Vadamalaisamy Lokanathan

Others

4  

Vadamalaisamy Lokanathan

Others

யுத்தம்

யுத்தம்

2 mins
301



யுத்தம்

ராஜவர்மன் அவசரமாக தன்னுடைய அமைச்சர்களை அழைத்து முக்கிய ஆலோசனையில் இருந்தான்.

பக்கத்து நாட்டு மன்னன் இமயவரம்பன் எந்த காரணமும் இன்றி தான் நாட்டின் மீது யுத்தத்தை தொடங்கி இருந்தான்.

ராஜவர்மன் இப்போது போர் புரியும் நிலையில் இல்லை.

படைபலம் போதிய அளவு இருந்தாலும்,இப்போது தான் விவசாய நிலத்தில் அறுவடை தொடங்கி இருந்தது.

போர்வீர்கள் கொஞ்சம் பேர் அறுவடையாகும் தானியங்களுக்கு காவலாக வயல் வெளியில் இருந்தார்கள்.திருட்டு போகும் என்ற பயம் அல்ல.ஒவ்வொரு நெல் மணிகளும் சேதாரம் இன்றி தானிய கிடங்குக்கு வந்து சேர வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் போதிய மழை இல்லாத காரணத்தால் விவசாயத்தில் எதிர்பார்த்த மகசூல் இல்லை.இருந்த தானிய இருப்பை சமமாக மக்களுக்கு பங்கிட்டு கொடுத்து உணவு பஞ்சம் வராத அளவிற்கு பார்த்து கொண்டான்.

பொது மக்கள், அல்லாது முப்படைகளில் உள்ள யானை,குதிரை,ஒட்டகம் போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு பசியாற உணவு கொடுப்பது,தலையாய கடமை.

இந்த வருடம் அறுவடை செய்யும் தானியங்கள் கிடங்கு வந்து சேர்ந்து விட்டால்,அடுத்த இரண்டு வருடங்களுக்கு கவலை இல்லாமல் இருக்கலாம்.


போன வருடமே,இமயவரம்பன் உணவு தானியங்கள் கேட்டு ஒலை அனுப்பி இருந்தான்.தன்னுடைய தேவைக்கு மிஞ்சி இல்லாத காரணத்தால் அவனுடைய வேண்டுகோளை நிராகரித்து விட்டான்.

இப்போது அறுவடை தொடங்கி விட்டதால்,இப்போது அவனால் மூன்று மாதங்களுக்கு தேவையான உணவு பொருளை கொடுக்க முடியும்.

ஆனால் அவன் என்ன தேவைக்கு போர் தொடுத்து உள்ளான் என்று தெரியவில்லை.

ராஜ வர்மன் எளிதில் போருக்கு போக மாட்டான்.

அவனுக்கு தெரியும் அதன் இழப்பு எவ்வளவு இருக்கும் என்று.

பெண்ணாசை , பொன்னாசை மண்ணாசை இந்த மூன்று காரணங்கள் தான் போர் மூள காரணம்.


அமைச்சர் அவை கூட்டத்தில் ஒற்றர் செய்து ஏதாவது உண்டா என்று வினவ,அப்படி செய்தி எதுவும் வந்த மாதிரி தெரியவில்லை என்று தான் அவனுக்கு சொன்னார்கள்.

இமயவரம்பனை நேரில் சந்தித்து சமாதானம் பேச மூத்த அமைச்சரை அனுப்ப முடிவு செய்து தன் முடிவை சொல்ல,அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது.

என்ன இது போர் வந்தால் எதிர்த்து போரிடுவதை விட்டு விட்டு எப்போதும் ராஜா சமாதான தூது விட்டு கொண்டு இருக்கிறார் என்று.

எதிராளியின் தேவை,பணம்,அல்லது உணவு பொருளாக இருக்கும் பட்சத்தில் அதை கடனாக அல்லது உதவியாக கொடுத்து விட்டால்,உயிர் சேதத்தை தடுக்க முடியும்.அவசியம் இல்லாமல் ஒரு உயிர் போவது அவனுக்கு பிடிக்காது.


இந்த நிலையில் ஒரு ஒற்றன் வந்து,இமயவரம்பன்,உணவு பொருள் தேடி போர் தொடுத்து இருக்கிறான் என்ற செய்தியை சொல்ல, ராஜவர்மன், தானே சென்று சமாதானம் பேசுவதாக சொல்ல,வேண்டாம் நானே செல்கிறேன் என்று மூத்த அமைச்சர் தூது புறப்பட்டு சென்றார்.

போர் வேண்டாம்,உணவு தானியங்கள் அனுப்பி வைக்கிறோம் என்று சொன்ன பிறகு இமயவரம்பன்

போரை நிறுத்தி விட்டு சமாதானம் பேச ராஜவரமனை சந்திக்க அமைச்சருடன் அரண்மனைக்கு வந்தான்.

ராஜவரமன் சாதுரியமாக போரை நிறுத்தி,உயிர் பலியை தவிர்த்து,இமயவரம்பன் கேட்ட உதவியை செய்து கொடுத்து மகிழ்ச்சி ஆக அனுப்பி வைத்தான்.


இதற்காக வரும் காலங்களில் போர் வேண்டாம்,அண்டை நாட்டுடன் சமாதான மாக இருப்போம் என்று இருவரும் ஒப்பு கொண்டனர்.

முற்றும்.


Rate this content
Log in