடங்கு வளர்ந்தது.

மாணிக்கத்தின் உடல்நிலை மோசமாக,சிவகுமார் விட ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்க மாட்டார் என்று நினைத்து தன் ஒரே மகளை அவனுக்கு கட்டி வைத்தார்.

அவனுக்கும் இரட்டிப்பு. மகிழ்ச்சி.வியாபாரம்,விரும்பிய பெண் இரண்டும் நிறைவேற,இன்னும் கடுமையாக உழைக்க,மேலும் இரண்டு ஊர்களில் கிளைகள் திறந்து பெரிய தொழில் அதிபதி ஆகி விட்டான்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract