Vadamalaisamy Lokanathan

Fantasy

4.5  

Vadamalaisamy Lokanathan

Fantasy

துரத்தும் எண்ணங்கள் 4

துரத்தும் எண்ணங்கள் 4

1 min
216


எண்ணங்கள் நான்கு.


கொடுக்க முன் வந்தாலும் ஆதரிக்க ஆள் இல்லை.


அந்த நகரில் அது ஒரு பிரபல உணவு விடுதி.நல்ல கூட்டம்,நல்ல வியாபாரம்,தரமான,ருசியான உணவு.ஒரு கால கட்டத்தில்,தேவைக்கு அதிக லாபம் வர,தன்னுடைய லாபத்தில் ஒரு பங்கை,வசதி இல்லாத மக்களுக்கு உண்ண உணவு இலவசமாக கொடுக்க எண்ணினார். அதை ஒரு நாளில் செயல் படுத்தவும் செய்தார்.

இதை பார்த்த சில ஊடகங்கள்,இவரை மேற்கோள் காட்டி,இவரை ஒத்த மற்ற உணவு விடுதிகளும் இந்த வழியை பின் பற்றலாம் என்று கருத்து எழுத ஆரம்பித்தனர்.

உண்மை தான் மற்றவருக்கும் இதை செய்ய முடியும்,மனசு வேண்டுமே.

சக உரிமையாளர்கள் இவரிடம் படை எடுத்து,இந்த திட்டத்தை கை விடுமாறு கோரிக்கை வைத்தனர்.

இலவச உணவு கொடுப்பதற்கு பல இடையூறுகள் கொடுக்க,அவர் அதை சமாளிக்க நேரம் இல்லாமல்,இலவச உணவு,தினசரி கொடுப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் என்று குறைத்து கொண்டார்.


Rate this content
Log in

Similar tamil story from Fantasy