Vadamalaisamy Lokanathan

Tragedy

4  

Vadamalaisamy Lokanathan

Tragedy

மார்கழி மாத குளிர்

மார்கழி மாத குளிர்

3 mins
22


மார்கழி மாத குளிர்,நடுங்க வைத்துக்கொண்டு இருந்தது.

ஊட்டியில் அது இன்னும் மோசமாக இருந்தது.

வருண்,பஸ்ஸில் வந்து இறங்கியவன் குளிர் தாங்காமல் தவித்தான்.ஏதோ ஒரு தைரியத்தில் பஸ்ஸில் இரவு பத்து மணிக்கு ஏறி அதிகாலை ஊட்டி வந்து சேர்ந்து விட்டான்.குளிரை தடுக்கும் எந்தவித உடையும் அவன் வசம் இல்லை.

கையில் சில நூறு ரூபாய்கள் தவிர.

பஸ்சை விட்டு இறங்கியதும் குளிர் தாங்காமல் நடுங்கினான்.ஒதுங்க கூட நல்ல இடம் இல்லை.அறை எடுத்து தங்க அவனிடம் பணம் இல்லை. மாற்று உடை கூட இல்லாமல் தான் வந்து இருந்தான்.அப்படி என்ன நெருக்கடி அவனுக்கு…

பஸ் ஸ்டாண்டு வெளியே,சில பேர்,குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் வட்டமாக அமர்ந்து நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து கொண்டு இருந்தார்கள்.

கம்பளி கோட், குல்லா அணிந்துமே அவர்களால் அந்த குளிரை தாங்க முடியாமல் நெருப்பின் அருகே அமர்ந்து குளிர் காய்ந்து கொண்டு இருக்க, வருண் அந்த கூட்டத்தை நோக்கி நடந்தான்.ஆனால் அவன் அங்கு உட்கார இடம் இல்லை.ஒரு டிரைவருக்கு சவாரி வர,அந்த இடத்தில் இவன் அமர்ந்தான்.

குளிருக்கு எந்த ஏற்பாடும் இல்லாமல் வந்து இருக்கும் அவனை பார்த்து,அக்கறையோடு விசாரிக்க,

எந்த முன்னேற்பாடு இல்லாமல் அவசரமாக வர காரணம் என்ன,ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.

அவனுக்கு உதவி தேவை பட்டது,ஆனால் அதை அவர்களால் கொடுக்க முடியாது.கூட்டத்தில் அவனை துருவி துருவி கேட்க,வேறு வழியில்லாமல், தன் கதையை சொல்ல தொடங்கினான்.

கோவையில் பிரபல பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தான்.நன்றாக படிப்பான்.மேடைப்

பேச்சில் வல்லவன்.அவனுடைய திறமையை பார்த்து,ஷோபா அவன் கூட படிக்கும் மாணவி,அவனுடைய நட்புக்கு பாத்திரமானாள்.

ஆறு மாத கால நட்பில்,அவனை காதலிப்பதாக கூறினாள்.

வருண் அதை சட்டை செய்யாமல், தன் படிப்பில் கவனமாக இருந்தான்.

கல்லூரி வாழ்க்கையில் இது சகஜம் என்று அவனுக்கு முன்பு படித்த சில நண்பர்கள் சொல்லி இருந்தார்கள்.

மேலும் அவன் ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து வருகிறான்.படிப்பு முடிந்த வேலைக்கு சேர்ந்து,சம்பாதித்து படிப்புக்கு வாங்கிய கடனை திருப்பி அடைக்க வேண்டும்.பொறுப்பு நிறைய இருந்ததால் காதல் அவனை ஈர்க்கவில்லை.

ஆனால் ஷோபா விடுவதாக இல்லை.வாழ்ந்தால் உன்னோடு தான் என்று கூறிக்கொண்டு இருந்தாள்.மேலும் அவள் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவள்,பல டீ எஸ்டேட் களுக்கு அவள் ஒரே வாரிசு.

வருண் எவ்வளவு மறுத்தும் அவள் ஒரே பிடியாக அவனைத்தான் திருமணம் செய்வேன் என்று சொல்லி கொண்டு இருந்தாள்.


இவ்வளவு பிடிவாதமாக அவள் இருப்பதை பார்த்து,அவனுக்கும் மனம் லேசாக சஞ்சல பட தொடங்கியது.அதன் விளைவு,முதல் மாணவன்,இப்போது அரியர் வைக்கும் அளவிற்கு படிப்பில் கவனம் குறைந்தது.

கல்லூரி படிப்பு முடிந்தது, வருண் படிப்பில் கோட்டை விட,அவனுடைய எதிர்காலம் கேள்விக்குறி ஆகியது.

கல்லூரியில் கடைசி நாள்,ஷோபாவிடம், நாம் எப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்க,அவள் திருமணமா,நீ இன்னும் வேலைக்கே போகவில்லை,வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த முடியுமா,

ஆறு மாதம் அவகாசம்எடுத்துக்கொள்,நல்ல வேலைக்கு சேர்ந்த பிறகு சொல்,நான் பெற்றோரிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள அனுமதி வாங்குகிறேன்.ஒரு நாள் தாமதித் தாலும்,நான் வேறு திருமணம் செய்து கொள்வேன், என்று கூறி விட்டாள்.

அவன் இவளுடைய காதலில் மயங்கி, இறுதி ஆண்டு தேர்வு,எழுதாமல் பாக்கி வைத்து இருந்தான்.இன்னும் இரண்டு வருடம் முயற்சி செய்தால் தான் அவன் அதை முடிக்க முடியும்.

இப்போது அவள் இப்படி சொன்னது,அவள் அவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்த மாதிரி உணர்ந்தான்.

அவனுடைய நண்பர்கள் எச்சரித்தும்,அதை அவன் சட்டை செய்யவில்லை.அதன் பலனை இப்போது அனுபவிக்கிறான்.

அவள் ஏதோ நாடகம் ஆடுகிராள்,நம்பாதே, உன்னை தேர்வு எழுத விடாமல் ஏதோ சதி நடக்கிறது,கவனமாக இரு என்று நண்பர்கள் சொன்னது இவன் காதில் விழவில்லை.

உண்மையில் அது தான் நடந்து இருக்கிறது.அவன் படிப்பை கெடுக்க அவளும்,அவனுடைய பணக்கார நண்பனும் பந்தயம் கட்டி,அவன் படிப்பை கெடுக்கிரேன் என்று அவள் அவனிடம்,சவால் விட்டு சாதித்து காட்டி விட்டாள்.அவர்களை பொறுத்த வரை அவர்களுக்கு அது விளையாட்டு.ஆனால் வருணுக்கு?

வாழ்வாதாரம் ஆட்டம் கண்டு விட்டது.

படிப்பிற்கு வாங்கிய கடனை கட்ட முடியாமல்,அவனுடைய பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

வருணுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது,அவர்களுடைய விளையாட்டில் ஏமாந்து விட்டோமே,,நண்பர்கள் எச்சரித்தும்,கண்டுகொள்ளாமல் விட்டு,இப்போது ஏமாந்து நிற்பது அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.,வந்த ஆத்திரத்தில் அவளை கழுத்து நெரித்து கொல்ல வேண்டும் போல இருந்தது.அவள் ஊட்டியில் கணவனுடன் வாழ்ந்து வருவதை அறிந்து,அவளை தேடி கொல்ல வந்து இருக்கிறான்.

அவன் கதையை கேட்ட அந்த டிரைவர்கள்,அவனை பார்த்து பரிதாபமாக சிரித்தார்கள்.எப்படி அவளை கண்டு பிடிப்பாய்,விலாசம் இருக்கா என்று அவர்கள் கேட்க,,அவன் விலாசத்தை கண்பித்தான்.ஆனால் அவர்கள் யாரும் அவனை அங்கு அழைத்து போக,தயாரில்லை.

சற்று விடிந்ததும் அவன் விலாசத்தை விசாரித்துக் கொண்டுஅந்த இடத்தை நோக்கி நடந்தான்.

அப்போது அந்த டிரைவர்கள் பேசிக்கொண்டனர்,இவன் ஒரு நாள் தாமதமாக வந்து விட்டான் என்று.

அவளுக்கு வாழ்க்கையில் மற்றவர்களை சீண்டி பார்ப்பது ஒரு விளையாட்டாக செய்து கொண்டு இருந்தாள். வருண் அதில் பத்தாவது ஆள்.

நேற்று தான்,அப்படி பாதிக்க பட்ட ஒருவன்,அவளுடைய வீடு புகுந்து வெட்டிக்கொன்று விட்டான்.இன்னும் அவளுடைய பிணம் கூட பிரேத பரிசோதனை முடித்து வீடு வரவில்லை.

வருண் என்ன செய்யப்போகிறான்.

இறுதி அஞ்சலி செலுத்த வானா இல்லை, வெட்டு பட்ட அவளது உடலை இவன் மீண்டும் வெட்டுவானா.

என்று அந்த டிரைவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.



Rate this content
Log in

Similar tamil story from Tragedy