Vadamalaisamy Lokanathan

Abstract

5  

Vadamalaisamy Lokanathan

Abstract

தீபாவளி பட்டாசு

தீபாவளி பட்டாசு

3 mins
471


தீபாவளி பட்டாசு


பூங்கா நகர் என்று ஒரு அழகிய மலை அடிவார கிராமம்.அந்த ஊரில் சுமார் நூறு குடும்பங்கள் வாழ்ந்து வந்தது.

எல்லோருமே விவசாயிகள்,சிலர் பயிர் விளைவித்து வந்தனர்.சிலர் ஆடு மாடு வளர்த்தி வந்தனர்.சிலர் பூந்தோட்டம் அமைத்து,பூக்கும் பூக்களை பக்கத்து சந்தையில் சென்று விற்று வந்தனர்.

மலை அடிவாரம் என்பதால் ஒரு சிறு அருவி  எல்லா காலத்திலும் ஓடி கொண்டு இருக்கும்.அந்த கிராமத்தின் தண்ணீர் தேவையை அந்த சிறு அருவி தான் தீர்த்து வைத்து கொண்டு இருந்தது.

ஆடுமாடு வைத்து இருப்பவர்கள் மேய்ச்சலுக்கு மலை உச்சி வரை சென்று வருவார்கள்.உயிர் கொல்லி மிருகங்கள் இல்லாவிட்டாலும்,தேவையான மிருகங்கள் அந்த காட்டிற்குள் வசித்து வந்தது.

இருந்தாலும் அந்த மிருகங்களால்

அந்த ஊர் மக்களுக்கு எந்த தீங்கும் நடந்தது இல்லை.அதே போல அந்த மிருகங்கள் இயற்கையோடு

ஒட்டி வாழ,கிராம மக்களும் எல்லா முயற்சிகளையும் எடுத்து வந்தனர்.

அதில் ஒரு முயற்சியாக,எந்த விழா நடந்தாலும்,வெடி, வாண வேடிக்கை நடத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.


கோவில் விழா நடந்தாலும் தாரை தப்பட்டை ஓசை அங்கு இருக்காது.அதை கேட்டு காட்டில் உள்ள பறவைகள்,மிருகங்கள் பயந்து போகும்,அது மாதிரி ஒரு சூழ்நிலையை உருவாக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.


மலையில் உருவாகி ஒடும் அந்த அருவி அந்த ஊரை சுற்றி ஓடியதால்

அது அந்த ஊருக்கு,ஒரு அரண் போல அமைந்து,சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் தான் பக்கத்து கிராமம் அமைந்து இருந்தது.

அதனால் பக்கத்து கிராமங்களில் நடக்கும் வாண வேடிக்கை சத்தம் கூட இந்த கிராமத்திற்கு கேட்காது.


பூங்கா நகரில் எல்லா வசதிகளும் இருந்தது.உயர்நிலை பள்ளி வரை இயங்கி கொண்டு தான் இருந்தது.

பள்ளி படிப்பு முடிந்தது,தகுதியான வரன் வர,பக்கத்து ஊரில் வேலைக்கு போகும் நல்ல மாப்பிள்ளை வர,சுமதியை திருமணம் செய்து கொடுத்தார்கள்.

திருமணத்தின் போது அவளுக்கு வயது இருபத்தி ஒன்று.


சுமதி கணவனுடன் சென்று ஒரு வருடம் ஆகப்போகிறது.வருகிற தீபாவளி அவளுக்கு தலை தீபாவளி.

கணவனுக்கு வேலை பக்கத்து நகரத்தில் இருந்ததால்,அவள் கணவனுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தாள்.

அமைதியான கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவளுக்கு,நகரத்தின் பரபரப்பும் இரைச்சலும் அவளுக்கு எரிச்சலை கொடுத்தது.தீபாவளிக்கு கணவனுக்கு இரண்டு நாள் தான் விடுமுறை,முதல் நாள் கிளம்பி பூங்கா நகர் செல்ல திட்டம்.

ஆனால் தீபாவளி வருவதற்கு முன்பே,இரவானால் பட்டாசு வெடிப்பது, வாண வேடிக்கை என்று பரபரப்பாக இருந்தது.

காலையில் குளிக்க சென்ற போது,குளியல் அறை ஜன்னலில் ஒரு குருவி அமர்ந்து இருந்தது.அன்றைக்கு காலை முதலே பட்டாசு வெடிக்கும் சத்தம் காதை பிளந்து கொண்டு இருந்தது.அவளால் கூட அதை தாங்கி கொள்ள முடியவில்லை.எப்பாடா பூங்கா நகரம் செல்வோம் என்று காத்து இருந்தாள்.

அப்போது பக்கத்தில் பட்டாசு படபடவென்று வெடிக்க அந்த குருவியும் அமைதி இல்லாமல் குளியல் அறைக்குள் படபடத்து அங்குமிங்குமாக பறந்து கொண்டு இருந்தது.

அவளால் உள்ளே சென்று குளிக்க முடியவில்லை. துரத்தினாலும் அந்த குருவி வெளியில் செல்வதாக இல்லை.அது மிகவும் பயந்து போய் இருந்தது.


பட்டாசு சத்தமும் நிற்பதாக தெரியவில்லை.பாவம் தீபாவளி முடிய இன்னும் மூன்று நாட்கள் உள்ளன.அதுவரை இருந்த சத்தத்தை எப்படி தாங்கி கொள்ளும்.இதை பதைபதைப்பு யாருக்கு புரியும்.

அவள் பூங்கா நகரில் இருக்கும் போது ஏன் நம்ம ஊரில் மட்டும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை போடுகிறார்கள் என்று ஆதங்க பட்டு கொள்வாள்.

ஆனால் இப்போது அந்த குருவி குளியல் அறைக்குள் படும் பாட்டை பார்த்த பிறகு,பூங்கா நகர் மக்கள் சரியான முடிவு தான் எடுத்துள்ளார்கள் என்று புரிந்து கொண்டாள்.

தனக்கே இந்த சத்தம் கர்ண கொடூரமாக ஒலிக்கும் போது,பாவம் இந்த சின்னக்குருவி என்ன ப்பாடுபடும்.


இந்த ஒலி மாசு தான் நகரத்தில் பறவைகள் தங்குவதை அடியோடு அழித்து விட்டதோ என்று சந்தேக பட்டாள்.அவள் சந்தேகம் நியாயமானது தான்.பட்டாசு தயாரிப்பு ஒரு சாராருக்கு வாழ்வாதாரமாக இருக்கலாம்.

ஆனால் அது வெடிக்கும் போது,

எத்தனை பேருடைய சகஜ வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.


அரசாங்கம்  கட்டுப்பாடு கொண்டு வந்தாலும்,அது பெயரளவில் தான் இருக்கிறது. காற்று மாசு, ஒலி மாசு,ஆரோக்கியம்,விபத்து என்று தீமைகள் அதிகம் இருப்பது தெரிந்து கூட பட்டாசு வெடிக்கும் செயலில் தீவிரம் காட்டும் மக்களை எப்படி சொல்லி திருத்துவது.

சின்ன குருவி படும் பாடு யாருக்கு தெரியும்.கணவன் வந்ததும்,குருவி பட்ட பாட்டை சொல்லி வருத்தப்பட,


அவனுக்கு அது சாதரணமாக தெரிய,அவள் அழ ஆரம்பித்தாள்.அப்போது தான் அவனுக்கு அவளுடைய மன கஷ்டம்

புரிய,அவளை தேற்றி,நம்முடைய வாழ்க்கையில் பட்டாசு நிச்சயம் வெடிக்க மாட்டோம்.இயற்கை சூழலை நிச்சயம் போற்றி காப்போம்.

முடிந்த வரை மக்களுக்கு

 எடுத்துரைப்போம், என்று சொல்ல அவளுடைய அழுகை மெல்ல நின்றது.



Rate this content
Log in

Similar tamil story from Abstract