Vadamalaisamy Lokanathan

Abstract

4.5  

Vadamalaisamy Lokanathan

Abstract

வெறுப்பு

வெறுப்பு

2 mins
239


வெறுப்பு.

சுமதிக்கு அவளுடைய அம்மாவை கண்டால் அவ்வளவு வெறுப்பு.காரணம் சுமதியின் அப்பா ஒரு விபத்தில் உயிர் இழக்க,சுமதியின் அம்மா வேறு வழி தெரியாமல் சுமதியின் அப்பாவின் நண்பர் கூட சேர்ந்து வாழ தொடங்கி விட்டாள்.கணவன் இறந்து மூன்று மாதம் கூட ஆகவில்லை,இவளுக்கு புது வாழ்க்கை கேட்குதா என்று எல்லோர் முன்னிலையிலும் உறவினர் பேச தொடங்கி விட்டார்கள்.

அப்போது சுமதிக்கு வயது பத்து.இன்னும் இரண்டு வருடத்தில் வயதுக்கு வந்து விட்டால்,அவளை யார் கவனித்து கொள்வார்கள் என்ற கவலை சுமதியின் அம்மாவிற்கு.

ஆனால் சுமதியின் அப்பா ஒன்றும் சேமித்து வைக்கவும் இல்லை. வீடும் வாடகை வீடு தான்.என்ன செய்யப்போகிறோம் என்று திண்டாடிக்கொண்டு இருக்கும் போது.கணவரின் நண்பர் இவளிடம் ஒரு உதவி கேட்டார்.

தன்னுடைய வீட்டில் தங்கி தன்னுடைய வயதான தாயாரை கவனித்து கொள்ள சுமதியின் அம்மாவிடம் உதவி கேட்க,அவளும் தனக்கும், சுமதிக்கும்

பாதுகாப்பு வ்வெண்டி சரி என்று சம்மதம் சொன்னாள்.

நண்பரும் தன்னுடைய அம்மாவை வீட்டின் பின்னால் உள்ள இரண்டு அறைகள் கொண்ட ஒரு வீட்டில் படுக்க வைத்து பார்த்துக்கொண்டார்.அதில் ஒரு அறையில் சுமதியும்,அவளுடைய அம்மாவும் தாங்க ஏற்ப்பாடு செய்தார்.அவருடைய மனைவி எதிர்ப்பு தெரிவித்தாலும்,அதை அவர் சட்டை செய்யவில்லை.காரணம்,மனைவி அம்மாவை பார்க்க தயாராக இல்லை.

அவரால் அம்மாவை பார்த்துக்கொள்ள முடியும்.ஆனால் ஒரு பெண்ணை ஒரு பெண் பார்த்துக்கொள்ளும் இதம் ஒரு ஆனால் கொடுக்க முடியாது.

சுமதி பள்ளியில் அப்பாவை வர சொல்லும் நாட்கள்,நண்பர் தான் சென்று அப்பா ஸ்தானத்தில் 

கையெழுத்துப் போட்டு வந்தார்.சுமதியும் ஒரு நாள் அவனிடம் நீங்கள் ஏன் அப்பாவுக்கு பதிலாக வந்து கையெழுத்து போடுகிறீர்கள் என்று கேட்க,அவன் என்ன காரணத்திற்கு சுமதியின் அம்மாவை பணிக்கு

வைத்தான் என்பதை விவரமாக கூறினான்.மற்றவர்கள் நினைப்பது போல,அம்மாவை நான் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளவில்லை.அம்மாவிற்கும் உனக்கும் ஒரு பாதுகாப்பு வேண்டும், தங்க இடம் வேண்டும்,செலவிற்கு பணம் வேண்டும்,இதையெல்லாம் யோசித்து அம்மாவின் சம்மதம் பெற்று தான் என் வீட்டிற்க்கு கூட்டி வந்தேன்.ஒரு போதும் உன் அம்மாவை வெறுக்காதே.

உனக்கு வேண்டி அனைத்து ஏச்சு பேச்சுகளை தாங்கி கொண்டு இருக்கிறார்.

ஒரு கார்டியன் என்ற நிலையில் தான் நான் உனக்கு வந்து கையெழுத்து போட்டேன்.நான் செய்தது தவறு 

என்று எண்ணினால் எந்த நிமிடமும் நீ உன் அம்மாவை அழைத்துகொண்டு வீட்டை விட்டு வெளியே செல்லலாம்.என்று கூற,சுமதிக்கு புரிந்தது அம்மாவின் தியாகமும்,அப்பாவின் நண்பரின் உதவும் குணமும்.உண்மை அறியாமல் யாரையும் வெறுக்க கூடாது என்பதை புரிந்து கொண்டாள்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract