Vadamalaisamy Lokanathan

Abstract

5  

Vadamalaisamy Lokanathan

Abstract

திரை கதை மீண்டும் உருவாக்கம்

திரை கதை மீண்டும் உருவாக்கம்

3 mins
446


இயக்குனர் பாரதி மனதில் வெகு நாளாக அந்த ஆசை.நாற்பது வருடங்களுக்கு முன்பு வெளி வந்த

கண்கள் திரைப்படத்தை மீண்டும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்க வேண்டும் என்பது தான் அவனுடைய நீண்ட நாளைய ஆசை.

ஆனால் தயாரிக்க தகுந்த பொருள் வசதி உள்ள தயாரிப்பாளர் தான் இன்னும் கிடைக்கவில்லை.அதை நெருங்கிய நண்பர்களிடம் சொல்ல

அவர்களும் அதிக செலவில்லாமல் அறிமுக நடிகர்களை வைத்து திரைப்படத்தை தயாரிக்கலாம் என்று கூறினார்கள்.

பாரதி கதாநாயகன் வேடத்தில் நடிப்பது என்று முடிவு செய்ய்பட்டது.

கதாநாயகி ஆக நடிக்க அறிமுக நடிகை சரியாக வர மாட்டார் என்பதால்,ஒரு பிரபல நடிகையிடம் கேட்க,அவர் விருப்பம் தெரிவித்தாலும்,பாரதி கூட நடிக்க முடியாது என்று கூறி விட்டார்.

ஆனால் அந்த பாத்திரத்தை அவரால் மட்டுமே நடிக்க முடியும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.ஆனால் அந்த நடிகை,தனக்கு விருப்பமான நடிகரை நடிக்க வைக்க விரும்பினார்.ஆனால் அவரது உடல் வாகு மெலிந்த தோற்றத்தில் ஒரு ஏழையாக நடிக்க சரிபட்டு வராது.அதற்கு வேண்டி,கதையின் போக்கை மாற்றினால்,கதையின்

உயிரோட்டம் சிதைந்து விடும்.

என்ன செய்வது என்று பாரதிக்கு புரியவில்லை.

அவனுடைய வருத்தத்தை புரிந்து கொண்ட அவனது மனைவி

அந்த வேடத்தில் தான் நடிக்க தயாராக இருக்கிறேன்.என்னால் சிறப்பாக நடித்து தர முடியும்,நிச்சயம்,படம் வெற்றியை 

பெற்று தரும் என்று தைரியம் கொடுத்தாலும்,நண்பர்களுக்கு அதில் உடன் பாடு இல்லை.

அந்த திட்டத்தில் இருந்து விலகி கொள்வதாக கூறி விட்டார்கள்.

பாரதி மிகவும் மனம் நொந்து போனான்.

சில மாதங்கள் சென்றன,சில் காலம் எந்த தயாரிப்பிலும் ஈடுபடாதா கோபாலன் என்ற தயாரிப்பாளர்,மீண்டும் ஒரு நல்ல படத்தை தயாரிக்க நினைத்து கொண்டு இருக்கும் போது,ஒரு நண்பர்,இயக்குனர் பாரதியை அவரிடம் அழைத்து சென்று அறிமுக படுத்தினார்.

அவனிடம் கதையை கேட்ட கோபாலன்,தைரியமாக படத்திற்கு பூசை போட சொன்னார்.

படம் தயாரித்து,வெளியிட,பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது.வசூல் கோடிக்கணக்கில்.இயக்குநர் பாரதியை பாராட்டாத திரை உலக பிரமுகர் யாரும் இல்லை.

அதன் வெற்றிக்கு பிறகு,அதன் கதாநாயகி ஆக நடித்த,பாரதியின் மனைவி,கண்ணகிக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது.எதையும் ஏற்கும் மனநிலையில் அவள் இல்லை.பாரதி அவளை பார்த்து 

ஏன் வாய்ப்புகளை ஏற்று கொள்ள மறுக்கிறாய்,புகழ் உச்சிக்கு போய் விடுவாய் என்று அவளை,உற்சாக படுத்த,அவள் முகம் வாட்டமாக தான் இருந்தது.

தன் கணவனிடம் இப்போது உங்களுக்கு திருப்தி தானே,உங்கள் ஆசை நிறைவேறி விட்டது தானே,மகிழ்ச்சி தானே, என்று அவனை கட்டி பிடித்து கொள்ள,அவன் அடைந்த 

மகிழ்ச்சிக்கு அளவே இல்லை


கண்ணகி அவனிடம் நாளைக்கு கோபால் சாரை பார்த்து நன்றி சொல்லி விட்டு வரலாம்,உங்களுக்கு வேறு வேலை ஒன்றும் இல்லை தானே என்று கேட்க,இல்லைம்மா நாளைக்கு

புதிய படம் ஒப்பு கொள்ள பிரபல நிறுவனம் வர சொல்லி இருக்காங்க,ok, நீ நேரா அவர் வீட்டிற்க்கு போய் விடு நானும் அங்கு வந்து சேர்ந்து விடுகிறேன்

என்று கூற அவளும் சரி என்று சொல்லி விட்டாள்.

மறு நாள் காலை இருவரும் தனி தனி காரில் புறப்பட்டு சென்றனர்.

பாரதி புதிய ஒப்பந்தம் கையெழுத்து போட்டு விட்டு நேராக கோபால் வீட்டிற்கு சென்றான்.

அங்கு சென்ற போது மனைவியின் கார் portico வில் நின்றது.

வாசலில் ஒரே கூட்டம்,அப்போது தான் சைரன் ஒலிக்க,போலீஸ் ஜீப் வந்தது.

அவனால் உள்ளே செல்ல முடியவில்லை.உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.

சட்டென்று அவனை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.

சிலரது பேச்சில் இருந்து,அவன் புரிந்து கொண்டது,கோபாலை யாரோ சுட்டு கொன்று விட்டார்கள்.

ஐயோ தன் மனைவி எங்கே,அவளுக்கு ஏதாவது ஆகி இருக்குமா என்று தவித்து கொண்டு இருக்க,சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் ஒன்றன் பின் ஒன்றாக வர,முதலில்,கோபாலின் சடலம் ஏற்ற பட்டது,இரண்டாவது ஒரு பெண்ணின் சடலம் ஏற்ற பட்டது.பாரதி எட்டி பார்க்க,அது கண்ணகி போல தெரிந்தது.ஆனால் அவனால் அருகில் செல்ல முடியவில்லை.

சற்று நேரத்தில் கூட்டத்தை போலீஸ் விரட்டி அடிக்க,வீட்டை சேர்ந்த சிலரும் அவனும் மட்டுமே இருக்க,போலீஸ்,அங்கு நின்ற காரை பற்றி விசாரிக்க,அது தன் மனைவியின் கார் என்று பாரதி சொல்ல,போலீஸ் அவனையும் விசாரித்து கொண்டு இருக்க,

போலீஸ் அவனை அழைத்து கொண்டு மருத்துவ மனைக்கு செல்ல,அங்கு இறந்து கிடந்த பெண் தன் மனைவி கண்ணகி என்று அடையாளம் காட்டினான்.

ஆனால் அவளை யார் கொன்றது என்று தெரியவில்லை.பிரேத பரிசோதனைக்காக இருவரது உடல்களும் அனுப்ப பட்டது.

பாரதியை அவனுடைய நண்பர்கள் பக்கத்தில் இருந்து ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தார்கள்.

முதற்கட்ட விசாரணையில்,கோபாலை சுட்டு கொன்ற அதே துப்பாக்கியால் தான் அவளுடைய மரணமும் ஏற்பட்டு இருந்தது.

கொலை எப்படி நடந்தது என்று

போலீஸ் விசாரித்து வந்தனர்.

அன்று ராத்திரி தன்னுடைய கைபேசியை ஏதேச்சையாக பார்க்க

கண்ணகி ஒரு வாய்ஸ் செய்தி அனுப்பி இருந்தாள்.

அதை திறந்து கேட்க,அவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

இவனுக்கு வேண்டி படத்தை தயாரிக்க,கோபாலை சென்று கெஞ்சி கேட்ட போது,அந்த கொடூரன்,கண்ணகி என்ற பேருக்கும் கூட மதிப்பு கொடுக்காமல் அவளுடைய கற்பை விலை பேசி,அந்த படத்தை தயாரிக்க ஒப்பு கொண்டு இருக்கிறான்.அவளும் தன் கணவன் கனவு நிறைவேற,தன் கற்பை அடமானம் வைத்து அவனுடைய கனவை நனவாக்கி கொடுத்து விட்டாள்.

விலை போன உடலை மீண்டும் அவனுடன் பங்கு போட விருப்பம் இல்லாமல், தன் உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்து,அதற்கு முன்பு,அந்த கொடூரன் உயிரையும் வாங்க நினைத்து இருந்தாள்

என்பதை அவன் இப்போது புரிந்து கொண்டான்.ஆனால் யார் யாரால் கொல்ல பட்டார்கள் என்பது மட்டும் இன்னும் புரியவில்லை.



Rate this content
Log in

Similar tamil story from Abstract